scorecardresearch
Live

Bigg Boss Tamil 5: நாட்டுப்புற கலைஞர், மாஸ்டர் நடிகர், இமான் அண்ணாச்சி… உள்ளே வந்த எதிர்பாரா பிரபலங்கள்!

Big Boss Tamil Season 3 Live Updates : பிரியங்கா, இமான் அண்ணாச்சி, சின்னப்பொண்ணு, அபிஷேக்… இவங்கதான் பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள்

Bigg Boss Tamil 5 Live : பிக் பாஸ்.. ‘ஆஹா இதற்குத்தானே இத்தனை மாதங்கள் காத்திருந்தோம்’ என்கிற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது. என்னதான் சர்வைவர் எனும் புதுவிதமான ரியாலிட்டி ஷோ களமிறங்கினாலும், பிக் பாஸ் அளவிற்கு சர்ச்சைகள் ஏற்படுத்தும் வகையில் சுவாரசியம் அந்த நிகழ்ச்சியில் இல்லை என்பது ஏமாற்றம். ஆனால், இனி பொதுமக்கள் முதல் யூடியூபர்கள் வரை, அனைவர்க்கும் பேசுவதற்கு ஏதோ ஒரு கன்டென்ட் கிடைக்கப்போகிறது.

முதல் சீசனில் ஓவியா, இரண்டாம் சீசனில் யாஷிகா, மூன்றாம் சீசனில் லாஸ்லியா மற்றும் நான்காம் சீனனில் ரம்யா பாண்டியன் என மக்கள் கவனத்தை ஈர்த்தவர்கள் பட்டியலில் இம்முறை யார் இருக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் உள்ளது. காலையில் எழுந்திருக்க அதிரடி பாடல், சாப்பாட்டு டேபிளில் பஞ்சாயத்து, கன்ஃபெஷன் அறையில் பிக் பாஸுடன் போராட்டம், தூங்கினால் எழுப்புவதற்கு நாய் குரைக்கும் சத்தம், முக்கியமாக புரளிகள் பேசும் ஸ்மோக் ரூம் அட்ராசிட்டி என தினம் தினம் ஏதாவதொரு பரபரப்பு கன்டென்ட் நமக்காகக் காத்திருக்கும்.

இது எல்லாவற்றையும்விட, நிகழ்ச்சியில் இருக்கிறதோ இல்லையோ, ப்ரோமோவில் நான்கைந்து பிட்டு தூக்கலாகப் போட்டு, நம்மை எப்படியும் முழு எபிசோடையும் பார்க்கவைக்கும் அந்த எடிட்டரை நாம் பாராட்டியே ஆகவேண்டும். ‘என்ன பாஸ் இப்படி ஏமாத்துடீங்களே’ என்கிற அளவிற்கு இந்த முழு நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமே அந்த மாபெரும் எடிட்டர் என்று சொன்னாலும் அது மிகையாகாது.

அப்படிதான் ஓவியா-ஆரவ், யாஷிகா-மஹத், லாஸ்லியா-கவின், ஷிவானி-பாலா என இல்லாத காதலை இருப்பதுபோன்று ஒரு கியூரியாசிட்டியை மக்களிடத்தில் கிளப்பிவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் எடிட்டர். அந்த வரிசையில் அவருடைய கண்களில் இந்த சீசனில் சிக்கப்போகும் ஜோடி யார் என்பதை தெரிந்துகொள்வதில் அனைவருக்குமே ஆர்வம் அதிகம்தான்!

நிச்சயம் மாடலிங் துறையைச் சேர்ந்த சிலர், நகைச்சுவைக்காக சிலர், நடிப்புத் துறையை விட்டுச் சென்று ரெஸ்ட்டில் இருக்கும் சிலர், ஆடல் பாடலுக்காக சிலர் என இந்த பேட்டர்னில்தான் போட்டியாளர்கள் இருக்கப் போகிறார்கள். ஆனால், இம்முறை மிலா உள்ளிட்ட மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்களும் போட்டியாளராகக் களமிறங்க உள்ளார்கள் என்கிற வதந்தியும் உள்ளது.

சென்ற நான்கு சீசன் போலவே, உலக நாயகன் தொகுத்து வழங்க கோலாகலமாகத் தொடங்கவிருக்கிறது பிக் பாஸ் தமிழ் சீசன் 5. ஆரவ், ரித்விகா, முகேன் மற்றும் ஆரி வரிசையில், இந்த சீசனில் மக்கள் மனதை வென்று பிக் பாஸ் ஐந்தாம் சீஸனின் டைட்டில் வின்னராக யார் மகுடம் சூட போகிறார் என்பதை 100 நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
23:19 (IST) 3 Oct 2021
எல்லோரும் எப்படி இருக்கீங்க? – ஒலித்தது பிக் பாஸ் குரல்

18 போட்டியாளர்களையும் வரவேற்றபடி தன் முதல் நாள் உரையை தொடங்கினார் பிக் பாஸ். 'ஐம்பூதங்களால் அலங்கரித்துள்ள வீடு வீடு பிடிச்சிருக்கா?' என்று கேள்வி கேட்டவர் 'மகிழ்வித்து மகிழ்' என்பதுதான் நிகழ்ச்சியின் நோக்கம் என்றார். மேலும், இந்த வீட்டில் ஆடலாம், பாடலாம், அரட்டை அடிக்கலாம், விளக்கணைத்ததும் தூங்கலாம். மொத்தத்தில் சந்தோஷமாக இருங்கள், பார்க்கும் மக்களையும் சந்தோஷப்படுத்துங்கள் என்றபடி தன் வாழ்த்துகளையும் தெரிவித்துவிட்டு விடைபெற்றார் பிக் பாஸ். இனி என்னென்ன விளையாட்டு இருக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

23:00 (IST) 3 Oct 2021
விடைபெற்ற கமல்ஹாசன்

அபிஷேக் பிறந்தநாளுக்காக கேக் கட் செய்த பிறகு அகம் டிவி வழியே வீட்டிற்குள் வந்தார் கமல். போட்டியாளர்கள் தங்களிடம் மைனஸாக நினைக்கும் விஷயங்களை பாசிட்டிவாக மாற்றச் சொல்லி அறிவுத்தினார். விரைவில் சந்திக்கலாம் என்றபடி விடைபெற்றார் கமல்.

22:31 (IST) 3 Oct 2021
என் உயரம் பல வாய்ப்புகளை இழக்க வைத்தது – நிரூப்

ஆடிஷன்களுக்கு நேரில் வந்து பார்த்தவர்கள் அனைவரும் என்னுடைய அதிகப்படியான உயர்த்தினால், நிராகரித்துவிடுவார்கள். இந்த பிக் பாஸ் எனக்கான மாற்றத்தைக் கொண்டுவரும் என்று நினைக்கிறேன் என்றபடி வீட்டிற்குள் சென்றார் நிரூப்.

22:20 (IST) 3 Oct 2021
மாஸ்டர் நடிகரின் கூல் என்ட்ரி!

திருநெல்வேலியைச் சேர்ந்த சிபி, மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். கைநிறைய சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர், திரைத்துறையில் சாதிக்கவேண்டும் என்பதற்காக, திரைப் பாதையை தேர்ந்தெடுத்தவர். இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ன செய்ய போகிறார் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் அதிகரித்துள்ளது.

22:02 (IST) 3 Oct 2021
நாட்டுப்புற கலைஞர் தாமரை செல்வி

நாட்டுப் பாடல்களை பாடியபடி மிகவும் வித்தியாசமாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் தாமரை செல்வி. பலரும் அறிந்திடாத விஷயங்களை மிகவும் எளிதாகக் கொண்டுச் சேர்ப்பதில் தாமரை செல்வி போன்றவர்களுக்கு பொறுப்பு அதிகம். சாமானிய மனிதர்களில் ஒருவரான இவருடைய வரவு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூடுதல் சுவாரசியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

21:51 (IST) 3 Oct 2021
தனி இசைக்கலைஞர் ஐக்கி பெரியின் வாவ் என்ட்ரி!

மருத்துவர், இசைக்கலைஞர் என்று பன்முகம் கொண்ட தஞ்சாவூரைச் சேர்ந்த ஐக்கி, தன்னுடைய பாடலை பாடிக்கொண்டு வேற லெவலில் என்ட்ரி கொடுத்தார். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவரான இவர், ஐக்கியம் எனும் வார்த்தையை சுருக்கிதான் ஐக்கி என்ற பெயர் வந்தது என்று பகிர்ந்துகொண்டார்.

21:44 (IST) 3 Oct 2021
சுருதி மற்றும் அக்ஷராவின் ராம்ப் வாக்

அசத்தலான மாடல்களான சுருதி மற்றும் அக்ஷரா இருவரும், கமலின் அறிவுறுத்தலின்படி ராம்ப் வாக் செய்தனர். பிறகு இருவரும் ஒன்றாக வீட்டிற்குள் சென்றனர்.

21:41 (IST) 3 Oct 2021
சுருதியை தொடர்ந்து அக்ஷரா!

சுருதியை அடுத்து மிஸ் சூப்பர் க்ளோப் வெற்றியாளர் அக்ஷரா அடுத்த போட்டியாளராக களமிறங்கினார். கன்னட திரைப்படம் ஒன்றிலும் நடித்த இவர் 150-க்கும் மேற்பட்ட ராம்ப் வாக் ஈவன்ட்டுகளில் பங்குபெற்றுள்ளார். நீச்சல், யோகா என உடற்பயிற்சி செய்வது இவருக்கு மிகவும் பிடிக்குமாம்.

21:32 (IST) 3 Oct 2021
பொறியாளர், மாடல் சுருதியின் அசத்தலான என்ட்ரி!

பொறியாளரும் மாடலுமான சுருதியின் என்ட்ரி ஒரு நடனத்தோடு இருந்தது. ஏற்கெனவே ஏராளமான விளம்பரங்களில் நடித்த இவருக்கு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி பெரிய ப்ரேக்கிங்காக இருக்கும் என்று நம்புகிறார். இவர் ஒரு கூடைப்பந்து வீரரும்கூட.

21:15 (IST) 3 Oct 2021
பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிய இமான் அண்ணாச்சி!

மக்களில் இருந்து ஒரு ஆள் என்றபடி, மக்கள் மத்தியில் இருந்து இமான் அண்ணாச்சி மேடைக்குச் சென்றார். பிறகு, தன்னுடைய வழக்கமான பாணியில் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். அண்ணாச்சியாக இருந்தவரை சேட்ஜி உடையுடன் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார் உலக நாயகன்.

21:06 (IST) 3 Oct 2021
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தயார் நிலையில் வந்திருக்கும் வருண்!

சண்டைப் பயிற்சி, நடிப்பு என அனைத்தையும் முறைப்படி மட்டுமே கற்றுக்கொண்டு திரையில் தோன்றவேண்டும் என்கிற மனம் கொண்ட வருண், போக பாஸ் நிகழ்ச்சிக்காக என்னவெல்லாம் தயார் செய்திருக்கிறார் என்பதை பொறுத்துதான் பார்க்கவேண்டும்.

20:59 (IST) 3 Oct 2021
3 குழந்தைகளுக்கு தாய், முன்னணி மாடல் – நடியா சங்

டங்கா மாரி பாடலுக்கு தாறுமாறாக நடனமாடி மேடையில் தோன்றினார் மலேசியாவிலிருந்து வந்த மாடல் நடியா சங். மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர், தன்னுடைய 16 வயதிலிருந்து வேலைக்குப் போக ஆரம்பித்திருக்கிறார். சமூக வலைத்தளங்களில் பல ரசிகர்களை பெற்றிருக்கும் இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

20:45 (IST) 3 Oct 2021
மரியாதையே இருக்காது – சின்னப்பொண்ணு

நாட்டுப்புற பாடகி என்றாலே எங்கேயும் மதிப்பே இருக்காது. சந்திரமுகி திரைப்படத்தில் முதல் முறையாக தோன்றியபிறகுதான் என்னை பற்றி மக்களுக்கு தெரிந்தது. மரியாதையே அப்போதுதான் கிடைத்தது.

20:40 (IST) 3 Oct 2021
‘நாக்கு மூக்க’ சின்னப்பொண்ணு பலே என்ட்ரி!

நாட்டுப்புற பாடலோடு வேற லெவல் வைபோடு என்ட்ரி கொடுத்தார் சின்னப்பொண்ணு. கொரோனா காலகட்டத்தில் எந்தவித கலையையும் மக்களுக்கு கொண்டு சேர்க்கமுடியவில்லை என்ற சின்னப்பொண்ணு, 'உலகத்தின் நாயகனே' எனும் பாடலை பாடி கமலின் வாழ்த்துக்களை பெற்று பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.

20:30 (IST) 3 Oct 2021
சின்னத்திரை நாயகி பாவனி வருகை

தெலுங்கு, தமிழ் சின்னத்திரை நாயகியாக மக்கள் மனதில் இடம் பிடித்த பாவனி ரெட்டியின் வருகைதான் அடுத்து. கணவரை இழந்த இவர், தடைகளை உடைத்து மென்மேலும் வளர விரும்புவதாகவும் திடீரென கோவம் வந்துவிடும் என்றும் தன்னைப்பற்றி பகிர்ந்துகொண்டார்.

20:19 (IST) 3 Oct 2021
மகள் மற்றும் மனைவியின் அன்பு வாழ்த்து

காணொளி மூலம் அபிநயின் மனைவி மற்றும் மகள் தோன்றி, தங்களின் அன்பு வாழ்த்துகளை தெரிவித்தனர். மிகவும் கியூட் மற்றும் எமோஷனல் தருணமாக அமைந்தது. இருவரும் பிரிய மனமில்லாமல் விடைபெற்றனர்.

20:16 (IST) 3 Oct 2021
நடிகையர் திலகத்தின் பேரன் பிக் பாஸ் நிகழ்ச்சியில்!

நடிகையர் திலகம் சாவித்திரி மற்றும் ஜெமினி கணேசனின் பேரன் அபிநய் ஏழாவதாக என்ட்ரி கொடுத்தார். புதுவிதமான விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு உதவுவது உள்ளிட்ட சமூகம் சார்ந்த விஷயங்களை பார்த்து வருகிறார் அபிநய் என்பது குறிப்பிடத்தக்கது.

20:09 (IST) 3 Oct 2021
முன்னாள் போட்டியாளரின் ஸ்பெஷல் பெர்ஃபாமன்ஸ்!

பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து தான் நடித்து சமீபத்தில் வெளிவந்திருக்கும் லிஃப்ட் திரைப்படத்திலிருந்து ஒரு பாடலுக்கு நடனமாடி சிறப்பு பெர்ஃபாமன்ஸ் கொடுத்தார் கவின்! அந்தப் படத்தின் ட்ரெயிலரும் வெளியிடப்பட்டது.

19:58 (IST) 3 Oct 2021
ப்ரியங்காவிற்கு மாகாபா, பென்னி வாழ்த்து

மாகாபா வீடியோ அழைப்பில் தோன்றி தன்னுடைய வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார். 'இவ்வளவு சீரியஸாக மாகாபா பேசி பார்த்ததே இல்லை' என்று பதிலளித்தார். மாகாபாவை தொடர்ந்து பாடகர் பென்னியும் திரையில் தோன்றி வாழ்த்தினார்.

19:48 (IST) 3 Oct 2021
ஆஹா… வந்துட்டாங்கய்யா சூப்பர் சிங்கர் பிரியங்கா!

அடுத்தது ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளர் என்றதும், கமல் ஹாசனின் 'Who's the hero' பாடலை பாடியபடி சூப்பர் சிங்கர் பிரியங்கா பாடியபடி மேடைக்கு வந்தார். மக்கள் அனைவரும் அதிகம் எதிர்பார்த்த போட்டியாளர் இவர் என்றும் சொல்லலாம்.

19:36 (IST) 3 Oct 2021
முதல் முறையாக மூன்றாம் பாலினத்தவருக்கு வாய்ப்பு!

“எல்லா பாலினமும் ஒன்று என்றதற்கு இந்த வாய்ப்பு கொடுத்திருக்காங்க” என்றபடி முதல் முறையாக மூன்றாம் பாலினத்தவரான மாடல் நமிதாவின் என்ட்ரி இருந்தது. திருநங்கையாக மாறும் காலம் என்பதால், அவரால் கல்லூரி முடிக்க முடியவில்லை. தொடர்ந்து மாடலிங் பண்ணவேண்டும் என்று ஆசைப்பட்ட அவர், மிஸ் சென்னை, மிஸ் தமிழ்நாடு, மிஸ் இந்தியா, உலக அழகி வரை எல்லா அழகி போட்டியிலும் பங்குபெற்று வெற்றியும் பெற்றிருக்கிறார்.

19:21 (IST) 3 Oct 2021
விமர்சனம் செய்தவர் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வாரா?

விமர்சனம் செய்து செய்து இப்பொழுதெல்லாம் அனைத்தும் பழகிவிட்டது. அதனால், எல்லாவற்றுக்கும் தயாராகவே இருக்கிறேன் என்றபடி பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றார் அபிஷேக் ராஜா.

19:15 (IST) 3 Oct 2021
தனிமை மற்றும் மைண்ட் வாய்ஸ் விரும்பி – யூடியூபர் அபிஷேக் ராஜா

நான் சினிமாக்காரன் இல்லை சினிமாவை ரசிக்கிற பிரமுகன். நான் நானாகவே இருக்க போகிறேன் என்றபடி யூடியூபர் அபிஷேக் ராஜாவின் நடனம் அரங்கேறியது.

19:05 (IST) 3 Oct 2021
காதல் என்று சொன்னால் நம்பவே மாட்டேன்!

எல்லோரையும் சீக்கிரமாக நம்பிவிடுவேன் என்று வீட்டில் பயம். அதனால் எங்கேயும் விடமாட்டார்கள். காதல் என்று யாராவது சொன்னால் நம்பவே மாட்டேன். யாரையும் கஷ்டப்படுத்தமாட்டேன் என்று கூறிய மதுமிதா KH என்று எம்ப்ராய்டரி செய்த 'டை' ஒன்றை கமல் ஹாசனுக்கு பரிசளித்தார் மதுமிதா.

19:01 (IST) 3 Oct 2021
ஜெர்மனி வாழ் தமிழர் மதுமிதா

ஃபேஷன் டிசைனிங், மாடலிங் என்று கலக்கிக்கொண்டிருக்கும் ஜெர்மன் வாழ் தமிழர் மதுமிதா. கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் திரைத்துறையில் மாடலிங்கில் பிசியாக இருக்கும் இவர், மூன்றாவது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைகிறார்.

18:53 (IST) 3 Oct 2021
என்னை போன்றவர்களுக்கு என்னை தெரியணும்

என்னதான் சீரியல்களில் நடித்தாலும் என்னை போன்று இருப்பவர்களுக்கு என்னை தெரியவில்லை. என்னை தெரிந்த எல்லோருக்கும் என்னை பிடிக்கும். கண்டிப்பாக மக்களுக்கும் பிடிக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது என்றபடி பாக்யராஜ் அசிஸ்டென்ட் ராஜு ஜெயமோகன் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றார்.

18:46 (IST) 3 Oct 2021
பாவனி ரெட்டி, ப்ரதாயினி சுர்வா, ஜாக்குலின்..

பாவனி ரெட்டி, ப்ரதாயினி சுர்வா, ஜாக்குலின், பிரியங்கா தேஷ்பாண்டே, கோபிநாத் ரவி, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் பெயர்கள் இந்த சீசனில் நிச்சயம் இருக்கிறது என்று கிசுகிசுக்கப்பட்டாலும், இதில் யார் பங்குபெறவுள்ளார்கள் என்பதற்கான முழு விவரத்தை விரைவில் தெரிந்துகொள்ளலாம்.

18:44 (IST) 3 Oct 2021
பாக்யராஜ் அசிஸ்டென்ட் ராஜு ஜெயமோகன்

மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட், நடிகர், துணை இயக்குனர் என பன்முகத் திறமைவாய்ந்த ராஜு ஜெயமோகன் இரண்டாவது போட்டியாளராக களமிறங்கியிருக்கிறார். அவருக்கான சர்ப்ரைஸாக இயக்குநர் பாக்யராஜ் வீடியோ அழைப்பு மூலம் இணைந்து ராஜூவை வாழ்த்தி அனுப்பினார்.

18:33 (IST) 3 Oct 2021
7 மணிக்கு போனால் 10 மணிக்கு பாட சொல்லுவாங்க

பிக் பாஸ் சீசன் 5-ல் முதல் போட்டியாளராக கானா பாடகி இசைவாணி என்ட்ரி கொடுத்திருக்கிறார். 100 சிறந்த பெண்களில் ஒருவரான இசைவாணி, முதலாவதாக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றார். ஒரு பெண் கானா பாடல் பாடுகிறார் என்பதாலேயே, கச்சேரிகளுக்கு இவர் சென்றால், 7 மணிக்கு போனால் 10 மணிக்கு பாட சொல்லுவாங்க என்று உருக்கமாகப் பகிர்ந்துகொண்டார்.

18:33 (IST) 3 Oct 2021
ஜெயில் இல்லை ஆனால், பாதாள சிறை உண்டு

“எல்லாம் ஜம்முனு இருக்கு ஆனா ஜிம் இல்ல. மனமிருந்தால் மார்கபந்து. கட்டாந்தரையும் ஜீம்தான். ஜெயில் இல்லை ஆனால், பாதாள சிறை உண்டு. நீச்சல் குளம்தான் இம்முறை சிறை” என்றபடி மக்களை நேரடியாக பார்த்து தொகுத்து வழங்க சென்றார் கமல்.

18:21 (IST) 3 Oct 2021
பேர்தான் கன்ஃபெஷன் ஆனா எல்லா கன்ஃபியூஷனும் இங்குதான் ஆரம்பம்

முழுவதும் மாற்றப்பட்ட வித்தியாசமான வீடாக இருந்தது இம்முறை பிக் பாஸ் வீடு. எங்கு திரும்பினாலும் 5 என்கிற எண் இருந்தது. கன்ஃபெஷன் அறையில் இரண்டு ரெக்கைகளுக்கு நடுவில் அமர்ந்தபடி, பேர்தான் கன்ஃபெஷன் ஆனா எல்லா கன்ஃபியூஷனும் இங்குதான் ஆரம்பம் என்றபடி படுக்கை அறை, வரவேற்பு அறை என வீட்டை சுற்றி காட்டினார் கமல்.

18:16 (IST) 3 Oct 2021
பிக் பாஸ் நிகழ்ச்சி கோலாகலமாகத் தொடக்கம்

தமிழ்நாட்டு மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 5 கோலாகலமாக தொடங்கியது. வழக்கம் போல உலக நாயகன் புதிய வீட்டைச் சுற்றி காட்டியபடி தொடங்கியது.

Web Title: Bigg boss tamil 5 live kamal hassan live updates