பிக்பாஸ் இந்த பெயரை கேட்டாளே சின்னத்திரை ரசிகர்கள் மட்டுமல்லாமல் நெட்டிசன்களும் உற்சாகமாகிவிடுவார்கள். அதற்கு முக்கிய காரணம் இந்த நிகழ்ச்சியில் நடக்கும் சண்டையும் சச்சரவுகளும்தான். இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9-ந் தேதி தொடங்கியது.
வழக்கத்திற்கு மாறாக தொடக்கத்தில் இருந்தே பரபரப்பை கிளப்பி வரும் இந்த 6-வது சீசனில், ஜி.பி.முத்து முதல் நாளில் முத்திரை பதித்து வருகிறார். ரக்ஷிதா மகாலட்சுமி, அமுதவாணன் என ஒரு சில தெரிந்த முகங்கள் இருந்தாலும், ஜி.பி.முத்துவுக்கு சமமாக பிரபலமாகி வருபவர் மற்றொரு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி.
தொடக்கத்திலேயே ஜி.பி.முத்துவுக்கும் இவருக்கும் கடுமையாக மோதல் ஏற்பட்ட நிலையில், சக போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில் கடுமையாக விமர்சனங்களை பெற்ற தனலட்சுமி, தற்போது சக போட்டியாளர் அசல் கொலாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்த ப்ரமோவில், அசல் கொலாருடன் நேருக்கு நேர் நின்று பேசும் தனலட்சுமி என்ன என்ன அதுங்கற இதுங்கற தெரியுமாங்கற, என்று கேட்க மற்ற போட்டியாளர்கள் இருவரையும் சமாதானம் செய்கின்றனர். அதற்கு அசல் டீசன்டாக பேசு என்று சொல்ல நானும் டீசண்டாகத்தான் பேசுறேன் என்று தனலட்சுமி சொல்கிறார்.
தொடர்ந்து நானும் அன்னைல இருந்து பாத்துக்கிட்டு இருக்க ஆண்டினு சொல்ற நீ எதுக்கு என்ன அப்படி சொல்ர நா எப்படி இருந்தா உனக்கு என்ன பிரச்சினை, உனக்கு வலிக்குதா நீ சோறு போடுறியா, நீ பேசவ கூடாது என்று சொல்ல மற்ற போட்டியாளர்கள் தனலட்சுமியை சமாதானப்படுத்துகின்றனர். ஆனால் நான் வெளியில போறதுக்கும் ரெடி அவன் வந்ததில் இருந்து இப்படியேதான் பேசிட்டு இருக்கான் அவனை யாரும் கேட்க மாட்டிரீங்க என்று சொல்கிறார்.
இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வரும் நிலையில், அடுத்து என்ன நடக்கும் வர இறுதியில் கமல் யாருக்காவது குறும்படம் காண்பிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil