/indian-express-tamil/media/media_files/2025/10/10/vareendar-2025-10-10-14-02-07.jpg)
Varinder Singh Ghuman: பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த வரீந்தர் சிங் குமான் புகழ் பெற்ற பாடிபில்டர் ஆவார். இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு ‘மிஸ்டர் இந்தியா’ பட்டம் பெற்றார். தொடர்ந்து, ’மிஸ்டர் ஆசியா’ போட்டில் இரண்டாம் இடத்தை பிடித்தார். இவரது சாதனைகள் இவரை ஆசியா பாடிபில்டர் அம்பாஸ்டராகவும் ஆக்கியது. கடந்த 2013-ஆம் ஆண்டு புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் அர்னால்ட், ஆசியாவில் தனது பொருளை பிரபலப்படுத்த வரீந்தர் சிங் குமானை தேர்ந்தெடுத்தார்.
சினிமா பயணம்
வரீந்தர் சிங் குமான் உலகின் முதல் சைவ (Vegetarian) பாடிபில்லார் ஆவார். பாடிபில்டிங்கில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து வரீந்தர் சிங் சினிமாவில் கவனம் செலுத்தினார். இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு பஞ்சாபியில் வெளியான ‘கபாடி ஒன்ஸ் அகேன்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து, ’ரோர் டைகர்ஸ் ஆப் தி சுந்தர்பன்ஸ்’, ‘மர்ஜாவான்’ போன்ற படங்களில் நடித்தார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘டைகர் 3’ திரைப்படத்தில் வரீந்தர் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பை பெற்று தந்தது. வரீந்தர் சிங் குமான் சொந்தமாக உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார். இவர் தனது சமூக வலைதளத்தில் மூலம் உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். இவருக்கு மில்லியன் கணக்கில் சமூக வலைதளத்தில் ஃபாலோவர்ஸ்களும் உள்ளனர்.
41 வயதில் மரணம்
இந்நிலையில், நடிகர் வரீந்தர் சிங் உடற்பயிற்சி செய்யும் பொழுது கையில் காயம் ஏற்பட்டு அமிர்தசரஸில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் திடீரென தோள் பட்டையில் வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். 41 வயதில் பிரபல பாடி பில்டர் வரீந்தர் சிங் உயிரிழந்த சம்பவம் திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் வெளியிட்டுள்ள பதிவில், “வரீந்தர் சிங் பஞ்சாப்பிற்கு பெருமை சேர்த்தவர். அவரது மரணம் நாட்டிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. பஞ்சாப் தனது பெருமையை இழந்துள்ளது. அவர் தனது கடின உழைப்பு மற்றும் சைவ வாழ்க்கை முறையால் உடற்தகுதி உலகில் புதிய அத்தியாயத்தை உருவாக்கினார். அவரது வாழ்க்கை எப்போதும் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் வரீந்தர் சிங் 2027-ஆம் ஆண்டு பஞ்சாபில் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.