இன்று மெண்டல் ஹாஸ்பிட்டலாய் மாறிய "பிக்பாஸ்" வீடு: என்னா நடிப்பு "ஜூலி" !

அங்க கூட நம்ம காயத்ரி பைத்தியம் அக்கா, யாரைப் பற்றியோ வார்டன் சக்திகிட்ட குறை சொல்லிக்கிட்டுதான் இருக்காங்க. (பைத்தியமானாலும், உங்க ஸ்டைல் மாறவே இல்ல அக்கா)

என் நண்பர் சொல்கிறார் ” இந்த பிக்பாஸ் முழுவதும் ஸ்க்ரிப்ட் தான்” என்று. என் தோழி சொல்கிறாள் “அது எப்படி திடீர்னு பிந்து மாதவியை பிக்பாஸ் வீட்டிற்குள் அழைத்துக் கொண்டு வர முடியும்? அவரிடம் முதலில் சம்மதம் வாங்கி, பிறகு பேமண்ட் பேசி, அதற்கு அவர் ஒப்புக் கொள்ள வேண்டும். அதற்கேற்றார் போல் அவரது இதர கமிட்மென்ட்களை உடனே முடித்துக் கொடுக்க வேண்டும், அல்லது வேறு நேரத்திற்கு அதை மாற்றியமைக்க வேண்டும். அதை திட்டமிடவே அவருக்கு பல நாட்கள் வேண்டும். இவை அனைத்திற்கும் மேல், மன ரீதியாக பிக்பாஸில் கலந்து கொள்ள அவர் ரெடியாக வேண்டும். சும்மா! டக்குனு வந்து உட்கார்ந்து விட முடியாது. இது அனைத்தும் முன்கூட்டியே முடிவு செய்யப்பட்ட பக்கா ஸ்க்ரிப்ட்” என்று என் நண்பர் சொன்ன அதே விஷயத்தை சற்று விவரித்துச் சொன்னார் தோழி.

முதலில் இதைப் பற்றியெல்லாம் யோசித்த மக்கள், அதையெல்லாம் தற்போது விட்டுவிட்டு, ஓவியா ஆர்மிக்கு சப்போர்ட் செய்வதில் மும்முரமாக உள்ளனர். மக்கள், அவர்களுக்கு இருக்கும் பல பிரச்சனையில், அதற்கு மேல் பிக்பாஸ் குறித்து யோசிக்க விரும்பவில்லை.
நிலைமை இப்படியிருக்க, இன்று (செவ்வாய்) பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடக்க இருக்கும் கூத்துகள் குறித்த புரோமோவை பிக்பாஸ் டீம் வெளியிட்டுள்ளது. இதை ஒரு பைத்தியக்கார கூத்து எனலாம். ஐ மீன்… இன்றைய பிக்பாஸ் ஷோவில் பிக்பாஸ் வீடு ஒரு மனநல மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. போட்டியாளர்களில் சிலர் பைத்தியங்களாக நடிக்க வேண்டும் என்பது பிக்பாஸ் உத்தரவு. (இப்போ நடிக்க வேற செய்யனுமா!!?)

புரோமோவை பார்க்காமலேயே ஜூலியை நிச்சயம் ஒரு பைத்தியம் ரோல் செய்ய வைத்திருப்பார்கள் என்பதை நம்மால் கணிக்க முடிந்தது. அதேபோல், மிக அற்புதமாக பைத்தியம் போல் நடித்து வசனம் பேசியிருக்கிறார் ஜூலி. (புரமோவைப் பாருங்க!!) அதேபோல், ரைஸா, ஆரவ், காயத்ரி, ஓவியா, சினேகன் ஆகியோர் பைத்தியங்களாகவும், சக்தி பைத்தியங்களை மேய்க்கும் கண்காணிப்பாளராகவும், பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியராக வையாபுரியும் நடித்துள்ளனர். (நேற்று பேசின டயலாக் எஃபெக்ட் அப்படி)..

இதில், சினேகனின் நிலைமைதான் மிகவும் பரிதாபமாக நமக்கு காட்சியளிக்கிறது. எப்போது பார்த்தாலும், பெண் வேடங்கள் கொடுப்பது, சமையல் செய்யச் சொல்வது, புடவை போட்டியில் பங்கேற்க வைப்பது என சினேகனை பிக்பாஸ் டீம் நல்லா வச்சு செய்து வருகிறது. அவரும், சற்றும் சோர்வாகாமல் வாங்கிய ஊதியத்திற்கு நன்றாக சேவகம் செய்து வருகிறார். இந்த கேமில் கூட, வாயில் லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு நிஜ பைத்தியமாகவே வாழ்ந்திருக்கிறார் சினேகன்.

ஜூலியும், நான் யாருக்கும் சளைத்த பைத்தியம் அல்ல என்று, போட்டிப் போட்டுக் கொண்டு பைத்தியமாகியிருக்கிறார். ஆனால், அங்க கூட நம்ம காயத்ரி பைத்தியம் அக்கா, யாரைப் பற்றியோ வார்டன் சக்திகிட்ட குறை சொல்லிக்கிட்டுதான் இருக்காங்க. (பைத்தியமானாலும், உங்க ஸ்டைல் மாறவே இல்ல அக்கா).. தனது ‘அடிமை’ ஜூலியை…சாரி! ‘அடிமை’ ஜூலி என்கிற பைத்தியத்தை சாட்டை கொண்டு அடிக்க வருகிறார். (இதெல்லாம் பிக்பாஸ் புரமோ வீடியோவில் உள்ளதுங்கோ… நாங்களா எதுவும் ‘ஹாலுசினேஷன்’ பண்ணலீங்கோ!!)
பிக்பாஸ் வீடு பைத்தியக் கூடம் ஆனால் நமக்கு பிரச்சனை இல்லை… அதைப் பார்த்து நமக்கு பைத்தியம் பிடிக்காம இருந்தா சரி!.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close