என்னை சூரியன் முத்தமிட்டது! ஆசிர்வதிக்கப்பட்டவள் நான் - அனுஷ்கா சர்மா!

Anushka Sharma: வெஸ்டர்ன் உடை, டிரடிஷனல் சேலை என அனைத்து விதமான உடைகளிலும் ஸ்டன்னிங்காக தோற்றமளிக்கிறார். 

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா திரைப்படங்களில் இருந்து நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த இடைவெளியின் ஒவ்வொரு தருணத்தையும் அவர் அனுபவித்து மகிழ்வது, அவரது ஃபோட்டோக்களின் மூலம் நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது. அனுஷ்காவின் கணவர் விராட் கோலி, மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தி வருகிறார். அனுஷ்காவும் அங்கேயே மையமிட்டிருக்கிறார்.

நேற்று இன்ஸ்டாகிராமில் அனுஷ்கா தனது படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ‘சன் கிஸ்டு & பிளஸ்டு’ என்றும் குறிப்பிட்டிருந்தார். அந்தப் படத்தில், ஆரஞ்சு, வெள்ளை, பிங்க் நிற பிகினி உடை, சன் கிளாஸ் ஆகியவற்றுடன் கடற்கரை மணலில் அமர்ந்திருந்தார் அனுஷ்கா. முகத்தில் 1000 வாட்ஸ் பல்பின் பிரகாச புன்னகை!

 

View this post on Instagram

 

Sun kissed & blessed ????⛱️

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on


அனுஷ்காவின் அந்தப் படத்தை ரசித்தவர்களில் அவரது கணவர் விராத்  கோலியும் ஒருவர். ஹார்ட்டின் மற்றும் லவ் ஸ்மைலி ஆகியவற்றை கமெண்ட் பாக்ஸில் தட்டியிருந்தார் அவர். அதோடு பல ரசிகர்களும் அனுஷ்காவின் இந்த படத்திற்கு லைக்ஸ் மழையை பெய்ய விட்டுக் கொண்டிருந்தனர்.  ஒருவர் “ஹலோ சன்ஷைன்” என்றும் இன்னொருவர் “நைஸ் பிக்சர்” என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

முன்னதாக ஃபிலிம்பேர் பத்திரிகைக்காக நடத்தப்பட்ட ஃபோட்டோ ஷூட்டிலிருந்து, பல படங்களை அனுஷ்கா பகிர்ந்துள்ளார். அதில், வெஸ்டர்ன் உடை, டிரடிஷனல் சேலை என அனைத்து விதமான உடைகளிலும் ஸ்டன்னிங்காக தோற்றமளிக்கிறார்.

இதற்கிடையே கடைசியாக ’ஜீரோ’ என்ற படத்தில் நடித்திருந்தார் அனுஷ்கா. அதில், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் நாசா விஞ்ஞானி ஆஃபியா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். இருப்பினும் இந்தப் படம் பாக்ஸ் ஆஃபிஸில் தோல்வியை தழுவியது.

தற்போது அனுஷ்காவின் தயாரிப்பு நிறுவனம் நெட்ஃப்ளிக்ஸிற்கு வெப் சிரீஸ்களை தயாரித்து வருகிறது. வேறெதும் படத்தில் ஒப்பந்தமாகாமல் இருக்கிறார் அனுஷ்கா!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close