/indian-express-tamil/media/media_files/2025/10/07/diwagar-2025-10-07-14-11-04.jpg)
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி விஜய் டி.வி-யில் சமீபத்தில் மிகப்பிரமாண்டமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய இரண்டு நாட்களிலேயே பிக்பாஸ் வீட்டில் கடும் மோதலும், பிரளயமும் ஏற்பட்டு வருகிறது. வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரை போட்டியாளர்கள் வரிசை கட்டி குற்றம்சாட்டி வருகின்றனர். முதல் வார நாமினேசன் புராசஸில் பலரும் திவாகரை நாமினேசன் செய்தார்கள். இதனால் மனமுடைந்து போன திவாகர் தப்பு செய்தவர்களை எல்லாம் விட்டு விடுகிறார்கள். என்னிடம் எல்லோரும் சண்டைபோடுகிறார்கள் என்று பிக்பாஸிடம் புலம் வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் திவாகர் சொன்ன ஒன்றை வார்த்தையால் பெரும் பிரளயம் ஏற்பட்டுள்ளது. அதாவது, திவாகர், ரம்யா ஜோவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ரம்யா ஜோ நாங்க பேசக்கூடாது என்று சொன்னால் நீங்க பேசுவதை நிறுத்திவிட வேண்டும் என்று கூறுகிறார். இதை கேட்ட திவாகர் ‘பிரண்ட்ஸ்’ பட காமெடி மாதிரி இருக்கு என்று சொல்லிவிட்டு வி.ஜே பார்வதியை அழைக்கிறார். அப்போது அறையில் இருந்து வெளியே வந்த ரம்யா ஜோ, பார்வதியிடம் திவாகர் ‘பிரண்ட்’ பட காமெடி மாதிரி இருக்கு என்று சொன்னார். இவர் யாரை சொல்கிறார் என்று சண்டைபோடுகிறார்.
இது பிக்பாஸ் வீட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதுடன் ஒவ்வொரு வரும் தங்களுடைய கருத்துகளை சொல்கின்றனர். தொடர்ந்து, சண்டைபோடும் ரம்யா ஜோ ஒரு மரியாதையா உள்ள வந்திருகீங்க இப்படி பேசலாமா? என்று சண்டைபோடுகிறார். அதன்பின்னர், பார்வதி நான் முன்பே உங்களிடம் கூறினேன். எதை எங்கே பேச வேண்டுமோ அங்கே பேசுங்கள் என்று திவாகருக்கு அறிவுரை கூறுகிறார்.
மேலும் ரம்யா ஜோவிடம் மன்னிப்பு கேட்கும் படி சக போட்டியாளர்கள் திவாகரிடம் கூறுகிறார்கள். ரம்யா ஜோ நம் வீடு இல்லை இது. நம் வீட்டில் இருப்பது போன்று பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியாது என்று கூறுகிறார். இதற்கிடையே இன்னொரு பிரச்சனை வருகிறது அதற்கு திவாகர் கருத்து சொல்கிறார். இதை பார்த்த ரம்யா ஜோ எல்லோர் விஷயத்திலும் திவாகர் கருத்து சொல்வார் ஆனால் அவர் விஷயத்தில் யாரும் கருத்து சொல்லக் கூடாது என்று பேசிக் கொண்டிருக்கும் போதே திவாகர் நான் சொல்வதை கேளுங்க என்று ரம்யா ஜோவிடம் கோபப்படுகிறார்.
இதனால் கோபமடைந்த ரம்யா ஜோ ஏன் கத்துகிறீர்கள் என்று திவாகருடன் சண்டைப்போடுகிறார். இது வீட்டில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்துகிறது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் ரம்யா ஜோ வேண்டும் என்றே திவாகரிடம் சண்டை போடுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.