சார்லி சாப்ளின் முதல் பாகம், 15 ஆண்டுகளுக்கு முன்பு ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் வெளியானது. அதன் 2-ம் பாகம் அதே பிரபுதேவா, நடிகர் பிரபு தவிர பெரும்பாலான கதாபாத்திர மாற்றங்களுடன் தயாரானது.
சார்லி சாப்ளின் கலகலப்பான காமெடி படம்! சார்லி சாப்ளின் 2-வும் அதே காமெடியை தொடர்கிற படம்தான். பிரபுதேவா ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்திருக்கிறார். இன்று (ஜனவரி 25) உலகம் முழுவதும் படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது.
படத்தின் கதை கலகலப்பானதுதான்… பிரபுதேவா, திருமண ஏற்பாடு செய்யும் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். 99 திருமணங்களை வெற்றிகரமாக நடத்திய நிறுவனம் அவருடையது. பிரபுதேவாவின் திருமணத்தை 100-வது திருமணமாக பார்க்க அவரது பெற்றோர்கள் விரும்புகிறார்கள்.
பிரபுதேவாவுக்கோ, நிக்கி மீது காதல்! நிக்கியும் காதலுக்கு ஓ.கே. சொல்கிறார். ஆனால் திடீர் திருப்பமாக நிக்கியின் நடத்தை மீது சந்தேகம் கிளப்புகிறார், பிரபுதேவாவின் நண்பர் விவேக். அதற்கு ஆதாரம் ஒன்றையும் விவேக் சமர்ப்பிக்க, திருமணத்தை நிறுத்துகிறார் பிரபுதேவா.
நிக்கியின் தந்தைதான் நடிகர் பிரபு. இதற்கிடையே நிக்கியின் கதாபாத்திரமான சாரா பெயரில் இன்னொரு பெண் நுழைய, கதையில் திருப்பங்களும் கலகலப்புமாக போகிறது.
A Super Fun Filled Family Entertainer #CharlieChaplin2 from Today#CC2fromToday@PDdancing @nikkigalrani @sakthinchid @adah_sharma @AmrishRocks1 @TSivaAmma @saregamaglobal @mounamravi@CtcMediaboy pic.twitter.com/QB038IUUGW
— CharlieChaplin2 (@YennaPadam) 25 January 2019
சார்லி சாப்ளின் 2 படம் தொடர்பான முதல்கட்ட கருத்துகளை பார்க்கலாம்.
டிவிட்டரில் முதல்கட்டமாக வரும் தகவல்கள், ‘சூப்பர் காமெடி நிறைந்த ஃபேமிலி எண்டர்டெயினர்’ என வருகின்றன.