/indian-express-tamil/media/media_files/2025/11/02/bigg-2025-11-02-08-47-43.jpg)
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கி 20 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. வழக்கத்திற்கு மாறாக இந்த சீசனில் திரைப்பிரபலங்களுக்கு பதிலாக சமூக வலைதள பிரபலங்கள் அதிகம் கலந்து கொண்டதால் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் பிரச்சனையை தாரக மந்திரமாக கடைப்பிடித்து வருகின்றனர்.
எதற்கெடுத்தாலும் சண்டை என்ன செய்தாலும் சண்டை என்ற லெவலில் பிக்பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. இது பிக்பாஸ் நிகழ்ச்சியா? இல்லை சவுண்ட் பாக்ஸ் நிகழ்ச்சியா? என்ற ரேஞ்சிற்கு மக்கள் கடுப்பில் உள்ளனர். இந்த வீட்டில் எப்போதும் சண்டை மட்டும் தான் இருக்குமா? சந்தோசமான நிகழ்வுகள் நடக்கவே நடக்காதா? என்றும் கேள்வி எழுப்பி வந்தனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அதிகம் கண்டெண்ட் கொடுப்பதே வி.ஜே.பார்வதி தான் இவர்கள் இல்லாமல் இந்த 20 நாட்களில் எந்த ப்ரொமோவும் வருவதில்லை. எப்ப பார்த்தாலும் சண்டை என்று அதிருப்தி அடைந்த மக்களுக்கு உற்சாகமளிக்கும் விதமாக போட்டியாளர்கள் 90’ஸ் கிட்ஸ் விளையாட்டுகள் எல்லாம் விளையாடினர். இதை பார்த்த நெட்டிசன்கள் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து ’எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என்று பதிவிட்டு வந்தனர்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து இதுவரை நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா சி.ஜே., ஆதிரை ஆகியோர் வெளியேறினர். பிக்பாஸ் நிகழ்ச்சியை பரபரப்பாக்கும் விதமாக தற்போது வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே இறங்க உள்ளனர். முன்பு 50 நாட்களுக்கு மேல் தான் வைல்டு கார்டு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார்கள். ஆனால், தற்போது 30 நாட்கள் முடிவடையாத நிலையில் வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே செல்ல உள்ளனர்.
வைல்டு கார்டு போட்டியாளர்களாக பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ், அமித் ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் களத்தில் இறங்க உள்ளனர். இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சி தினமும் பல டுவிஸ்ட்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் யார்... யாரெல்லாம் வெளியேறப் போகிறார்கள் என்ற லிஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், இந்தவாரம் கலையரசன் வெளியேறுவார் என்று குறிப்பிட்டுள்ளது.
Milroy script leaked😋 #BiggBossTamil9pic.twitter.com/f6bo2CHBSK
— Arun (@opinier27) October 28, 2025
மேலும், 35 வது வாரம் ரம்யா, 42-வது வாரம் கம்ருதீன், 49-வது வாரம் திவ்யா, 56-வது வாரம் அரோரா, 63-வது வாரம் விக்ரம், 70-வது வாரம் துஷார், 77-வது வாரம் திவாகர், 84-வது வாரம் பார்வதி, 91-வது வாரம் பிரஜின் மற்றும் சாண்ட்ரா, 98-வது வாரம் கனி மற்றும் வியானா ஆகியோர் வெளியேறுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 100-வது வாரம் கெமி பணப்பெட்டியுடன் வெளியேறுவார் என்றும் இறுதியில் அமித், சுபிக்ஷா, சபரி வீட்டில் இருப்பார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த லிஸ்டை இணையவாசிகள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us