80 வயதிலும் மாறாத சுறுசுறுப்பு; ஸ்கூட்டியில் லிப்ட் கேட்டு சினிமா விழாவுக்கு சென்ற நடிகை: இவர் யார் தெரியுமா?

சினிமா நிகழ்ச்சி ஒன்றுக்கு காரில் புறப்பட்ட இந்த நடிகை, டிராபிக் அதிகமானதால், நடு ரோட்டில் காரில் இருந்து இறங்கி லிப்ட் கேட்டு ஸ்கூட்டியில் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளார்.

சினிமா நிகழ்ச்சி ஒன்றுக்கு காரில் புறப்பட்ட இந்த நடிகை, டிராபிக் அதிகமானதால், நடு ரோட்டில் காரில் இருந்து இறங்கி லிப்ட் கேட்டு ஸ்கூட்டியில் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளார்.

author-image
D. Elayaraja
New Update
Sharmila Tagore

பாலிவுட் மற்றும் பெங்காலி சினிமாவின் என்றும் புகழ் பெற்ற நட்சத்திரமாகத் திகழ்பவர் ஷர்மிளா தாகூர். திரையில் அவர் வெளிப்படுத்தும் நடிப்பு மட்டுமல்லாமல், அவருடைய குழந்தைத்தனமான துடிப்பான ஆளுமை மற்றும் சாகச மனப்பான்மை உள்ளிட்ட பல பண்புகள் இன்றும் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன. தற்போது அவர் 80 வயதிலும் சோர்வடையவில்லை என்பதை சமீபத்தில் அவருடைய மகளும் நடிகையுமான சோஹா அலி கான் வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisment

ஊடகவியலாளர் நயன்தீப் ரக்ஷித்துடனான உரையாடலில், சோஹா அலி கான் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார். ஒருமுறை அம்மா ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்குச் செல்லும்போது, டெல்லியில் அதிக போக்குவரத்து நெரிசல் இருந்தது. உடனே அவர் காரில் இருந்து இறங்கி, சாலையின் ஓரத்தில் ஸ்கூட்டரில் வந்த ஒரு பெண்ணை நிறுத்தி, விழா நடக்கும் இடத்திற்கு அருகில் தன்னை இறக்கிவிடும்படி கேட்டுள்ளார்.

அந்தப் பெண் பாதி வழியில் இறக்கிவிட்டதும், அவர் அங்கிருந்து வேறொரு பைக்கில் வந்த ஒருவரை நிறுத்தி, அந்த பைக்கில் ஏறி விழா நடக்கும் இடத்திற்கு அருகில் வந்து சேர்ந்தார். இதைக் கேட்ட நான், 'அம்மா, உங்களுக்கு 80 வயதாகிறது, இது டெல்லி!' என்று அதிர்ச்சியுடன் கூறினேன். ஆனால், எப்போதும் துடிப்பான ஷர்மிளா தாகூர், தன் மகளிடம், அந்த நபர் என்னை பாதி வழியில் இறக்கிவிட்டார், மீதி தூரத்தை நான் நடந்து சென்று புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன்” என்று சாதாரணமாகக் கூறியுள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஷர்மிளா தாகூர் சுமன் கோஷ் இயக்கத்தில் வெளியான 'புரடான்' (Puratawn) என்ற உளவியல் த்ரில்லர் படத்தின் மூலம் பெங்காலி சினிமாவுக்குத் திரும்பினார். இது அவர் 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடித்த பெங்காலி படம் ஆகும். இந்தத் திரைப்படம் அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த பெங்காலி படங்களில் 5-வது இடத்தைப் பிடித்ததுடன், அவருடைய நுணுக்கமான நடிப்புக்காக விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது. அதற்கு முன்பு, அவர் மனோஜ் பாஜ்பாயுடன் இணைந்து நடித்த 'குல்மோஹர்' (Gulmohar) என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். அவர் தனது அடுத்த படம் பற்றி இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், அவரை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisment
Advertisements

Sharmila Tagore1

ஷர்மிளா தாகூருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது அதிர்ஷ்டவசமாக ஆரம்பக்கட்ட (stage zero) நிலையில் கண்டறியப்பட்டது. இதனால் அவர் புற்றுநோய்க்கு கீமோதெரபியைத் தவிர்க்க முடிந்தது, மேலும் அறுவை சிகிச்சை மூலம் கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. கரண் ஜோஹரின் 'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் அவர் இதனைப் பகிர்ந்துகொண்டபோது, தன் சிகிச்சை காரணமாகத்தான் 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஏற்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

திரைக்கு வெளியே, ஷர்மிளா தாகூர் தொடர்ந்து தன் விருப்பத்தின்படியே வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அவர் தனது பெரும்பாலான நேரத்தை டெல்லியில் தனியாகச் செலவழித்து, தனது சுதந்திரத்தை அனுபவிக்கிறார். சமீபத்தில், தன் மகள் சோஹா மற்றும் சகோதரி சபா அலி பட்டோடி ஆகியோருடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு, குடும்பத்தின் நெருக்கமான பிணைப்பை வெளிப்படுத்தினார்.

பாலிவுட்டில் அவர் தனது ஆரம்ப நாட்களிலிருந்து, பெங்காலி சினிமாவுக்கு அவர் வெற்றிகரமாகத் திரும்பியது வரை, ஷர்மிளா தாகூர் தொடர்ந்து ஒரு உத்வேகமாக இருக்கிறார். அவருடைய அச்சமற்ற மனப்பான்மை, கலை மீதான அர்ப்பணிப்பு மற்றும் வாழ்க்கையின் மீதான ஆர்வம் ஆகியவை வளரும் நடிகர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக அமைகின்றன. 80 வயதிலும் கூட, ஆர்வத்திற்கும் ஆற்றலுக்கும் வயது ஒரு தடையில்லை என்பதை அவர் அனைவருக்கும் நினைவுபடுத்துகிறார்.

Tamil Cinema Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: