ஷிவானி டாபிக்கை விடுய்யா… ஆரி- பாலா மோதல்; பிக் பாஸ் ரணகளம்

bigg boss aari bala : ‘காதல் கண் கட்டுதே’ என்ற ஆரியின் முந்தைய வசனத்தை  பாலா பிரச்சனையாக்கினார்

பிக் பாஸ் வீட்டில் பாலா, ஆரி இடையே பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. நேற்றில், இருந்து இருவரும் அதிகப்படியான மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியது. அதில், ‘காதல் கண் கட்டுதே’ என்ற ஆரியின் முந்தைய வசனத்தை  பாலா பிரச்சனையாக்கினார். இவ்ளோ தைரியமா என்கிட்டே நீ பேசுற இல்ல.. ஷிவானி அம்மா கிட்ட நீ போய் பேசி இருக்கனும்’ என ஆரி பதிலடி கொடுத்தார்.

இதனால், கோபமடைந்த பாலா,” வெளிய இருந்தா நான் உங்களுக்கு கொடுக்குற மரியாதையே வேற” என ஆத்திரமடைந்தார்.

‘என்ன மிரட்டுரியா..’ என ஆரி சிறிதும் தயக்கமின்றி பதிலளிக்கிறார். ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் திகைத்து நிற்கின்றனர். சமாதானம் செய்ய வந்த ரம்யாவிடமும்  ஆரி தனது மனக்கசப்பை முன்வைக்கிறார் .

ஒரு கட்டத்தில் மிகவும் ஆத்திரத்துடன்  ‘ஷிவானி டாபிக்கை விடுயா..’ என அங்கிருந்த தலையனையை தூக்கி வீச ஆரம்பித்து விட்டார் பாலா.

 

முன்னதாக, பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த ஷிவானியின் அம்மா ஒரு விநாடிகூட பாலாவை பார்த்திடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் என்பதை நாம் அறிவோம். வீட்டை விட்டுச் செல்லும் வரையில் அவருடைய கவனம் பாலா பக்கம் திரும்பவேயில்லை. இது பாலாவுக்குப் பெரிதளவில் நோஸ் கட் மொமென்ட். ஷிவானி அம்மாவின் என்ட்ரி ஷிவானியைவிட பாலாவைத்தான் அதிகம் பாதித்திருக்கிறது. அது அவருடைய கண்ணீரிலேயே தெரிந்தது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss tamil 90th day promo bigg boss aari bala bigg boss tonight episode

Next Story
சர்வதேச மேடைகளில் அசுரனுக்கு குவியும் விருதுகள்… சிவசாமியாக வாழ்ந்த தனுஷ் சிறந்த நடிகராக தேர்வு!asuran movie dhanush asuran
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express