Bigg Boss Meera Mithun: பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியின் சர்ச்சைக்குரிய போட்டியாளரான மீரா மிதுன் வீட்டை விட்டு வெளியேறி சில நாட்கள் ஆகிவிட்டன. ’8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் மற்றும் போதை ஏரி புத்தி மாறி’, ஆகியப் படங்களில் நடித்துள்ள மீரா, தனது சக போட்டியாளர்கள் மற்றும் பிக் பாஸ் வீட்டில் இருந்த அனுபவம் குறித்து நம்மிடம் பகிர்ந்துக் கொண்டார்.
உண்மையான உலகத்திற்கு வந்ததற்குப் பிறகு என்ன நினைக்கிறீர்கள்?
என்னைப் போன்று பலர் இருக்கும் உண்மையான உலகத்திற்கு திரும்பி வந்து விட்டேன். உண்மையாகவே நான் இங்கு மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருக்கிறேன்.
கடந்த வாரம் உங்கள் மனநிலை எப்படி இருந்தது?
எதோ நடக்கப் போகிறது என்பதை வெள்ளிக்கிழமையே உணர்ந்தேன். நான் தான் இந்த வாரம் வெளியேற்றப்படுவேன் என்று சாண்டியிடம் நான் சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது. ஆனால் அவர் (சாண்டி) என் வார்த்தைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ரகசிய அறையில் தங்க எனக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். நான் அங்கே தங்குவதற்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தேன். நமக்கான அறையில் இருந்துக் கொண்டு மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்ப்பது வேடிக்கையான ஒன்று தானே?
வருத்தம் ஏதும் இருக்கிறதா?
நான் அவற்றை பாடங்கள் என நினைக்கிறேன். நான் மிகவும் வெளிப்படையாக எல்லா விஷயத்தையும் பேசினேன், இதை மக்கள் விரும்பவில்லை. ஆனால் அதுதான் நான். மற்றவர்களுக்காக என்னை நான் மாற்றிக் கொள்ள முடியாது. உண்மையை தெரிந்துக் கொள்ளாமல் எதிலும் விரைவாக தீர்ப்பளிக்கிறார்கள். என்னை இப்படி ”வெளிப்படையாக இருக்க வேண்டாம்” என சாண்டி சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால் எப்படியும் அந்த வீட்டில் 100 நாட்கள் நான் தங்குவேன் என நினைத்தேன்.
மீரா மிதுன் - சேரன்
அந்த டாஸ்க்கின் போது உங்களுக்கும் சேரனுக்கும் என்ன தான் நடந்தது?
சேரன் என்னுடன் தவறாக நடந்து கொண்டதாக நான் ஒருபோதும் சொல்லவில்லை. நான் அப்படி சொன்னேனா? அவர் என்னை கையாண்ட விதம் தவறு. நான் அப்போது குழப்பமாக உணர்ந்தேன். இந்த விஷயம் ஏன் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது என எனக்குத் தெரியவில்லை. நாங்கள் ஒரு டாஸ்க்கில் ஈடுப்பட்டிருக்கும் போது, அங்கு நான் வேறு வித சூழலை உருவாக்க விரும்பவில்லை. அந்த என்ஜாய்மெண்டை நான் கெடுக்க விரும்பவில்லை.
குறும்படம் ஒளிபரப்பப்பட்ட போது உங்கள் தரப்பு நியாயத்தை ஏன் கமலிடம் விளக்கவில்லை?
அது பயனற்றது என்று எனக்குத் தெரியும். மற்றவர்களின் கவனத்தை திசை திருப்பி ஒரு பெரிய நாடகத்தை சேரன் நடத்தினார். ஆனால் அதற்கான கர்மாவை அவர் ஒருநாள் எதிர்கொள்வார்.
இதனை ஆங்கிலத்தில் படிக்க - I never said Cheran misbehaved with me: Meera Mithun