கன்டென்ட் முக்கியமா? சைலன்ட்டா ஜெயிக்கணுமா? – பிக் பாஸ் போட்டியாளர்கள் என்ன செய்கிறார்கள்?

Bigg Boss Tamil 5 Contestants Character People thoughts Tamil News வாயைத் திறந்தாலே கன்டென்ட்டாக தான் இருக்கவேண்டும் என்று 3 வருடமாகத் தன்னை தயார்செய்து வந்ததுபோல இருக்கிறது அபிஷேக் பெர்ஃபாமன்ஸ்.

Bigg Boss Tamil 5 Contestants Character People thoughts Tamil News
Bigg Boss Tamil 5 Contestants Character People thoughts Tamil News

Bigg Boss Tamil 5 Contestants Character People thoughts Tamil News : பெரும்பாலான தமிழ்நாட்டு மக்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே, போட்டியாளர்களைப் பற்றிய எதிர்பார்ப்பு மக்களிடத்தில் அதிகமாக இருந்தன. ஆனால், வழக்கமான பேட்டர்னை விட்டு வெளியே வந்து, இம்முறை இளைஞர்களின் பங்கு அதிகமாக உள்ளது.

அதனால், பல சுவாரசிய விளையாட்டுகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது பிக் பாஸின் டாஸ்க்காகவும் இருக்கலாம் அல்லது போட்டியாளர்களுக்குள்ளேயே ஏற்படும் ஸ்ட்ராடஜியாகவும் இருக்கலாம். பொதுவாக நிகழ்ச்சியின் முதல் நாள், 16 போட்டியாளர்களைத்தான் காலத்தில் இறங்குவார்கள். ஆனால், இம்முறை 18 பேர் ஆரம்பத்திலேயே களத்தில் உள்ளனர். அதிலும், பாதிப் பேர் அறிமுகமில்லாத முகங்கள்.

இதனால், சுவாரசியம் குறையுமோ என்கிற சந்தேகம் எல்லோரிடமும் இருந்தது. ஆனால், நேற்றைய எபிசோட், நிச்சயம் சுவாரஸ்யமானதாகவே இருக்கும் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறது. அப்படி வீட்டிற்குள் இருப்பவர்களில் கன்டென்ட் கொடுக்கும் நாயகர்கள் யார், ஷோகேஸ் பொம்மைகளாக யாரெல்லாம் இப்போது வரை இருக்கின்றனர் என்பதைப் பார்க்கலாமா?

கன்டென்ட் முக்கியம் பாஸ்:

சந்தேகமே வேண்டாம். மக்கள் ரசிக்கும்படியான கன்டென்ட் என்ன, வெறுக்கும்படியான கன்டென்ட் என்ன என்பதைத் தெளிவாகப் புரிந்து வைத்துக்கொண்டு நிகழ்ச்சிக்கு என்ட்ரியாகி இருக்கும் விஜய் டிவியை சேர்ந்தவர்கள்தான் இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்தவர்கள். ஆம், பிரியங்கா மற்றும் ராஜுதான். இருவரும் வந்த முதல் நாளிலிருந்து ஏராளமான கன்டென்ட்டுகளை கொடுத்து வருகின்றனர். இவர்கள் வரிசையில் அபிஷேக் இணைந்திருக்கிறார். சும்மாலாம் வாயைத் திறக்கக் கூடாது. வாயைத் திறந்தாலே கன்டென்ட்டாக தான் இருக்கவேண்டும் என்று 3 வருடமாகத் தன்னை தயார்செய்து வந்ததுபோல இருக்கிறது அபிஷேக் பெர்ஃபாமன்ஸ்.

இப்போ நான் என்ன சொல்றது பாஸ்?

கன்டென்ட்டெல்லாம் பெருசா கொடுக்க வேண்டாம். தன்னைப்பற்றி உலகம் தெரிந்துகொண்டால் போதும் என்கிற நோக்கத்தோடு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நுழைந்திருப்பவர்கள் லிஸ்டில் ஜெர்மனியில் இருந்து வந்த மதுமிதா, மலேசியாவிலிருந்து வந்த நடியா சங் ஆகியவர்களை சொல்லலாம். இதுவரை வந்த எபிசோடுகளில் தங்களைப் பற்றி அதிகம் பகிர்ந்துகொள்ளாதவர்கள் இவர்கள். தன்னுடைய பார்வையை முன் வைப்பதில் தயக்கம் காட்டுகிறார்கள். மொழி பிரச்சனை காரணமாக இருந்தாலும், முன்னாள் போட்டியாளர் ஐஸ்வர்யா போன்று இவர்களும் வெடித்துச் சிதறுவார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். இந்த லிஸ்டில் தாமரை செல்வியும் இருக்கிறார். சாமானிய மனிதராக இருந்து, இதுபோன்ற சூழ்நிலை நிச்சயம் அவருக்குப் புதிதாகவும் சவாலாகவும் இருக்கும். மேலும், பழகுவதற்கும் நேரம் எடுக்கலாம்.

கவலையை விடுங்க பாஸ்

எப்போதும் பட்டாம்பூச்சி போல சிறகடித்துப் பறந்துகொண்டிருக்கும் இந்த லிஸ்டில் சுருதி, அக்ஷரா, ஐக்கி பெரி, இசைவாணி ஆகியோர் உள்ளனர். போர் அடித்தால் பாடுவது, ஓடிப்பிடித்து விளையாடுவது என்று மிகவும் ஜாலியாக தங்களின் பொழுதை இப்பொழுது வரை இவர்கள் நால்வரும் கழித்துக்கொண்டிருக்கின்றனர். இந்த லிஸ்டில் நிரூப்பையும் சேர்த்துக்கொள்ளலாம். வந்த முதல் நாளே, குடையை வைத்து விளையாடி அதனை உடைத்ததையெல்லாம் என்னவென்று சொல்ல!

பி சீரியஸ் பாஸ்

எந்நேரமும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருப்பவர்களுடைய பட்டியல்தான் இது. இதில், சின்னப்பொண்ணு மற்றும் நமிதா இருக்கின்றனர். கலகலப்பான பேச்சுவார்த்தைகளிலோ அல்லது ஆட்டம், பாட்டம் கொண்டாட்டங்களிலோ பெரிதாக ஈடுபடாமல், பட்டும் படாமல் நகர்ந்துகொண்டிருக்கின்றனர் இவர்கள் இருவரும். அவ்வப்போது சில காமெடிகளை தூவினாலும், லூஸ் டாக் வந்துவிடக்கூடாது என்று இமான் அண்ணாச்சி மிகவும் இறுக்கமாக இருப்பதுபோல் தெரிகிறது. அந்தத் தடையை உடைத்து வெளியே வந்தால் நன்றாக இருக்கும்.

கொஞ்சம் பொறுங்க பாஸ்

ஆடுங்க, ஆடுங்க. உங்கள் ஆட்டம் எதுவரை செல்கிறது என்பதைப் பார்த்துவிட்டு சரியான நேரம் பார்த்து என்ட்ரி கொடுக்கிறோம் என்பதுபோல, வீட்டில் உள்ளவர்களைப் படித்துக்கொண்டிருக்கின்றனர் இந்த லிஸ்டில் உள்ளவர்கள். அவர்கள்தான் சிபி, வருண், பாவனி மற்றும் அபிநய் கூட்டணி. இவர்களில் சிபி மற்றும் பாவனி மிகவும் கவனமாக விளையாடுவதாகத் தெரிகிறது. அவர்களுடைய ஆட்டம் ஆரம்பித்தால், நிச்சயம் இந்த சீசன் பிக் பாஸ் வேறு பரிமாணத்திற்குச் செல்லும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss tamil 5 contestants character people thoughts tamil news

Next Story
Bigg Boss Promo: சண்ட ஆரம்பிக்க போகுது வீட்ல… 4-வது நாளே இப்படியா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X