Bigg Boss Tamil 5 Review Kamal Hassan Madhumitha Eviction Isaivani : அபிநய் வெளியேறப்போகும் நேரம் என்று நினைத்துக்கொண்டிருக்கையில், மதுமிதாவை வெளியே அனுப்பி ட்விஸ்ட் கொடுத்ததாக நினைத்துக்கொண்டிருக்கிறார் பிக் பாஸ். உண்மையில் மக்களின் வாக்கு எண்ணிக்கையில்தான் இந்த வெளிநடப்பு அரங்கேறுகிறதா பாஸு? சரி விடுங்க.. அடித்துக்கூட கேட்பார்கள், அப்பொழுதும் சொல்லாதீர்கள் என்கிற கணக்குதான் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் யாவும். இசைவாணியை வீடே கழுவி ஊத்தியது முதல் மது எவிக்ஷன் வரை நேற்றைய எபிசோடில் கிலிம்ப்ஸ் இங்கே..
சென்ற வார ஆளுமை பாவனியின் செயல்கள் பற்றி ஐக்கி மற்றும் தாமரை ஒருபுறம் பேசிக்கொண்டிருக்க, பிரியங்கா மற்றும் நிரூப் இருவரும் யாருக்கு கைப்பாவையாக இருக்கிறார்கள் என்பதற்கான விவாதங்கள் மறுபுறம் அரங்கேறியது. பாவனியின் ஆளுமையின் ஒரிஜினாலிட்டி இல்லை, நேரத்திற்கு ஏற்றதுபோல மாத்தி மாத்தி பேசுகிறாரே என்கிற கடுப்பில் போக்கினார் ஐக்கி பெரி. இவ்வளவு புலம்பி என்ன பயன்? விஜய் டிவி நட்சத்திரமான பாவனியை நிச்சயம் வெளியேற்ற மாட்டார்கள் என்பது உலகம் அறிந்த ஃபேக்ட்தானே.
அகம் டிவி வழியே என்ட்ரி கொடுத்த கமல், இசைவாணியின் கேப்டன்சி பற்றி வீட்டில் உள்ளவர்களிடம் கருத்துகளை கேட்டறிந்துகொண்டார். ராஜூ மற்றும் நிரூப்பை தவிர மற்ற ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் இசைவாணி மீதான அதிருப்தியைத் தெரிவித்தனர். ஆளுமையின் பொழுதும் சரி கேப்டன்சியின் போதும் சரி, இசைவாணியிடம் எப்போதுமே ஒரு தயக்கம் இருந்துகொண்டே இருக்கிறது. இதைச் சொன்னால் மற்றவர்கள் செய்வார்களா என்கிற சந்தேகத்திலேயே அவர் சொல்லும் விதம் சற்று உத்தரவிடுவிடாது போன்று இருக்கிறது. இதனாலேயே மற்றவர்கள் இசைவாணி சொல்ல வருவதைக் கேட்கக்கூட விருப்பமில்லாமல் போகிறது. மற்றவர்களின் விமர்சனங்களை எடுத்துக்கொள்ளும் பக்குவமும் இசைவாணியிடம் குறைவாகவே உள்ளது. இதை மட்டும் மாற்றிக்கொண்டால் நிச்சயம் இறுதிவரை செல்லும் வாய்ப்பு இசைவாணிக்கு உண்டு.
இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் போட்டியாளர்கள் விளையாடிய 'தோள் கொடுக்கும் தோழன்' மற்றும் 'முதுகில் குத்தியது யார்' என்ற டாஸ்க்கை மீண்டும் நீடிக்கச் செய்தார் கமல். வழக்கம்போல, தங்களோடு நெருக்கமாக இருக்கும் நபர்கள் தோழன் என்றும், தங்களுக்குப் பிடிக்காத நபரை முதுகில் குத்தியவர் என்றும் நமக்குத் தெரிந்த பதில்களையே மீண்டும் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். ஒரு வழியாக எந்த வித பயனும் இல்லாமல் இந்த பகுதி நிறைவடைய, அடுத்ததாகக் கெட்ட வார்த்தை பயன்பாடு பற்றி நீண்ட உரையைக் கொடுத்தார் கமல்.
எந்த மொழியாக இருந்தாலும், கெட்ட வார்த்தை பேசுவது அதிலும் தேசிய சேனலில் பேசுவது மிகவும் தவறு. எப்படி, எந்த மொழியில் பேசினாலும் கெட்ட வார்த்தை உபயோகிப்பது தவறு என்று அதனை அழுத்தமாகப் பதிவும் செய்தார் கமல். இறுதியாக, எப்போதுமே வீட்டை விட்டு போகும் விளிம்பு வரை வந்து, காப்பாற்றப்படும் அபிநய் இம்முறையும் சேவ் ஆக, மதுமிதா வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். இந்த மாபெரும் ஷோவில் கலந்துகொள்ளத் தேவையான அடிப்படை குணங்கள் மதுவிடம் கொஞ்சமும் இல்லாமல் போனதுதான் இவருடைய வெளியேற்றத்திற்குக் காரணம். அதாவது, அவ்வளவு நல்லவர் இவர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.