ஆசிய கபடி போட்டியில் தங்கம், அர்ஜூனா விருது; பைசன் ஒரிஜினல் ஹீரோ: யார் இந்த மணத்தி கணேசன்?

துருவ் விக்ரம், லால், பசுபதி, அனுபமா பரமேஸ்வரி, ராஷிஷா விஜயன், அமீர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படம் தீபாவளி பண்டிகயை முன்னிட்டு இன்று (அக்டோபர் 17) வெளியாகியுள்ளது. வழக்கம்போல் இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

துருவ் விக்ரம், லால், பசுபதி, அனுபமா பரமேஸ்வரி, ராஷிஷா விஜயன், அமீர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படம் தீபாவளி பண்டிகயை முன்னிட்டு இன்று (அக்டோபர் 17) வெளியாகியுள்ளது. வழக்கம்போல் இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

author-image
D. Elayaraja
New Update
Screenshot 2025-10-18 021133

தமிழ் சினிமாவில் தான் இயக்கிய 4 படங்களையும் வெற்றிப்படங்களாக கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள படம் பைசன். கபடி விளையாட்டை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படம் மணத்தி கணேசன் என்ற அர்ஜூனா விருது பெற்ற கபடி வீரரின் வாழ்க்கை வரலாறு என்று கூறப்படுகிறது. 

Advertisment

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை உள்ளிட்ட 4 படங்களையும் வெற்றிப்படங்களாக கொடுத்த மாரி செல்வராஜ் அடுத்து துருவ் விக்ரம் நடிப்பில், பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார். லால், பசுபதி, அனுபமா பரமேஸ்வரி, ராஷிஷா விஜயன், அமீர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படம் தீபாவளி பண்டிகயை முன்னிட்டு இன்று (அக்டோபர் 17) வெளியாகியுள்ளது. வழக்கம்போல் இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனிடையே இந்த படம் கபடி விளையாட்டில் இந்தியாவுக்காக விளையாடி அர்ஜூனா விருது பெற்ற, மணத்தி கணேசன் என்பவரின் வாழ்க்கை வரலாறு தான் இந்த பைசன். இது குறித்து பி.பி.சி. தமிழ் யூடியூப் சேனலுக்கு மணத்தி கணேசன் அளித்துள்ள பேட்டியில், ஆரம்பத்தில், கடலை மிட்டாய்க்காகத்தான் கபடி விளையாட தொடங்கினோம். அதன்பிறகு அதுவே என் வாழ்க்கையாக மாறிவிட்டது, என் உடல் ஆவி, நாடி, நரம்பு என அனைத்துமே கபடியால் ஊறிப்போனது தான்.

Bison Dhuru

என் தலை காளை மாடு முட்டியது போல் இருக்கும் என்று சொல்வார்கள். வட இந்தியாவில் என்னை எருமை மாடு என்றும் அழைப்பார்கள். மற்ற அணிகளில் விளையாடி தான் நான் என் திறமையை வளர்த்துக்கொண்டேன். அதன்பிறகு என்னுடன் படித்தவர்களுடன் இணைந்து ஒரு கபடி அணியை உருவாக்கினேன். அப்போது சீரியர் பிளேயர் யாரும் வரவில்லை. அப்போது மணத்தியில் இருந்து ஒரு பையன் வந்திருக்கிறான் என்று சொன்னபோது தான் என் பெயர் மணத்தி கணேசன் என்று வந்தது. கபடி போட்டிக்காக தமிழகத்தில் இருந்து அர்ஜூனா விருது பெற்றவர்கள் இருவர் மட்டும் தான். அதில் ஒருவர் மணத்தி கணேசன் என்றாலும் மற்றொருவர் அவரின் ரோல்மாடலான ராஜரத்தினம்.

Advertisment
Advertisements

17 வயதில் நான் ராஜரத்தினத்தை பார்த்தேன். அவரை போல் ஒருநாள் விளையாட வேண்டும் என்று நினைத்தேன். 1990-ல் அவர் ஆசியகோப்பை போட்டியில் விளையாடினார். அவரைப்போல ஆசிய போட்டியில் விளையாட வேண்டும் என்று நினைத்தேன் 1988- முதல் 2002 வரை நான தமிழ்நாடு அணியில் தான் விளையாடினேன். வாலிப வயதில் காவல்துறை சொல்லி ஒரு அணிக்காக விளையாடியபோது என் கை எலும்பு இரண்டாக உடைந்தது. அதன்பிறகு கணேசன் அவ்வளவு தான் என்றார்கள். ஆனால் அடுத்த 27 நாளில் நான் மீண்டும் விளையாட வந்துவிட்டேன். அதன்பிறகு என்னை அனைத்து துறைகளிலும் விளையாட அழைத்தார்கள்.

1994-ல் ஆசியகோப்பை போட்டியில் இந்தியாவுக்காக தங்கம் வென்றுவிட்டு இந்தியா வந்தோம். அப்போது நான் திருநெல்வேலி வந்தபோது 160 காருடன் தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து என்னை வரவேற்க வந்தார்கள். துருவ் விக்ரமுக்கு நான் தான் பயிற்சி கொடுத்தேன். அவர் கடுமையாக உழைத்தார். என் பெரிய மகன் வயது தான் அவருக்கு. அவரையும் என் மகன் மாதிரி தான் பார்த்துக்கொண்டோம். இயக்குனர் என்ன சொன்னாரோ அதை செய்யுங்கள் என்று என்னிடம் துருவ் சொல்வார். இந்த பைசன் படத்தை பார்க்கும்போது 30 ஆண்டுக்கு முந்தைய என் கனவு தான் வந்தது. என் கனவை நினைவாக்கியவது துருவ் விக்ரம் என்று கூறியுள்ளார்.

1993-ம் ஆண்டு கபடி போட்டியின் மூலம் தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் பணி பெற்ற மணத்தி கணேசன் 40 வயதில் கபடி போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், தற்போது தூத்துக்குடி மாவட்ட கபடி அணி. தமிழ்நாடு மின்சார வாரிய கபடி அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: