பட்ஜெட் ரூ. 15 கோடி... பாக்ஸ் ஆபீஸில் ரூ. 900 கோடியை அள்ளிய படம்; இந்த ஓ.டி.டி-யில் இருக்கு!

ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவாகி பாக்ஸ் ஆபீஸில் ரூ.900 கோடியை அள்ளிய படம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவாகி பாக்ஸ் ஆபீஸில் ரூ.900 கோடியை அள்ளிய படம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
super star

திரைப்படங்கள் பொதுவாக நம் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக உள்ளது. சமூகம், உலகம் மற்றும் மனிதர்கள் சார்ந்து திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. ஒரு திரைப்படத்தின் கதைக்களம் நன்றாக இருந்தால் அப்படி எப்படியாவது வெற்றி பெற்று விடும். அதே அந்த திரைப்படத்தில் கதைக்களம் சரியில்லை என்றால் என்ன குட்டிக்கரணம் போட்டாலும் அது தோல்வியை தான் சந்திக்கும். ஒரு படத்தில் எத்தனை  நட்சத்திரங்கள் இருந்தாலும், எவ்வளவு வி.எப்.எக்ஸ் இருந்தாலும், எத்தனை ஆக்‌சன் காட்சிகள் இருந்தாலும், எத்தனை சிறப்புப் பாடல்கள் இருந்தாலும், கதை நன்றாக இருந்தால் மட்டுமே அப்படம் ஓடும்.

Advertisment

இது உலக சினிமாவில் ஏற்கனவே பல முறாஇ நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போது நாம் பார்க்கப்போவது அப்படிப்பட்ட வலுவான கதையம்சம் கொண்ட படம் தான். இந்த படத்தில் அதிக நட்சத்திர நடிகர்களும் கிடையாது, புரமோஷனும் கிடையாது. படம் எந்த ஆரவாரமும் இல்லாமல் திரையரங்குகளுக்குள் நுழைந்த இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.  ரூ.900 கோடி வசூலித்து இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக மாறியது. 

இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ. 15 கோடி மட்டும்தான். இந்தப் படத்தின் கதை மிகவும் சுவாரஸ்யமானது. 15 வயது சிறுமியான இன்சியா மாலிக், பரோடாவில் தனது முஸ்லிம் குடும்பத்துடன் வசிக்கிறார். இன்சியா பாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர், மேலும் அவரது தாயார் அவரை ஆதரிக்கிறார், ஆனால் அவரது தந்தை பாடகியாக வேண்டும் என்ற அவரது கனவை எதிர்க்கிறார்.

இன்சியா தனது தாய் பரிசளித்த மடிக்கணினியைப் பயன்படுத்தி 'சீக்ரெட் சூப்பர் ஸ்டார்' என்ற பெயரில் யூடியூப்பில் வீடியோவைப் பதிவேற்றுகிறாள். அவள் ஒரே இரவில் இசையமைப்பாளர் ஒருவரின் கவனத்தை ஈர்க்கிறாள். இன்சியாவை ஒரு பாடலைப் பதிவு செய்து தருமாறு அந்த இசையமைப்பாளர் கேட்கிறார். இன்சியா அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்.

Advertisment
Advertisements

இறுதியில் இன்சியா ஆணாதிக்கம் உள்ளிட்ட பல தடைகளைத் தாண்டி ஒரு பெண் பாடகியாக மாறுகிறார். அந்தப் பெண் தன் கனவை எப்படி நனவாக்கினார் என்பதை அறிய, இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். அந்த படத்தின் பெயர்  ’சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’. அத்வைத் சந்தன் எழுதி இயக்கிய இந்த படத்தில்  ஜைரா வாசிம் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அமீர்கான், மெஹர் விஜ் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபீஸை கலங்கடித்த ’சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ திரைப்படம் இப்போது நெட்பிக்ஸில் ஓ.டி.டி தளத்தில் ஸ்ட்ரீம்மாகி வருகிறது..

Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: