/tamil-ie/media/media_files/uploads/2018/06/Bigg-Boss-Tamil-2-4.jpg)
Bigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2
Bigg Boss 2: பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியைக் கடந்த 17ம் தேதி தொடக்கி வைத்தார் கமல் ஹாசன். இந்நிகழ்ச்சி தொடங்கிய 3 நாளிலேயே வீடு சண்டைக் களமாக மாறியுள்ளது. நேற்று நடந்த 3வது எபிசோடில், சமையல் டீம்மில் இருந்து பெரிய சண்டை ஒன்று வெடித்தது. ஒரு வெங்காயத்தில் தொடங்கிய இந்தச் சண்டை, பெரிய பலூன் போல வெடித்தது. பிக் பாஸ் தொடக்கத்திலேயே சர்ச்சைக்குரிய நபர்களாக பாலாஜி மற்றும் நித்யா கருதப்பட்டு வந்தனர். ஏனெனில், இவர்கள் இருவரும் பிரிந்து வாழும் தம்பதிகள். வெளியே தனித் தனியாக இருக்கும்போதே சர்ச்சையின் உச்சத்தை அடைந்தது இவர்களின் பிரச்சனை. இப்போது இருவரும் இணைந்து ஒரே வீட்டில் இருக்கிறார்கள் என்றால் சேனல் டிஆர்பி அதிகமாவது அனைவரும் அறிந்த ஒன்று தானே.
Bigg Boss Tamil 2 : பிக் பாஸ் தமிழ் 2 நித்யா உருவாக்கிய பூகம்பம்சரி.. சிறிது நாள் போகட்டும் எதாவது ஒரு பூகம்பம் வெடிக்கும் என நினைத்திருந்தவர்களுக்கு, 3 வது நாளே அதிர்ச்சி கொடுத்தார் நித்யா.
பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியில் 3 வது நாளே உருவான பூகம்பம்... என்ன அது?
பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் காலையில் சப்பாத்தி உணவைச் சாப்பிட்டுவிட்டு, ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது குக்கிங் டீம்மில் உள்ளவர்கள் மதிய உணவு தயார் செய்துகொண்டிருந்தார்கள். பாலாஜி சமையல் அறைப் பக்கம் சென்று, பொரியலில் வெங்காயம் போடு எனக் கூறுகிறார். இதனை மறுக்கிறார் நித்யா. பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் வெங்காயம் சேர்த்தால் கூடுதலாக உணவு கிடைக்கும் என்று கூறியபோது, நித்யா சேர்க்கவில்லை. அதற்குக் காரணம், பாலாஜி கூறியதால் தான் இவர்கள் கன்வின்ஸ் செய்கிறார்கள் என நித்யா நினைத்தது தான்.
Bigg Boss Tamil 2 : பிக் பாஸ் தமிழ் 2 நித்யா உருவாக்கிய பூகம்பம்மதியம் உணவு பிரச்சனை ஒரு வழியாக ஓய்வு பெற, மாலை டீ டைம் பிரச்சனையில் அனைவரையும் அழைத்து கூட்டம் போடுகிறார் நித்யா. இந்தக் கூட்டத்தில் தானே அனைத்து வேலைகளைச் செய்வதாகவும், அனைவரும் இவருக்கு ஆர்டர் தருவது போல இருப்பதாகவும் குற்றச்சாட்டு கூறுகிறார்.
Bigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2 கோவமடைந்த மும்தாஜ்இதனால் கோவத்தின் உச்சத்தை அடைந்த மும்தாஜ், உண்மையில் என்ன நடந்தது என விவரிக்க, தவறு நித்யா மேல் தான் உள்ளது எனப் பதிலடி கொடுக்கிறார். இருப்பினும் தவறை ஒப்புக்கொள்ளாமல், அடம் பிடிக்கும் நித்யாவுக்கு, குணத்தை மாற்றிக்கொள்ளுமாறு அட்வைஸ் செய்கிறார்கள்.
பிக் பாஸ் வீட்டில் நடந்த அனைத்தையும் பார்த்த பாலாஜி ஒரு புறம் கோவத்தில் கொதித்திருந்தாலும், மறு புறம் சென்ராயனிடம், ‘நான் எவ்வளவு தான் அவளைக் காப்பாற்ற முயற்சிப்பது. ஆனால் அவள் கேட்க மாட்டேன் என இருந்தால் என்ன செய்வது?’ புலம்புகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us