சந்திரமுகியில் குழந்தையாக வந்த பொம்மி: இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?

சந்திரமுகி படத்தில் பொம்மியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த பிரஹர்ஷிதாவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இந்நிலையில் அவர் சந்திரமுகி 2ஆம் பாகத்தில் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

praharshitha
Bommi who came as a child in Chandramukhi movie; Do you know how she is now?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான ‘சந்திரமுகி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா, நாசர், வடிவேலு உள்ளிட்ட பல நடிகர்கள் இதில் நடித்திருந்தனர். சந்திரமுகி படம்’ சென்னை சாந்தி திரையரங்கில் 801 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.  

இந்த படத்தில் வந்த அந்தித்தோம் பாடல் அப்போது பட்டி, தொட்டிகளில் பயங்கர ஹிட். இதில் ரஜினிகாந்த், பொம்மியாக வரும் குழந்தையிடம் தன் பாடலின் சிறப்பு பற்றி பாடுவார். இதில் பொம்மியாக, குழந்தை நட்சத்திரமான பிரஹர்ஷிதா நடித்தார். படம் வெளியான பிறகு ரசிகர்கள் அவரை பொம்மி என்ற பெயரில்தான் அழைக்கத் தொடங்கினர்.

அதைத் தொடர்ந்து பிரஹர்ஷிதா பல படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார், இப்போது அழகான இளம் பெண்ணாக இருக்கும் பிரஹர்ஷிதா ஒரு குறிப்பிடத்தக்க குறும்படத் தயாரிப்பாளரும் ஆவார், மேலும் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் பிரஹர்ஷிதாவுக்கு திருமணம் முடிந்தது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

தற்போது பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ஆனால் இதில் ரஜினிகாந்துக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். வடிவேலும் படத்தில் இருக்கிறார். ஆனால் முதல் பாகத்தில் பொம்மியாக நடித்த பிரஹர்ஷிதா இப்படத்தில் நடிக்கிறாரா என தெரியவில்லை.

இந்நிலையில் பிரஹர்ஷிதா ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் கம்பெனி ஒன்றின் பணிகளை செய்து வருவதாகவும், பல்வேறு கதைகளை கேட்டு வருகிறேன். விரைவில் என்னை வெள்ளித்திரையில் காணலாம் என்று கூறியுள்ளார். ஆனால் சந்திரமுகி 2ஆம் பாகத்தில் நடிப்பது குறித்து எதுவும் சொல்லவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bommi who came as a child in chandramukhi movie do you know how she is now

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express