/indian-express-tamil/media/media_files/2025/10/31/b-2025-10-31-16-09-59.jpg)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் கடந்த அக்டோபர் 5-ந் தேதி பிரமாண்டமாக தொடங்கியது. வழக்கமாக பிரபலங்கள் பிக்பாஸ் போட்டியாளர்களாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமூக வலைதளங்களில் பிரபலமான நபர்கள் பிக்பாஸில் போட்டியாளர்களாக நுழைந்தது மக்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்தது. இந்நிகழ்ச்சி குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தாலும் பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது என்று ரசிகர்கள் ஆவலுடன் கவனித்து வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 9 போட்டியாளர்கள் பட்டியல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் போட்டியாளர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதை மறந்து தொடர்ந்து சண்டை போட்டு வருகின்றனர். 20 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற நிலையில் நந்தினி தன்னால் பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியாது என்று சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார். இதையடுத்து, முதல் வார நாமினேஷனில் பிரவீன் காந்தி வெளியேறினார்.
தொடர்ந்து, அப்சரா சி.ஜே, ஆதிரை ஆகியோர் வெளியேறினர். வீட்டைவிட்டு வெளியேறிய ஆதிரை, என்னை விட தகுதியில்லாத ஆட்கள் எல்லாம் உள்ளே இருக்கிறார்கள். ஆனால் நான் வெளியில் இருக்கிறேன். மக்கள் தான் சரியாக புரிந்து கொள்ளவில்லை என கூறிவிட்டு சென்றார். இந்த வாரம் லாக்கர் டாஸ்க் நடைபெறுகிறது. இதில் அனைவருக்கும் தனித்தனி யூனிஃபார்ம் கொடுக்கப்பட்டுள்ளது. இதை அணிந்து போட்டியாளர்களும் விறுவிறுப்பாக விளையாடி கொண்டிருக்கிறார்கள்.
என்னதான் போட்டியாளர்கள் சண்டைபோட்டாலும், அடித்துக் கொண்டாலும் இன்னும் தங்களுடைய சுயரூபத்தை காட்டவில்லை என்பது மக்களின் கருத்தாகும். பிக்பாஸ் வீட்டில் சமூக வலைதள போட்டியாளர்கள் குவிந்துள்ள நிலையில் வைல்டு கார்டு எண்ட்ரி இருக்காது என்று தகவல் பரவி வந்தது. ஆனால், சமீபத்தில் வைல்டு கார்டு போட்டியாளர்கள் குறித்த அறிவிப்பை விஜய் டிவி வெளியிட்டது.
#Day26#Promo1 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 31, 2025
Bigg Boss Tamil Season 9 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9#OnnumePuriyala#BiggBossSeason9Tamil#BiggBoss9#BiggBossSeason9#VijaySethupathi#BiggBossTamil#BB9#BiggBossSeason9#VijayTV#VijayTelevisionpic.twitter.com/j8snewVqF1
அதில், பாக்யலட்சுமி, மகாநதி, அன்னம் போன்ற தொடர்களில் நடித்த திவ்யா கணேஷ், வைல்டு கார்டு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளார். மேலும், நடிகர் பிரஜின் அவரது மனைவி சாண்ட்ரா மற்றும் நடிகர் அமித் ஆகியோரும் வைல்டு கார்டு எண்ட்ரியில் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளனர். இவர்கள் இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார்கள் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இன்னும் சிலர் வைல்டு கார்டு எண்ட்ரியில் உள்ளே செல்ல இருப்பதாகவும் செய்தி பரவி வருகிறது.
விறுவிறுப்பற்று இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை இந்த வைல்டு கார்டு போட்டியாளர்கள் விறுவிறுப்பாக்குவார்களா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்கு முன்பு பாலாஜியும் அவரது மனைவியும் ஒரே சீசனில் பங்கெடுத்த நிலையில் தற்போது பிரஜின் - சாண்ட்ரா பங்கெடுக்க உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 26-ஆம் நாளின் முதல் ப்ரொமோ வெளியாகியுள்ளது. அதில், எந்த இரண்டு பேரின் கதை மிகவும் போரிங்காக இருந்தது என்று பிக்பாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு, போட்டியாளர்கள் அனைவரும் எஃப்.ஜே-வையும் திவாகரையும் குறிப்பிடுகின்றனர். இத்துடன் இந்த ப்ரொமோ முடிவடைகிறது.
இரண்டாவது ப்ரொமோவில், கார்டன் ஏரியாவில் பாரு, திவாகர், வியானா பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வியானா வந்த புதிதில் எல்லோரும் கான்சியஸ்ஸாக இருந்தார்கள். இப்போது அந்த கான்சியஸ்நெஸ் இல்லை. இந்த வீட்டில் எனக்கு என்ன பிடிக்கவில்லை என்றால். ஒரு சில வார்த்தைகளை திவாகரை பார்த்து பயன்படுத்துகிறார்கள். அப்போது எல்லோரும் சிரிக்கிறாங்க என்று வியானா சொல்கிறார். அப்போது திவாகர் ரொம்ப பண்ணினோம் என்றால் கேனயனு ஒரு வார்த்தை இருக்கு அந்த மாதிரி ஆக்கிருவாங்க என்கிறார். இதனுடன் இந்த ப்ரொமோ முடிவடைகிறது.
மூன்றாவது ப்ரொமோவில் பிக்பாஸ் போட்டியாளர்கள் 90’ஸ் கிட்ஸ் விளையாட்டுகளை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ப்ரொமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us