இப்படி பிரியங்காவை மட்டும் காப்பாற்றுவது தவறு பிக் பாஸ்!

Bigg Boss Tamil 5 Day 45 Review Priyanka Raju Pavani Annachi Isiavani ஆனால், எதற்கும் ராஜு ரியாக்ட் செய்யாமல் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

Bigg Boss Tamil 5 Day 45 Review Priyanka Raju Pavani Annachi Isiavani
Bigg Boss Tamil 5 Day 45 Review Priyanka Raju Pavani Annachi Isiavani

Bigg Boss Tamil 5 Day 45 Review Priyanka Raju Pavani Annachi Isiavani : கடந்த இரண்டு நாள்களாகக் கண்ணாடி டாஸ்க் மூலம் வீட்டில் எதிரும் புதிருமாக இருந்தவர்கள் அடித்துக்கொள்வார்கள் அல்லது சேர்ந்துவிடுவார்கள் என்று நினைத்ததெல்லாம் சரிதான். ஆனால், ஒருவரை மட்டும் தெளிவாக காப்பாற்றியிருக்கிறார் பிக் பாஸ். யார் அந்த ஸ்பெஷல் நபர்? பார்ப்போம்…

டிராமாவுக்கெல்லாம் டிராமா என்பதுபோல் நேற்று டிராமா என்று பிரியங்கா சொன்ன வார்த்தைக்குத் தாமரை கண்கலங்கிவிட்டார். அட! இது என்னடா அக்கப்போராக உள்ளது என்று பார்க்கும் நம்மைத் தலையைப் பிய்த்துக்கொள்ள வைத்துவிட்டனர். டாஸ்க் ஆரம்பித்தும், இசைவாணி அண்ணாச்சியின் பிம்பமாக மாறாமல் இருந்ததால், அவருடைய பேட்ச் ஒன்றை அண்ணாச்சியிடம் கொடுத்தார் இசை. இதனால், இந்த டாஸ்க்கின் முதல் பேட்ச் கைப்பற்றியவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரானார் அண்ணாச்சி.

பாத்ரூம் பகுதியில், தாங்களாகவே கற்பனை செய்துகொண்டு ட்ராமாவை அரங்கேற்றிவிட்டு தான் அவற்றைப் பயன்படுத்தவேண்டும் என்று வருணின் ஜாலியான டாஸ்க் உண்மையில் ரசிக்கும்படியாக இருந்தது. ஆம்லெட் முதல் ஆஃப் பாயில் வரை எல்லாவற்றையும் அக்ஷராவுக்கு தூக்கிக்கொடுக்கும் அபிநய் தனக்கு எதையும் கொடுப்பதே இல்லை என்று அண்ணாச்சியிடம் புலம்பிக்கொண்டிருந்த நிரூப்பை என்னவென்று சொல்வது. இப்படி ஏமாந்த புள்ளையா இருக்கியேப்பா!

அடுத்ததாக பிம்பங்களின் மைண்ட் வாய்ஸ். அந்த வரிசையில், ராஜுவின் நிழலாக இருந்த பாவனி தன் மனதிலிருந்ததை எல்லாம் ராஜுவிட கொட்டி தீர்த்தார். எல்லோருடனும் நல்ல உறவு இருக்கும்போது, ஏன் தன்னை மட்டும் வேறு விதமாக ராஜு பார்க்கிறார், நடத்துகிறார் என்பதை வெவ்வேறு கோணங்களில் பாவனி சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால், எதற்கும் ராஜு ரியாக்ட் செய்யாமல் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

என்றாலும், பாவனியால் ராஜு தன்னை வெறுப்பதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளாமல் பொறுக்கவே முடியவில்லை. மீண்டும் மீண்டும் ராஜுவிடம் அதற்கான காரணத்தைக் கேட்டவரிடம், இது எல்லாத்துக்கும் அந்த 3 சம்பவங்கள்தான் காரணம் என்றபடி விடையைக் கொடுத்தார். ஆனால், ‘அந்த காரணங்களை அப்புறமாக சொல்கிறேன்’ என்று நமக்கும் சேர்த்து ஆல்வா கொடுத்தார். ‘எதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்’ என்கிற கதைதான் போங்க. ஆனாலும், எந்த காரணம் என்றாலும் அதனை ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவமும் தைரியமும் தனக்கு இருக்கிறது என்று பாவனி கூறியது, உண்மையில் ஹாட்ஸ் ஆஃப். இந்த மனநிலை பலரிடம் இருப்பதில்லை. இருந்தால் நல்லது. அது என்னவோ தெரியவில்லை என்ன மாயமோ புரியவில்லை, இந்த வாரம் பாவனியின் கேம் பிளே மிகவும் பாசிட்டிவ்வாக இருக்கிறது.

என்னதான் தவறு செய்திருந்தாலும், அதனை சரியான நேரத்தில் அந்த நபருடன் அமர்ந்து பேசி சண்டைகளை தீர்த்துக்கொள்ளவேண்டும். தவறு செய்யாமல் மனிதர்கள் இல்லை. அதேபோல அதனை சரிசெய்துகொள்ள தயாராக இருப்பவர்களிடம் அதனை எடுத்துரைத்து பிரச்னையை சால்வ் பண்ணலாமே. அந்த சரியான நேரம் ராஜுவிற்கு எப்போது கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம். பாவம் பாவனி!

அடுத்ததாக, திடீரென பழைய ஜோடிகளை அப்படியே மாற்றிவிட்டனர். அதெல்லாம் சரிதான் ஆனால், ப்ரியங்காவிற்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம்? கடந்த வாரம்தான் ஐக்கி மீது கடுப்பாகிக் கொந்தளித்துக் கொண்டிருந்தார் பிரியங்கா. அவரை பிரியங்காவிற்கு ஜோடியாக போட்டிருக்கலாம். ஆனால், சம்பந்தமே இல்லாமல் அண்ணாச்சியையும் ஐக்கியையும் ஏன் கோர்த்துவிட்டார் பிக் பாஸ்? எந்தவித பிரச்சினையும் இல்லாத தாமரை மற்றும் ராஜூவை பிரியங்காவிற்கு ஜோடியாக்கியது ஏன்? இப்படியெல்லாம் பாரபட்சம் பார்க்காதீங்க பிக் பாஸ்!

என்றாலும், ஏற்கெனவே நல்ல புரிதலோடு இருக்கும் தாமரையைப் பற்றி பிரியங்கா தன்னுடைய பார்வையை முன்வைத்தார். அடுத்த ரவுண்டில், ராஜு பிரியங்காவைப் பற்றி வழக்கமான தன்னுடைய பாணியில் சொல்லிருந்தார். ஐக்கி, வருண் பற்றி ஏராளமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார். இப்படி மெதுவாக நகர்ந்துகொண்டிருந்த வேளையில், விளையாட்டிற்காக இசைவாணியின் முகத்தின் முன்பு காலை நீட்டி திட்டுவாங்கிக்கொண்டார் அண்ணாச்சி.

என்னதான் விளையாட்டிற்கு செய்திருந்தாலும், ஏற்கெனவே எலியும் பூனையுமாக இருக்கும் இந்த வேளையில் இதுபோன்ற செயல் நிச்சயம் இசைவாணிக்கு கடுப்பு ஏற்படுத்தும். மேலும், அவர் வேண்டாம் தனக்குப் பிடிக்காது என்று கூறிய பிறகும் அண்ணாச்சி தன்னுடைய காலை முகத்திற்கு முன்பு நீட்டியது எதிர்பாராத ஒன்று. இப்படி அண்ணாச்சி செய்திருக்க வேண்டாம். தவறான செயலும்கூட.இன்றைக்கு என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கிறார்களோ!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss tamil 5 day 45 review priyanka raju pavani annachi isiavani

Next Story
நடிகன் என்பதைவிட தமிழன் என்பதே பெருமை: சத்யராஜ்! பாகுபலி-2 வெளிவர சிக்கல் இல்லை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express