/indian-express-tamil/media/media_files/2025/10/12/promo-1-2025-10-12-10-28-17.jpg)
தமிழில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 5-ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தொடக்கி ஒருவாரமே ஆகிறது. இந்த ஒரு வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் பல பிரளயங்கள் வெடித்துள்ளன. பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் பெரும்பாலும் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரை டார்கெட் செய்து வம்பிழுத்து வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான, வீடியோக்களை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து ட்ரோல் செய்தனர்.
அதுமட்டுமல்லாமல், முதல் வார நாமினேஷனின் போதும் பிக்பாஸ் போட்டியாளர்கள் திவாகரையை டார்கெட் செய்தனர். நல்லா போய்க் கொண்டிருக்கும் போது யாராவது ஒரு ஆள் பிரச்சனையை ஏற்படுத்திவிட்டு சென்றுவிடுகிறார்கள். இல்லையென்றால் கலகலப்பாக தொடங்கும் எதாவது ஒரு பேச்சு இறுதியில் பிரச்சனையாக முடிந்துவிடுகிறது பிக்பாஸ் வீட்டில். கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசன் போட்டியாளர்கள் வந்ததுமே தங்கள் வேலைகளை ஆரம்பித்துவிட்டனர். ஒரு சிலர் கண்டெண்டிற்காக பிரச்சனைகள் செய்கின்றனர் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, போட்டியாளர் நந்தினி தன்னால் பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியவில்லை என்று கூறி வீட்டைவிட்டு வெளியேறினார். நேற்று (அக்.11) நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் போட்டியாளர்களை சந்தித்து முதல் வாரத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பாக விசாரித்தார். அப்போது நடிகர் விஜய் சேதுபதி ஸ்டேஜிற்கு வந்ததும் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களை எழுந்து நின்று அறிமுகப்படுத்தினர். ஆனால், ஆதிரை இருக்கையில் அமர்ந்தவாரே தன்னை அறிமுகப்படுத்தினார்.
இதனால் கடுப்பான விஜய் சேதுபதி எல்லோரும் எழுந்து நின்றார்களே நீங்கள் ஏன் அந்த ஜெயினை பிரேக் பண்ணுகிறீர்கள் என்றார். அதற்கு ஆதிரை அது அவர்களது விருப்பம் என்று கூறினார். இதனால் உச்சகட்ட டென்ஷனான விஜய் சேதுபதி இதை தனிப்பட்ட முறையில் எடுத்தால் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு நல்லதுக்கு இல்லை என்றார். அதன் பின்னர், ஒவ்வொரு போட்டியாளர்களையும் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது வி.ஜே.பார்வதி மீது பிக்பாஸ் வீட்டினர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தனர். இதை கேட்டு பார்வதி அமைதியாக சிரித்துக் கொண்டிருந்தார்.
இதை பார்த்த விஜய்சேதுபதி நீங்கள் உங்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை கூலாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அது வெளியில் என்ன சொல்லப்படுகிறது. அது நாகரீகமில்லை, நல்லது இல்லை என்றார். இதை கேட்ட வி.ஜே.பார்வதி கண்ணீர் விட ஆரம்பித்துவிட்டார். இதை பார்த்த திவாகர் மொத்தமே 50 ஆடியன்ஸ் தான் வந்திருப்பாங்க நீ ஏன் இப்படி பண்ற பாரு என்று ஆறுதல் கூறுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 9 இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், “வீட்டிற்குள் இருப்பவர்கள் நல்லவர்களாகவே இருக்கலாம். ஒரு சிலரிடம் அதிகாரத்தை கொடுத்து அதை பயன்படுத்த சொன்னா அவங்க என்ன மாதிரியான மனுஷங்களா மாறுறாங்க? அந்த அதிகாரம் அவர்களை என்ன செய்கிறது? கீழ இருப்பவன் எப்போதும் கீழ இருக்கமாட்டான். மேல இருக்கிறவன் எப்போதும் மேல இருக்க மாடான். அதுபோன்று பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களும் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை எப்படி புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்து பேசும்” என்கிறார். இந்த வீடியோவை இணையத்தில் பகிரும் நெட்டிசன்கள் இன்னைக்கு ஒரு சம்பவம் இருக்கு என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.