/indian-express-tamil/media/media_files/2025/10/15/arora-2025-10-15-08-41-47.jpg)
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் வாரத்தில் இருந்தே இந்த நிகழ்ச்சி காரசார விவாதங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதலே பிக்பாஸ் வீட்டில் பிரச்சனைகள் வெடித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நந்தினி சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் என்னால் இருக்க முடியாது என்று வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து, முதல் வார நாமினேஷனில் பிரவீன் காந்தி வெளியேறினார். எதற்கெடுத்தாலும் பிரச்சனை தான் தீர்வு என்ற கோணத்தில் பிக்பாஸ் வீட்டு போட்டியாளர்கள் செயல்பட்டு வருவதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலும் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரையை போட்டியாளர்கள் குறித்து வைத்து தாக்குவதாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளது.
பல பிரச்சனைகளுக்கு மத்தியில் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த திவாகருக்கு ஒரு வாரத்திற்கு பிறகு ஃபாலோவர்ஸ்கள் அதிகரித்ததாக கூறப்படுகிறது. மேலும், வி.ஜே.பார்வதிக்கு ஹேட்டர்ஸ்கள் அதிகரித்ததாக கூறப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனைகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இது ஒரு புறம் இருக்க மறு புறம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும் இது சமூக சீரழிவிற்கு வழி வகுக்கிறது என்றும் கருத்துக்கள் பரவி வருகிறது.
மற்றொரு புறம் பிக்பாஸிற்கு என்றே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இப்படி பல பிரச்சனைகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கான வீடியோவும் ஒவ்வொரு நாளும் ட்ரெண்டாகி வருகிறது. அந்த வகையில் தற்போது பலூன் அக்கா அரோராவின் வீடியோ ஒன்று ட்ரெண்டாகி வருகிறது.
Tushaar Bb vantha 3 vathu naale date polamanu ketrukan...😹
— Jeeva (@JpJeeva1ly) October 14, 2025
Chumma chumma bubloo va thittathinga nu vara koodathu..👇🏻#BiggBossTamil9pic.twitter.com/yzTz5zAlTM
அதில், அரோரா, ஆதிரையிடம் துஷார் என்னிடம் வெளியே சென்றதும் டேட் பண்ணலாமா என்று மூன்றாவது நாளே கேட்டான். நான் எதுவும் சொல்லவில்லை எனக்கு தெரியும் நாம் ரெடியாகும் வரை எந்த நம்பிக்கையும் கொடுக்கக் கூடாது என்று. இப்போது பேசும் போது துஷார் சொன்னார் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை அதனால் தான் கேட்டேன் என்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி உள்ளது. அமுன்பு, போட்டியாளர் அரோரா, சபரிநாதனிடம் நான் பசங்கள என் பின்னாடி சுற்றவிடுவேன் ஆனால், காதல் செய்யமாட்டேன் என்று கூறிய வீடியோ சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.