/indian-express-tamil/media/media_files/2025/10/29/vjs-2025-10-29-08-45-52.jpg)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் கடந்த அக்டோபர் 5-ந் தேதி தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக சமூகவலைதளங்களில் பிரபலமான நபர்கள் அதிகம் பங்கேற்றுள்ள இந்நிகழ்ச்சியில், வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர், வி.ஜே.பார்வதி, இன்ஸ்டா பிரபலம் பலூன் அக்கா, அகோரி கலையரசன் என பலர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் பங்கேற்றதால் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கடுமையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம், நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்பது குறித்தும் ரசிகர்கள் கவனித்து வருகின்றனர்.
#பிக்பாஸ் இல்லத்தில்.. #DivyaGanesh 😍விரைவில்..
— Vijay Television (@vijaytelevision) October 28, 2025
Bigg Boss Tamil Season 9 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9#OnnumePuriyala#BiggBossSeason9Tamil#BiggBoss9#BiggBossSeason9#VijaySethupathi#BiggBossTamil#BB9#BiggBossSeason9#VijayTV… pic.twitter.com/n6qCUIlnDG
பிக்பாஸ் சீசன் 9 போட்டியாளர்கள் பட்டியல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தாலும் போட்டியாளர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதை மறந்து தொடர்ந்து சண்டை போட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் என்ன பிரச்சனை வெடிக்கும் என்ற கோணத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. 20 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற நிலையில் பிரவீன் காந்தி, நந்தினி, அப்சரா சி.ஜே, ஆதிரை ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினர்.
#பிக்பாஸ் இல்லத்தில்.. #PrajinPadmanabhanv 😎விரைவில்..
— Vijay Television (@vijaytelevision) October 28, 2025
Bigg Boss Tamil Season 9 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9#OnnumePuriyala#BiggBossSeason9Tamil#BiggBoss9#BiggBossSeason9#VijaySethupathi#BiggBossTamil#BB9#BiggBossSeason9#VijayTV… pic.twitter.com/np5TCYDtNn
பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவருமே தங்களின் சுயரூபத்தை காட்டவில்லை என்பதே மக்களின் கருத்தாகவும் உள்ளது. எனவே உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு சார்பிரைஸ் கொடுக்கும் விதமாகவும், போட்டியை பரபரப்பாக்கும் திட்டத்துடன் பிக்பாஸ் தற்போது அடுத்தடுத்து சில வைல்டு கார்டு போட்டியாளர்களை உள்ளே இறக்கியுள்ளனர். அதன்படி, பாக்யலட்சுமி, மகாநதி, அன்னம் போன்ற தொடர்களில் நடித்த திவ்யா கணேஷ், வைல்டு கார்டு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளார்.
#பிக்பாஸ் இல்லத்தில்.. #AmitBhargav 😎விரைவில்..
— Vijay Television (@vijaytelevision) October 28, 2025
Bigg Boss Tamil Season 9 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9#OnnumePuriyala#BiggBossSeason9Tamil#BiggBoss9#BiggBossSeason9#VijaySethupathi#BiggBossTamil#BB9#BiggBossSeason9#VijayTV… pic.twitter.com/edhNv5RmlI
மேலும், நடிகர் பிரஜின் அவரது மனைவி சாண்ட்ரா மற்றும் நடிகர் அமித் ஆகியோரும் வைல்டு கார்டு எண்ட்ரியில் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர்கள் வருகை பிக்பாஸ் நிகழ்ச்சியை மேலும் பரபரப்பாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், வினோத்திற்கும், திவாகருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. திவாகரை திட்டுவிட்டு வினோத் சென்றுவிடுகிறார்.
In the morning, darbees says Vinoth does not have “Thagudi” “tagadharam” 👀, to talk to him #BiggBossTamil9#biggbosstamilpic.twitter.com/GpL6fJUs8X
— Jack (@jack_elcapitan) October 28, 2025
தொடர்ந்து, அரோரா, விக்ரம், கம்ருதீன், துஷார் ஆகியோருடன் பேசிக் கொண்டிருக்கும் திவாகர், பேசுவதற்கு கூட ஒரு தகுதி, தராதரம் வேண்டும் என்று வினோத்தை கூறுகிறார். இதனால், கடுப்பானவர்கள் இப்படிதான் பேசக் கூடாது என்று சொல்கிறோம் என திவாகரை திட்டுகிறார்கள். இதனுடன் இந்த வீடியோ முடிவடைகிறது. இந்த வீடியோவை இணையத்தில் பகிரும் நெட்டிசன்கள் திவாகர், பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ஆரம்பத்தில் எதுவும் தெரியாதது போல் இருந்தார். இப்பொழுது விளையாட்டை எப்படி விளையாட வேண்டும் என்று கற்றுக் கொண்டு விளையாடி வருகிறார் என்று அவரை விமர்சித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us