நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நடிகர் நாக சைதன்யா காதல் திருமணம், வெள்ளிக்கிழமை கோவா வடேகர் பீச்சில் உள்ள டபிள்யூ நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. நடிகர் நாக சைதன்யா இந்து மதத்தை சார்ந்தவர் என்பதாலும், நடிகை சமந்த கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர் என்பதாலும் இரு மதத்தின் அடிப்படையிலும் இரு நாட்கள் திருமணம் நடத்தப்பட்டது. வரும் 10-ம் தேதி ஹைதராபத்தில் அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
திரைப்படத்தில் மட்டுமல்லாமல், நிஜ உலகிலும் காதலித்து கரம்பிடித்த இந்த ஜோடி குறித்த கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
சென்னை பல்லாவரத்தை சேர்த்வர் தான் இந்த கியூட் பொண்ணு சமந்தா. ஸ்டெல்லா மேரிஸ் காலேஜ்ல படிச்சுகிட்டே, மாடலிங்கா பார்ட் டைம்ல வேலை செஞ்சுருக்காங்க. அப்படி மாடலிங் மூலமா திரையுலகத்துக்கு வந்தவங்க தான் இந்த சமந்தா.
நடிகை சமந்தா, நாக சைதன்யாவுக்கு ஜோடியாக ஏ மாய சேசாவே, ஆட்டோ நகர் சூர்யா, மனம் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். அந்த சமயத்தில் அவர்களிடையே தோன்றிய நட்பு நாளடைவில் காதலாக மலந்த்து. இதில் குறிப்பாக சொல்லப்போனால், சமந்தாவின் முதல் படம் “ஏ மாய சேசாவே”-விலேயே நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்தார் என்பது தான். இந்த படத்தில் இருவருக்கிடையான கெமிஷ்ட்ரி அனைவராலும் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கவுதம் மேனன் இயக்கத்த்தில் உருவான இந்த “ஏ மாய சேசாவே” செம்ம ஹிட் அடித்தது. தமிழில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் ஹிட் கொடுத்த விண்ணய் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷன் தான் “ஏ மாய சேசாவே”.
இதன் பின்னர் “பானா காத்தாடி” படத்தில் தோன்றிய சமந்தா தனது நல்ல ஃபெர்பார்மன்சை வெளிப்படுத்தினார். ஆனாலும், அதற்கு பின்னர் வந்த “மாஸ்கோவின் காவிரி” சமந்தாவிற்கு ஏமாற்றத்தையே கொடுத்தது.
மகேஷ் பாபு, சமந்தா நடிப்பில் வெளியான தூக்குடு படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. இதன் பின்னர் சில கெஸ்ட் ரோல்களில் நடித்தாலும், ராஜமௌலியின் ஈகா ( தமிழில்‘நான் ஈ’) சமந்தாவை சக்சஸ்ஃபுல் ஹீரோயினாக தெலுங்கு திரையுகில் கொண்டுவந்தது. தெலுங்கு தமிழ் என இரண்டிலுமே ப்ளாக் பஸ்டர் அடித்தது.
இதன் பின்னர் கவுதம் வாசுதேவ் மேனன் மூலம் மீண்டும் பை-லிங்குவல் படமான நீ தானே பொன் வசந்தத்தில் தோன்றினார். இப்படம் என்னவோ ஒரு மிக்ஸ் ரீவிவையே கொடுத்தது என்ற போதிலும், சமாந்தாவின் நடிப்பு பாராட்டத்தக்க வகையில் இருந்தது. அடுத்த இரண்டு வருடங்களுக்கு படம் ஏதும் இல்லாத நிலையில் தவித்த சமந்தாவுக்கு, கடந்த 2014-ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த மனம் திரைப்படம் சமாந்தா வாழ்க்கையில், தீப ஒளி ஏற்றியது என்று தான் கூற வேண்டும். அப்படத்தில், நாக சைதன்யா, நாகார்ஜூனா, அகில் அக்கினேனி உள்ளிடோருடன் இணைந்து கலக்கியிருந்தார் சமந்தா. இந்த படம் சமந்தாவின் சினிமா வாழ்க்கையில், முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
மனம் திரைப்படத்திற்கு பின்னர் மீண்டும் தமிழுக்கு வந்த சமந்தா அஞ்சான் திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். தெலுங்கில் கொடிகட்டி பறந்த சமந்தாவிற்கு தமிழிலும் கொடி பறக்க ஆரம்பானது. தொடர்ந்து, தமிழகத்தின் முக்கிய ஹீரோக்களான விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என அனைவருடன் இணைந்து நடித்தார்.
தற்போது ரொம்ப பிஸியாக இருக்கும் சமந்தா, திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாக கூறியிருக்கிறார். அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள மெர்சல் படத்தில் நடிகர் விஜய்யுடன் கைகோர்த்துள்ளார். இதேபோல, விஷாலுடன், இருப்பு திரை படத்திலும், சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதியுடனும், பெயரிடப்படாத படம் ஒன்றில் சிவகார்த்திகேயன் ஆகியோருடன் பிஸியாக நடித்து வருகிறார் சமந்தா.