சர்ச்சைகள், விமர்சனங்கள், பாராட்டுகள் என அனைத்தையும் உளவாங்கிக் கொண்டு வெற்றிகரமாக எழுபது நாளைக் கடந்த பிக்பாஸ் ஷோவில் முதலில் 15 போட்டியாளர்கள் உள்ளே வந்தார்கள். ஆனால், பலரின் எலிமினேஷனுக்குப் பிறகு வெறும் 7 போட்டியாளர்கள் மட்டுமே மீதமிருந்தனர்.
இடையில் வந்து சொருகியவர் பிந்து மாதவி. இவர் விருப்பப்பட்டு வந்தாரா அல்லது விருப்பமில்லாமல் வேறு காரணங்களுக்காக வந்தாரா என்பது இன்னமும் ரசிகர்களுக்கு புரியவில்லை. அதிகம் ஈடுபாடு இல்லாமலும், கொஞ்சம் ஈடுபாட்டோடும் நடமாடிக் கொண்டிருக்கிறார்.
பிந்துவால், பிக்பாஸ் ஷோவில் எந்தவொரு சுவாரஸ்ய நிகழ்வுகளும் அரங்கேறவில்லை. இதனால் சுஜா, ஹரீஷ், காஜல் ஆகிய புதிய போட்டியாளர்களை களமிறக்கியது பிக்பாஸ் டீம்.
அப்போதும் ஒன்றுமே நடக்காததால், மீண்டும் ஜூலி, ஆர்த்தி ஆகியோரை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பியது. நேற்று சக்தியும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துவிட்டார். இதனால், பிக்பாஸ் வீடு மீண்டும் சூடுபிடிக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது பிக்பாஸ் டீம்(வாழ்த்துகள்).
எத்தனை பேர் வந்தாலும், போனாலும் பிக்பாஸ் ஷோவில் மக்களால் அதிகம் ரசிக்கப்பட்டவர், விரும்பப்பட்டவர், நேசிக்கப்பட்டவர், காதலிக்கப்பட்டவர் என்றால் அது ஓவியா தான். அந்த ஒவியாவே காதலித்தவர் தற்போது பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கும் ஆரவ்.
/tamil-ie/media/media_files/uploads/2017/09/z207-300x217.jpg)
மன அழுத்தம் காரணமாக பிக்பாஸ் ஷோவில் இருந்து வெளியேறிய போது கூட, 'ஆரவ் உனக்காக நான் காத்திருப்பேன்' என்று தெரிவித்தார். ரசிகர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும், 'ஆரவ் தான் என் உலகம்' என்று தனது முடிவில் உறுதியாக இருந்தார்.
இந்த நிலையில், இன்று ஓவியா தனது ட்விட்டரில் ஒரு ட்வீட் ஒன்றை தட்டியுள்ளார். அதில், "ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ்: சிங்கிள் அன்ட் சாட்டிஸ்ஃபைட்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால், ஆரவ்வை தான் தற்போது காதலிக்கவில்லை என்பதை அவர் தெளிவுப்படுத்தியுள்ளார். தான் யாரையும் காதலிக்கவில்லை என்றும், திருப்தியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போது, பலமுறை இதேபோன்று ஓவியா கூறி பின் வாங்கியிருக்கிறார். ஆரவ் உடனான காதல் பிரச்சனையின் போது, சினேகன் உட்பட சிலர் ஓவியாவிற்கு ஆறுதல் தெரிவிக்கும் போது, "நான் இப்போ க்ளீயர் ஆகிட்டேன். இனி என் வாழ்க்கையில் யாரும் இல்லை' என்று சொல்வார். அடுத்த சில நிமிடங்களில் 'ஆரவ் உன்னை மறக்கமுடியவில்லை' என்பார்.
அதுபோல், இந்த ட்வீட்டும் மீண்டும் மாறுமா அல்லது நிலையாக இருக்குமா என்பதை ஓவியா ஆர்மி பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.