Bigg Boss Tamil 5 Contestants Full List: கிளாமர் குயின், சண்டைக் கோழி, ரொமான்ஸ் ஹீரோ… யார் யாருக்கு என்ன ரோல்?

Bigg Boss Tamil 5 Contestants Full List and Expectations Tamil News 100 நாட்கள் ஒரே வீட்டில் இசைவாணியின் பயணம் எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பார்க்கப் பலரும் ஆவலோடு இருக்கின்றனர்.

Bigg Boss Tamil 5 Contestants Full List and Expectations Tamil News
Bigg Boss Tamil 5 Contestants Full List and Expectations Tamil News

Bigg Boss Tamil 5 Contestants Full List and Expectations Tamil News : ‘இவங்கல்லாம் யாரு?’ என்கிற மைண்ட் வாய்ஸ்தான் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்த பலருக்கும் ஏற்பட்டிருக்கும். எப்போதும் இல்லாத வகையில் இம்முறை ஏராளமான புது முகங்கள். புதிய திறமை வாய்ந்தவர்கள் என்றும் சொல்லலாம். அதனால், பார்ப்பதற்கும் புதுமையாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்றாலும், பல்வேறு தரப்பினரிலிருந்து வந்திருப்பதால், வேற்றுமையில் ஒற்றுமை காண்பார்களா அல்லது மற்ற சீசன்களை போல ஒருவருக்கொருவர் புரளி பேசிக்கொண்டு குழாயடி சண்டைகள் நடைபெறுமா என்பது போகப்போகத் தெரிந்துவிடும். அது என்ன வேற்றுமையில் ஒற்றுமை என்று கேட்பவர்களுக்கு ஒரு சின்ன ரீவைண்ட்.

முதல் சீசனில் அனைவரும் பிரபலங்களாக இருக்க, ஜூலி மட்டுமே சாமானியர்களில் ஒருவராகப் பங்குபெற்றார். அடடா! இதனைப் பிரபலங்களுக்கு நடுவே நாம் யாரோடு இணைந்திருப்பது என்கிற குழப்பத்திலேயே அவருடைய நற்பெயரைப் போன வேகத்திலேயே கெடுத்துக்கொண்டார். அவரைத் தொடர்ந்து பிரபலங்களை மட்டுமே தொடர்ந்து போட்டியாளராகப் பங்குபெற்றனர். ஆனால், இம்முறை அப்படியே நிலைமையே வேறு. பிரபலங்களும், அவ்வளவாகப் பரீட்சையமில்லாதவர்களும் சரிக்கு சரியாக இருக்கின்றனர்.

இந்த நிலை எங்குச் சென்று முடியும் என்கிற குழப்பம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. பிரபலங்களோடு வளர்ந்து வரும் கலைஞர்கள் எந்த அளவிற்கு ஒத்துப்போவார்கள் என்பது கேள்விக்குறியே. அதிலும், சென்ற சீசனில் பிரபல நாட்டுப்புற கலைஞரான வேல்முருகன் பங்குபெற்று, எவ்வளவு அடி வாங்கினார் என்பது அனைவரும் அறிந்ததே. நற்பெயரோடு வெளியே வந்தாலும், வீட்டிற்குள் அவர் பட்ட பாடு கொஞ்சம் நஞ்சம் இல்லை. வேல்முருகனைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்வதற்குள் அவர் வெளியேற்றப்பட்டார்.

அவரைப்போன்ற கலைஞர்கள் பட்டியலில் இம்முறை தாமரை செல்வி மற்றும் சின்னப்பொண்ணு இருக்கிறார்கள். சின்னப்பொண்ணு ஏற்கெனவே பரீச்சையமானவர் என்றாலும், தாமரை செல்வி முற்றிலும் புது முகம். கிராமத்து மனம் வீச இந்த நிகழ்ச்சிக்குத் துணிவோடு வந்திருக்கிறார். மாடல் அழகிகள் நிறைந்திருக்கும் இந்த வீட்டில், இருக்கும் இடம் தெரியாமல்தன் நாட்களை அமைதியாக நகர்த்துவாரா அல்லது தன் தனித்திறமையை உலகறிய செய்வாரா என்பதை இனி வரும் நாட்களில் பார்க்கலாம்.

தனி இசைக்கலைஞரான ஐக்கி மீதும் ஏகப்பட்ட கண்கள். மூன்றாம் சீசனில் தனி இசைக்கலைஞரான முகேன் ராவ், அந்த சீஸனின் டைட்டில் வின்னரும் கூட. அவரைப்போன்ற கலைஞர்தான் ஐக்கி. முகேன் போல, ஐக்கியும் மக்கள் மனதை வெல்வாரா?

பாடகர்கள் லிஸ்டில் அடுத்தபடியாக கானா பாடகி இசைவாணி இருக்கிறார். என்னதான் சாண்டி, கவின் ஆகியவர்கள் கானா பாடல்களை பாடி என்டெர்டெயின் செய்தாலும், இசைவாணியின் என்ட்ரி பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறது. கானா பாடல்கள் என்றாலே குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு அடையாளமாக இன்று வரை இருக்கிறது. இந்த இசைக்கலைஞர்களோடு பயணிக்கப் பலரும் இன்றும் கூட யோசிப்பது உண்டு. ஆனால், 100 நாட்கள் ஒரே வீட்டில் இசைவாணியின் பயணம் எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பார்க்கப் பலரும் ஆவலோடு இருக்கின்றனர்.

இந்த ஆண்டு கிளாமர் என்கிற விஷயத்துக்குப் பஞ்சமே இருக்காது. ஆம், ஒன்றா இரண்டா மொத்தம் ஐந்து மாடல்களை இறங்கியுள்ளனர். அவர்களில் திருநங்கை மாடலும் ஒருவர். அவர்தான் கொஞ்சம் பரீட்சையமானவரும்கூட. நமிதா, நடியா சங், மதுமிதா, சுருதி மற்றும் அக்ஷரா என உள்ளூர் முதல் சர்வதேச மாடல் அழகிகள் வரை இந்த சீசனில் உள்ளனர். பொதுவாகவே தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாடல்களுக்கு அதிக முன்னுரிமை உண்டு என்றாலும், இம்முறை ஆண் மாடல்கள் யாருமில்லை. ரைசா, அபிராமி, சனம் ஷெட்டி, சம்யுக்தா ஆகியவர்களின் வரிசையில் இந்த சீசனில் 5 மாடல்கள் இடம்பெற்றுள்ளது ஏன் என்கிற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

சென்ற சீசனில் நிகழ்ச்சி தொகுப்பாளினிகள் அர்ச்சனா, நிஷா ஆகியோர் வேற லெவல் நெகட்டிவ் பெயர்களோடு வெளியே சென்றனர். அந்த வரிசையில், அர்ச்சனாவை தன்னுடைய குரு என்று எப்போதும் முன்னிலைப்படுத்தும் பிரியங்கா இந்த சீசனில் களமிறங்கியிருக்கிறார். தன்னுடைய குருவை போல பெயரைக் கெடுத்துக்கொண்டு வருவாரா அல்லது நல்லபடியாகத் திரும்பிவருவாரா என்கிற எதிர்பார்ப்பு இவர் மீது அதிகம் உள்ளது. அடுத்தபடியாக, நிகழ்ச்சி தொகுப்பாளர் இமான் அண்ணாச்சி. நகைச்சுவை உணர்வு அதிகம் இருக்கும் இவர், கஞ்சா கருப்பு போன்று சுவாரசிய கன்டென்ட்டுகளை கொடுத்தால், சிறப்பு.

அடுத்ததாக மஹத், கவின் ஆகியோர்களின் வரிசையில் இளம் நடிகர்களான ராஜு, அபிநய், வருண், சிபி, நிரூப் ஆகியோர் இருக்கின்றனர். ஆண் மாடல்கள் இல்லாத குறையை இவர்கள் தீர்த்து வைத்திருக்கிறார்கள் எனலாம். என்றாலும் இவர்கள் யார் பற்றியும் அவ்வளவாக மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதுதான் நிதர்சனம். திரையில் நாயகனாக மட்டுமில்லாமல் உண்மை வாழ்க்கையிலும் நாயகனாக மக்கள் மனதில் இடம் பிடித்த ஆரியின் பாதையை இவர்கள் பின்பற்றலாம் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.

இவர்களுடன் சின்னத்தம்பி, ரெட்டை வால் குருவி உள்ளிட்ட சீரியல்கள் மூலம் நன்கு பரீட்சையமான சின்னத்திரை நாயகி பாவனி மீதும் மக்களிடத்தில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், எப்போதும் இல்லாத வகையில் முதல் முறையாக ஓர் யூடியூபரையும் களமிறக்கியிருக்கிறது பிக் பாஸ். எப்போதுமே தனக்கு எல்லாம் தெரிந்தது போல பேசிக்கொண்டிருக்கும் இவர், எந்த அளவிற்கு கன்டென்ட் கொடுப்பர் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் மக்கள். பலருடைய திரைப்படங்களை விமர்சனம் செய்த இவர் எந்த அளவிற்கு இவர் மீது எழும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வார் என்பதைப் பார்க்கலாம்.

இவர்களில் உங்கள் ஃபேவரைட் போட்டியாளர் யார்? யாருக்கெல்லாம் ஆர்மி எழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss tamil 5 contestants full list and expectations tamil news

Next Story
Bigg Boss Tamil 5: எல்லோரும் அண்ணாந்து பாக்குறாங்க… யாரு இந்த 8 அடி உயர நிரூப்?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com