ஹேட்டர்ஸ் இவங்களுக்கு தான் அதிகம்... உண்மையை உடைத்த ஆதிரை; பிக்பாஸ் வீட்டில் வெடிக்கும் பிரச்சனை

பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி வரைலாகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி வரைலாகி வருகிறது.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
adhirai

தமிழில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 5-ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தொடக்கி ஒருவாரமே ஆகிறது. இந்த ஒரு வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் பல பிரளயங்கள் வெடித்துள்ளன. பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் பெரும்பாலும் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரை டார்கெட் செய்து வம்பிழுத்து வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான, வீடியோக்களை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து ட்ரோல் செய்தனர்.

Advertisment

அதுமட்டுமல்லாமல், முதல் வார நாமினேஷனின் போதும் பிக்பாஸ் போட்டியாளர்கள் திவாகரையை டார்கெட் செய்தனர். நல்லா போய்க் கொண்டிருக்கும் போது யாராவது ஒரு ஆள் பிரச்சனையை ஏற்படுத்திவிட்டு சென்றுவிடுகிறார்கள். இல்லையென்றால் கலகலப்பாக தொடங்கும் எதாவது ஒரு பேச்சு இறுதியில் பிரச்சனையாக முடிந்துவிடுகிறது பிக்பாஸ் வீட்டில். கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசன் போட்டியாளர்கள் வந்ததுமே தங்கள் வேலைகளை ஆரம்பித்துவிட்டனர். ஒரு சிலர் கண்டெண்டிற்காக பிரச்சனைகள் செய்கின்றனர் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து,  நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் போட்டியாளர்களை சந்தித்து முதல் வாரத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பாக விசாரித்தார். அப்போது வி.ஜே.பார்வதி மீது பிக்பாஸ் வீட்டினர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தனர். இதை கேட்டு பார்வதி அமைதியாக சிரித்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த விஜய்சேதுபதி நீங்கள் உங்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை கூலாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அது வெளியில் என்ன சொல்லப்படுகிறது என்பதுதான். அது நாகரீகமில்லை, நல்லது இல்லை என்றார். இதை கேட்ட வி.ஜே.பார்வதி  கண்ணீர் விட ஆரம்பித்துவிட்டார். இதை பார்த்த திவாகர் மொத்தமே 50 ஆடியன்ஸ் தான் வந்திருப்பாங்க நீ ஏன் இப்படி பண்ற பாரு என்று ஆறுதல் கூறுகிறார்.

Advertisment
Advertisements

இதையடுத்து தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில், யாருக்கு ஃபாலோவர்ஸ் ? யாருக்கு ஹேட்டர்ஸ் அதிகம் என்று விஜய் சேதுபதி கேட்கிறார். அதற்கு பெரும்பாலான போட்டியாளர்கள் திவாகருக்கு ஃபாலோவர்ஸ் அதிகமாகி இருப்பார்கள் என்று கூறுகிறார்கள். அதேபோன்று, ஆதிரை உட்பட பிக்பாஸ் போட்டியாளர்கள் பலர் வி.ஜே.பார்வதிக்கு ஹேட்டர்ஸ் அதிகமாகி உள்ளதாக கூறுகிறார்கள். மேலும், நடிகர் கம்ருதீனுக்கும் ஹேட்டர்ஸ் அதிகமாக இருப்பதாக சொல்கிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

biggboss Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: