Bigg Boss Tamil 5 Day 50 Review Priyanka Thamarai Kamala Hassan Raju : வெளிநாட்டிற்குச் சென்று வந்ததாகப் பெருமையுடன் கூறிக்கொண்டிருந்த கமல்ஹாசனுக்கு கோவிட் தோற்று ஏற்பட்டிருக்கிறது என்று கேள்விப்பட்டதும், அடுத்த நொடியே பெரும்பாலான பிக் பாஸ் ரசிகர்களுக்கு எழுந்த கேள்வி, இந்த வார இறுதி எபிசோடை யார் ஹோஸ்ட் செய்யப்போகிறார் என்பதுதான். அந்த வரிசையில் சிம்புவாக இருக்குமோ என்கிற கேள்விதான் மக்கள் மனதில் எழுந்துள்ளது. யார் வரப்போகிறார் என்பதை ஒரு வாரம் பொறுத்திருந்து பார்ப்போம். கமல்ஹாசன் நலம் பெற வேண்டும் என்கிற வேண்டுதலோடு நேற்றைய எபிசோடிற்குள் நுழைவோம்.
ராஜுவைப் பற்றி பாவனி மற்றும் அபிநய் டிஸ்கஸ் செய்துகொண்டிருந்த தருணங்களோடு ஆரம்பமானது நேற்றைய எபிசோட். இதனைத் தொடர்ந்து நேரடியாகத் தலைவர் தேர்வுக்கான போட்டி. இந்த பருத்திவீரன் டாஸ்க்கில் விளையாட்டு அதிகமாக இருந்ததோ இல்லையோ, தாமரைக்கும் பிரியங்காவிற்கும் இடையே மோதல் அதிகமாக இருந்தது. இப்படி பிரியங்கா தாமரையிடம் கோபப்படுவதைப் பார்த்தல், ஒருவேளை கடந்த வாரம் 'நிரூப்பெல்லாம் ஒரு நண்பரா' என்று தாமரை பிரியங்காவிடம் உசுப்பேற்றியதன் கோபமாக இருக்குமோ? இதனை மேலும் தூண்டிவிட்டுச் சென்றார் இசைவாணி. ஆம், சென்ற வார முழுவதும் தாமரையுடன் நெருங்கிப் பழகி வந்த பிரியங்காவைப் பார்த்து, 'யாரையும் சீக்கிரம் நம்பி விடாதீர்கள்' என்று கூறிவிட்டுச் சென்றார் இசை. ஒருவேளை இதைப் பிரியங்கா சீரியஸாக எடுத்துக்கொண்டாரோ? என்ன இருந்தாலும், பல சமயங்களில் பிரியங்கா தாமரைக்கு ஆதரவாகவே இருக்கிறார். நட்புன்னா சும்மாவா?
சும்மா சொல்லக்கூடாது, அபிநய் ஜெயிக்க வைக்கவேண்டும் என ஒட்டுமொத்த போட்டியாளர்களும் ஒன்றிணைந்தது பார்ப்பதற்கு அழகு. என்னடா அபிஷேக் குரல் ஒலிக்கவே இல்லையே என்று நினைக்கும் கனத்திற்குள், களத்தில் இறங்கினார். ஆம், அண்ணாச்சிக்கும் வருணுக்கும் இடையே மோதல்கள் வர, அதிகப்படியான வாக்குகளைப் பெற்ற அண்ணாச்சிக்கு எதிராக அபிஷேக் வாதாட, பின்னடைவு அடைந்து போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டார் அண்ணாச்சி. இந்த Rejection-ஐ Recieved என மாற்றி நிகழ்வை பாசிட்டிவ்வாக மாற்றினார்.
இறுதியாக ராஜுவிற்கும் அபிநயிக்கும் கடுமையான போட்டிக்கு இடையே, அபிநய் மந்தார இந்த வாரத்தின் வீட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வாழ்த்துகள் அபிநய். அடுத்ததாக நாமினேஷன் டாஸ்க். வழக்கம்போல அக்ஷரா - பாவனி, வருண் - நிரூப் என ஏற்கெனவே இருக்கும் பகைமையை மனதில் வைத்துக்கொண்டு மாறி மாறி நாமினேட் செய்துகொண்டிருந்தனர். என்றாலும், பிரியங்கா தாமரையை ஏன் நாமினேட் செய்யவில்லை? ஒருவேளை பிறகு வைத்து செய்துகொள்ளலாம் என்கிற என்னமோ!
பிரியங்கா, தாமரை, நிரூப், இமான், பாவனி மற்றும் ஐக்கி நாமினேட் செய்யப்பட, தப்பித்துக்கொண்டார் அபிநய். பிறகு ஆடல், பாடலோடு நேற்றைய தினம் சிறப்பாக நிறைவடைந்தது. பிரியங்கா தாமரை உறவிற்கு நடுவே விரிசல் ஏற்பட்டிருப்பது சரிசெய்யப்படுமா? பார்க்கலாம்...
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil