வம்பில் மாட்டிய வாட்டர் மிலன் ஸ்டார்; பிக்பாஸ் வீட்டில் திவாகர் - விக்ரம் மோதல்: பின்னணி என்ன?

நான் டியூப்பில் வீடியோ பதிவிட்டு, பிரபலமானவன் அல்ல, நான என் நடிப்புத்திறமையால் பிரபலமடைந்தேன். என்னை வைத்து வீடியோ வெளியிட்டு பல யூடியூப்பர்கள் சம்பாதித்தனர்,

நான் டியூப்பில் வீடியோ பதிவிட்டு, பிரபலமானவன் அல்ல, நான என் நடிப்புத்திறமையால் பிரபலமடைந்தேன். என்னை வைத்து வீடியோ வெளியிட்டு பல யூடியூப்பர்கள் சம்பாதித்தனர்,

author-image
D. Elayaraja
New Update
youtubers Diqw

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் பெரிய எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், வாட்டர் மிலன் ஸ்டார் என்ற அடைமொழியுடன் சமூகவலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட திவாகர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது ஒரு பக்கம் விமர்சனங்களை கொண்டு வருகிறது. அதே சமயம் சக பிக்பாஸ் போட்டியாளரே அவரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Advertisment

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 8 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 9-வது சீசன் கடந்த அக்டோபர் 5-ந் தேதி தொடங்கியது. இதற்கு முன்பு நடந்த சீசன்களை போல் இல்லாமல் இந்த சீசனில் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற பல போட்டியாளர்கள் நிகழ்ச்சியில், பங்கேற்றுள்ளனர். குறிப்பாக, யூடியூப்பர்கள் குறித்தும், சினிமா நடிகர்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களை கூறி வந்த வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட டெய்லர் அக்கா உள்ளிட்ட பலர் உள்ளனர்.

இதன் மூலம் இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி எதிர்பார்ப்புகள் இரந்தாலும் ஒரு பக்கம் கடுமையாக விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. இதனிடையே, யூடியூப்பில் வீடியோ பதிவிட்டு அதன்மூலம் வருமானம் ஈட்டி வருபவர்கள் குறித்து தரக்குறைவாக சிறுமைப்படுத்தும் வகையில், திவாகர் பேசியுள்ளதாக சக பிக்பாஸ் போட்டியாளர் விக்கல்ஸ் விக்ரம் கருத்து தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் 3-வது நாளான நேற்று, போட்டியாளர்கள் தங்கள் கடந்து வந்த பாதை குறித்து பேசுவதை டாஸ்காக கொடுக்கப்பட்டது.

அப்போது தனது வாழ்க்கை கடந்து வந்த பாதை குறித்து பேசிய திவாகர், மற்றவர்களை போல் நான் டியூப்பில் வீடியோ பதிவிட்டு, பிரபலமானவன் அல்ல, நான என் நடிப்புத்திறமையால் பிரபலமடைந்தேன். என்னை வைத்து வீடியோ வெளியிட்டு பல யூடியூப்பர்கள் சம்பாதித்தனர், அவர்கள் என்னை பற்றி எதிர்மறையான கருத்துக்களை பேசி எனக்கு தவறான ஒரு பிம்பத்தை உருவாக்கிவிட்டார்கள். உருவகேலி தொடங்கி எனது தனிப்பட்ட வாழ்க்கை வரை யூடியூப்பில் பலர் என்னை விமர்சித்துள்ளனர் என்று திவாகர் கூறியிருந்தார்.

Advertisment
Advertisements

இவரின் பேச்சை கேட்டு சக போட்டியாளர்கள் பலரும் அவரை பாராட்டிய நிலையில், விக்கல்ஸ் விக்ரம், தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இது குறித்து பேசிய அவர், யூடியூப்பர்கள் குறித்து இவ்வாறு பேசியிருக்க கூடாது. அவரது பேச்சு அவர்களை சிறுமைப்படுத்தும் விதமாக இருந்தது என்று நேரடியாக கருத்து தெரிவிக்க, எனது அனுபவங்களையே நான் இங்கு சொன்னேன். இதனால் பாதிக்கப்பட்டால் அதற்கு நாள் பொறுப்பில்லை என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையெ வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், சக போட்டியாளர்கள் சமாதானம் செய்து வைத்தனர்.

தனிப்பட்ட முறையில் திவாகர் பேசியது நியாமாக இருந்தாலும்,  பொதுவெளியில் பேசும்போது பொறுப்புடன் பேச வேண்டும் என்று தங்கள் கருத்துக்களை ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர். 

Bigg Boss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: