/indian-express-tamil/media/media_files/2025/10/28/paru-2025-10-28-14-00-42.jpg)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் கடந்த அக்டோபர் 5-ந் தேதி தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக சமூகவலைதளங்களில் பிரபலமான நபர்கள் அதிகம் பங்கேற்றுள்ள இந்நிகழ்ச்சியில், வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர், வி.ஜே.பார்வதி, இன்ஸ்டா பிரபலம் பலூன் அக்கா, அகோரி கலையரசன் என பலர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் பங்கேற்றதால் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கடுமையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம், நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்பது குறித்தும் ரசிகர்கள் கவனித்து வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 9 போட்டியாளர்கள் பட்டியல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தாலும் போட்டியாளர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதை மறந்து தொடர்ந்து சண்டை போட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் என்ன பிரச்சனை வெடிக்கும் என்ற கோணத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கனியின் உடைகளை பார்வதி கீழே வைத்துவிட்டு சென்றதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
தொடர்ந்து கனி, பார்வதி மன்னிப்பு கேட்டு என் உடைகளை எடுத்துக் கொடுத்தால் தான் நான் சாப்பிடுவேன் என்று கூறினார். அதன்பின்னர், பார்வதி நீங்கள் சாப்பாட்டை வைத்து தான் எல்லா அரசியலும் செய்வீங்க என்று சொல்லிவிட்டு மன்னிப்பு கேட்டார். இதனால் இந்த சண்டை முடிவுக்கு வந்தது. இருந்தாலும், பார்வதி தன் சண்டை போடும் ஸ்டார்டஜியை மீண்டும் கடைப்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் டி.ஆர்.பி வழக்கத்திற்கு மாறாக சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
#Day23#Promo1 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 28, 2025
Bigg Boss Tamil Season 9 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9#OnnumePuriyala#BiggBossSeason9Tamil#BiggBoss9#BiggBossSeason9#VijaySethupathi#BiggBossTamil#BB9#BiggBossSeason9#VijayTV#VijayTelevisionpic.twitter.com/hQxG60tv1s
23-ஆம் நாளின் முதல் ப்ரொமோவில் பார்வதி, பிரவீன் ராஜை பார்த்து நீங்க இதை ஆர்மீ கேம்ப் மாதிரி கொண்டு செலுத்த போறீங்களா என்று கேட்கிறார். அதற்கு அவர், இந்த வாரம் எப்படி கொண்டு போனுமோ அப்படி கொண்டு செல்வேன் என்கிறா. இதற்கு பார்வதி அப்ப ஆர்மி கேம்ப் மாதிரி கொண்டு போக போறீங்க அத சொல்லிட்டு போங்க என்கிறார். இதனால் கடுப்பான பிரவீன் ராஜ் வாய மூடிட்டு உட்காருங்க என்கிறார். அதற்கு பார்வதி சும்மாவே கேரக்டரில் இருப்ப இப்ப ஆர்மி கேம்ப் என்றதும் அப்படியே இருக்குறீயா. சும்மா வந்துட்டாரு என்று திட்டுகிறார். இதனுடன் இந்த ப்ரொமோ முடிவடைகிறது.
#Day23#Promo2 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 28, 2025
Bigg Boss Tamil Season 9 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9#OnnumePuriyala#BiggBossSeason9Tamil#BiggBoss9#BiggBossSeason9#VijaySethupathi#BiggBossTamil#BB9#BiggBossSeason9#VijayTV#VijayTelevisionpic.twitter.com/4r0jFul9Pc
இதையடுத்து வெளியான இரண்டாவது ப்ரொமோவில் கார்டன் ஏரியாவில் பாருவும், திவாகரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பாரு, கம்ருதீன் நேற்று ஒரு வேளையை பார்த்துவிட்டு போய்ட்டான். இரண்டு பொண்ணுங்க கான்சப்ட் மாதிரி ட்ரை பண்ணுனான். அது அன்வாண்டட் டச் என்று எனக்கு தெரிகிறது. நான் டேட் பண்ணினால் கமிட்மெண்டோடி தான் டேட் பண்ணுவேன். உன்னுடைய ஊறுகாய்க்கு என்னை பயன்படுத்திக்காத. எந்த வகையிலும் கம்ருதீன் சேஃப்டி கிடையாது. நீ எனக்கு தோழர் நான் உனக்கு தோழி அந்த லெவலில் இருந்து கொள்வோம் என்று திவாகரிடம் கூறுகிறார். இதனுடன் இந்த ப்ரொமோ முடிவடைகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

 Follow Us
 Follow Us