Bigg Boss 2: பிக் பாஸ் தமிழ் சீசன் 2 வீடு எப்படி இருக்கும் தெரியுமா?

Bigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி இந்த வாரம் ஞாயிறு கிழமை தொடங்க இருக்கிறது. அதற்கு முன்பு பிக் பாஸ் 2 வீடு எப்படி இருக்கு என தெரிய வேண்டுமா?

Tamil Bigg Boss - Season 2 House
Tamil Bigg Boss – Season 2 House

Bigg Boss 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி வரும் ஜூன் 17ம் தேதி ஞாயிறு கிழமை இரவு 7 மணிக்குத் தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியின் குழு, பிக் பாஸ் 2 தொடங்குவதற்கு முன்பே போட்டியாளர்கள் தங்க இருக்கும் வீடு பற்றிய விவரங்களை அளித்துள்ளனர்.

Bigg Boss Tamil Season 2 Kamal Haasan
Bigg Boss Tamil Season 2 : பிக் பாஸ் தமிழ் 2 போஸ்டரில் கமல் ஹாசன்

தமிழ் மொழியில் பிக் பாஸ் எண்ட்ரி:

பிக் பாஸ் நிகழ்ச்சி தென் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ஒன்றாகும். கடந்த ஆண்டு தமிழ் மொழியிலும் அறிமுகமான இந்த நிகழ்ச்சி மக்கள் அனைவரையும் தொலைக்காட்சி முன்பு கட்டிப்போட்டு வைத்திருந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த நிகழ்ச்சிக்கு அடிமையாகியிருந்தார்கள். பிக் பாஸ் முதல் சீசனை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். கமல் ஹாசன் என்ற ஒற்றைக் காரணத்திற்காக இந்த நிகழ்ச்சியை மக்கள் பார்க்கத்தொடங்கினார் என்று கூட கூறலாம். படங்களில் நடித்ததை விட மிகவும் அதிகமானப் புகழை பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஈட்டினார் கமல். அவர் கூறும் ஒவ்வொரு வார்த்தைக்கும் நிகழ்ச்சியைக் காண்பவர்கள், ‘ஆண்டவரே’ என்று கூச்சலிடுவது வழக்கமாகியிருந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும், சனி மற்றும் ஞாயிறு கிழமை வந்தாலே பதற்றம் தான். ஏனெனில் அந்த இரண்டு நாட்களில் தானே அஹம் டிவியில் கமல் பேசுவார். அந்த அளவுக்கு ஒரு ஸ்டிரிக்ட் மாஸ்டராக அனைவரையும் கண்காணித்துக் கொண்டிருந்தார் கமல்.

Bigg Boss Tamil Season 2 Kamal Haasan
Bigg Boss Tamil Season 2: முதல் பிக் பாஸ் சீசனில் போட்டியாளர்களுடன் கமல் உரையாடல்

பிக் பாஸ் தமிழ் 2 பற்றி நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டியவை:

பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியையும், நடிகர் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். 16 போட்டியாளர்கள், 64 கேமராக்கள், 100 நாட்கள் என்ற தகவலே அனைவரையும் பிரமிக்க வைக்கிறது. பிக் பாஸ் சீசன் 1-ல் வெறும் 30 கேமராக்கள் மட்டுமே சுற்றியிருந்தது. குறைந்த அளவிலான கேமரா இருக்கும்போதே பலரின் முகத்திரை கிழிந்தது, இந்த முறை 64 கேமராக்கள் என்றால் என்னவெல்லாம் சிக்குமோ? யாரெல்லாம் துயரத்தை அனுபவிக்கப் போகிறார்களோ என்று அந்த ஆண்டவருக்குத் தான் தெரியும்.

‘ஆமாம், இந்த 64 கேமராக்கள் பொருத்த அந்த வீட்டில் நிஜமாகவே இடம் உள்ளதா?’ என்று கேட்பவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி வீட்டில் 64 கேமரா பொருத்தவும் இடம் உள்ளது, போட்டியாளர்களுக்குத் தண்டனை கொடுக்க ஜெயிலும் உள்ளது. ஆச்சரியமாக உள்ளதா? பிக் பாஸ் 2 வீட்டை பற்றி கூறுகிறோம் கேளுங்கள்.

Tamil Bigg Boss - Season 2
Tamil Bigg Boss – Season 2 House Exterior View

பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி வீட்டிற்குள் செல்ல மீடியா ஆட்களுக்கு ஒரு நாள் அனுமதி அளிக்கப்பட்டது. அங்கு ஒரு நாள் தங்கி வீடு திரும்பிய சிலர் அவர்களின் அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார்கள். அதனை கேட்கும்போதே, ‘ஐயோ ஒரு நாள் இருக்கவே இவ்வளவு கஷ்டமாக இருக்கே… இவர்களாம் எப்படி தான் 100 நாட்கள் இருக்கிறார்களோ?’ எனத் தோன்றும் அளவுக்குப் பீதியை கிளப்புகிறது சிலரின் ஒரு நாள் அனுபவம்.

பிக் பாஸ் 2 வீடு அமைந்துள்ள பகுதியில் நிகழ்ச்சியின் குழு, நமது கண்களைக் கட்டி கையில் இருக்கும் அனைத்துப் பொருட்களையும் பறிமுதல் செய்து உள்ளே அனுப்பினார்கள். அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் ‘அண்டாகாகசம் அபுகாஹுக்கும் திறந்திடு சீசேம்’ என்ற சொன்ன உடன் திறக்குமே ஒரு கதவு, அது போல திறந்தது பிக் பாஸ் 2 வீட்டின் கதவு. முதல் கதவு திறந்து உள்ளே காலடி எடுத்து வைத்தவுடன், பச்சைப்பசேலென புல்வெளி. வலது பக்கம் நீச்சல் குளம், இடது புறம் இருக்கைகளும் சோபாவும் மற்றும் ஜிம் அமைக்கப்பட்டுள்ளது.

Tamil Bigg Boss - Season 2
Tamil Bigg Boss – Season 2 Swimming Pool
Tamil Bigg Boss - Season 2
Tamil Bigg Boss – Season 2 Gym Area

‘அடடா… எவ்வளவு அழகா இருக்கு’ என நினைக்கும்போதே ‘ஐயோ இது என்னது?’ என அலற வைக்கிறது, வலது புறம் ஓரத்தில் இருக்கும் ஜெயில். ஆமாம், பிக் பாஸ் 2 வீட்டிற்குள் இந்த முறை புதிதாக ஒரு ஜெயில் அமைக்கப்பட்டுள்ளது.

Tamil Bigg Boss - Season 2
Tamil Bigg Boss – Season 2 Jail Set Up

ஜெயிலுக்கு உள்ளே படுக்கை இல்லாத ஒரு இரும்பு கட்டில் மற்றும் சிறிய மேசை உள்ளது. இதைப் பார்க்கும் போது, இந்த சீசனில் நிச்சயம் ஒரு சம்பவம் உள்ளது என உறுதியாகிறது. தவறு செய்தால் சிறைக்குச் செல்ல வேண்டும் என்ற நீதியைக் கூறுவது போலவும் இருக்கிறது இந்த ஜெயில் செட் அப்.

Tamil Bigg Boss - Season 2
Tamil Bigg Boss – Season 2 – Jail without Air Condition or Matress

அப்படியே வீட்டின் கண்ணாடி கதவைத் திறந்து உள்ளே சென்றால், கண்ணுக்கு முன்னால் தென்படுகிறது சமையல் அறை.

Tamil Bigg Boss - Season 2
Tamil Bigg Boss – Season 2 Kitchen Area

பிறகு ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருக்கும் தனித்தனியே பெட்ரூம். பெண்கள் அறையை பிங்க் கலரில் பெயிண்ட் மற்றும் வண்ணத்துப் பூச்சி ஸ்டிக்கர்கள் கொண்டு அலங்கரித்துள்ளனர்.

Tamil Bigg Boss - Season 2
Tamil Bigg Boss – Season 2 Women Bedroom

ஆண்களுக்குக் கடல் நீல நிறத்தில் அறையை அலங்கரித்துள்ளனர். ஆனால் பெண்களின் அறையில் அட்டாச்டு பாத்ரூம் இருக்கும் வசதி ஆண்களுக்கு இல்லை.

Tamil Bigg Boss - Season 2 Tamil Bigg Boss - Season 2
Tamil Bigg Boss – Season 2 Male bedroom

கடந்த பிக் பாஸ் சீசனில் ஹாலில் பெரிய நீல நிற சோபா இருந்தது. இந்த முறை அதனை மாற்றி மஞ்சள் நிறத்திலான சோபாவை பொருத்தியுள்ளனர்.

Tamil Bigg Boss - Season 2
Tamil Bigg Boss – Season 2 Hall Area

அனைவரும் குளிப்பதற்காக வெளியே பாத்ரூம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தான் வருகிறது ஒரு டுவிஸ்ட். கடந்த ஆண்டு சீசனில், மருத்துவ முத்தம் முகாமாக இருந்த ஸ்மோகிங் ரூம் இந்த ஆண்டு வெளியே இல்லாமல் பாத்ரூம் உள்ளேயே அமைக்கப்பட்டுள்ளது.

Tamil Bigg Boss - Season 2
Tamil Bigg Boss – Season 2 Bathroom with attached Smoking Area

இவ்வளவு சொன்ன பிறகு கன்ஃபஷன் அறை பற்றி கூறாமல் இருக்க முடியுமா? அங்கு தான் பலரை பிக் பாஸ் வருத்து எடுத்தார். கடந்த ஆண்டு இருந்த கன்ஃபஷன் அறை செட் அப்பை முற்றிலுமாக இந்த முறை மாற்றியுள்ளனர். பேங்க் லாக்கருக்குள் செல்வது போன்ற கதவுகள், உள்ளே சென்றால் கண்களுக்கு முன் மின்னும் கற்கள் பொருத்தப்பட்டுள்ள சோபா. ஒரே ஆள் உட்காரும் அளவிற்கு உள்ள அந்த சோபா சிம்மாசனம் போலக் காட்சியளிக்கிறது.

Tamil Bigg Boss - Season 2 House 9
Tamil Bigg Boss – Season 2 House 9 Confession Room

பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் இந்த முறை யாரையும் பேய் பிசாசு அண்டக் கூடாது என்று சில மந்திரிக்கப்பட்ட தகடுகள் பொருத்தியுள்ளனர். கடந்த பிக் பாஸ் சீசனில் கவிஞர் போட்ட கூச்சலையும், பேயாக சுற்றி வந்த ஜூலியையும் நம்மால் மறக்க முடியுமா?

Tamil Bigg Boss - Season 2
Tamil Bigg Boss – Season 2 Sacred Ritual Set Up

பிக் பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சி நாளை மறுநாள் (ஞாயிறு கிழமை) தொடங்குவதற்கு முன்பே வீட்டை நமக்குச் சுற்றிக்காட்டிவிட்டார்கள். பெரும்பாலான விஷயங்கள் ஒரே மாதிரி இருந்தாலும் இந்த சீசனின் புதிய மற்றும் கூடுதல் செட் அப் தான் ஜெயில். இந்த முறை யாரெல்லாம் ஜெயிலுக்கு போக இருக்கிறார்கள் என்று பொறுத்திருந்தே பார்க்கலாம்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss tamil season 2 need know bigg boss new house

Next Story
அஜித்திற்காக இதையும் செய்து காட்டிய நயன்தாரா.. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com