ஒரே படத்தில் உலக பேமஸ்... கூகுள் தேடலில் டாப்; இந்த நடிகை யார் தெரியுதா?

ஒரே படத்தில் ரசிகர்களை கவர்ந்து நட்சத்திர அந்தஸ்தை பெற்ற பிரபல நடிகை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒரே படத்தில் ரசிகர்களை கவர்ந்து நட்சத்திர அந்தஸ்தை பெற்ற பிரபல நடிகை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
tripti

ஒவ்வொரு ஆண்டும் திரையுலகில் பல்வேறு நிகழ்வுகள் நடந்து வருகிறது. திரைப்பிரபலங்கள் திருமணம், விவாகரத்து என பல நிகழ்வுகள் நடந்து வருகிறது. பலர் நட்சத்திர அந்தஸ்தை பெறுவதற்காக போராடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு சில நிமிட காட்சியில் திரையுலகையை ஒரு நடிகை உலுக்கினார். கடந்த ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நாயகி அவர் தான். அவரும் வேறு யாரும் இல்லை நடிகை திரிப்தி டிம்ரி தான்.

Advertisment

கடந்த 2017-ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ‘மாம்’  திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை திரிப்தி டிம்ரி. தொடர்ந்து, ‘லைலா மஜ்னு’, ’புல்புல்’, போன்ற திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றார். கடந்த ஆண்டு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தி ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான ‘அனிமல்’ திரப்படத்தில் இவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

ராஷ்மிகா கதாநாயகியாக நடித்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை குவித்தது. இந்த படத்தில் நடிகை திரிப்தி டிம்ரி ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்திருப்பார். கதாநாயகி கூட இல்லை, ஒரு சில காட்சிகளில் மட்டுமே தோன்றுவார். ஆனாலும், அந்த ஒற்றை கதாபாத்திரத்தை வைத்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். இடைவேளை வரை திரையை ராஷ்மிகா ஆக்கிரமிக்க அதன்பிறகு தனது ஒற்றை கவர்ச்சி காட்சியால் ராஷ்மிகாவை ஓரம் கட்டிவிட்டு மொத்த திரையும் ஆக்கிரமித்தார்.

’அனிமல்’ திரைப்படத்திற்கு பிறகு நடிகை திரிப்தி டிம்ரி பல படங்களில் நடித்துள்ளார். ஆனாலும், ‘அனிமல்’ திரைப்படம் தான் திரிப்தி டிம்ரியை உலகிற்கு அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல் அவர் வாழ்க்கையை திருப்பி போட்டது. இப்படத்திற்கு பிறகு, திரிப்தி டிம்ரிக்கு வாய்ப்புகள் அதிகரித்தன. ‘பேட் நியூஸ்’,  ’பூல் புலையா 3’ போன்ற படங்கள் வெளியாகின. 'பேட் நியூஸ்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் கிட்டத்தட்ட ரூபாய் 120 கோடிகள் வரை வசூல் செய்தது. நடிகை திரிப்தி டிம்ரி சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அடிக்கடி இணையத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இவரது புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.  

Advertisment
Advertisements


 

Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: