மெகாஹிட் படத்தின் ரீமேக், சரத்குமாரை காப்பி அடித்த சிரஞ்சீவி: அங்கேயும் படம் செம்ம ஹிட்டு!

சரத்குமார் நடித்து மெகா ஹிட்டான படத்தை நடிகர் சிரஞ்சீவி தெலுங்கில் ரீமேக் செய்து நடித்த நிலையில் அப்படம் அங்கேயும் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது.

சரத்குமார் நடித்து மெகா ஹிட்டான படத்தை நடிகர் சிரஞ்சீவி தெலுங்கில் ரீமேக் செய்து நடித்த நிலையில் அப்படம் அங்கேயும் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
sarath

1988-ம் ஆண்டு வெளியான 'கண் சிமிட்டும்’ நேரம் படத்தின் மூலம் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் சரத்குமார். அதன்பிறகு விஜயகாந்த் நடித்த புலன்விசாரணை உட்பட பல படங்களில் வில்லனாக நடித்திருந்த இவர், ஒரு கட்டத்தில் ஹீரோவாக உருவெடுத்தார், இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் வெற்றிப்படங்களாக மாறியது.

Advertisment

குறிப்பாக ’சூர்யவம்சம்’, ’நாட்டாமை’, ’நட்புக்காக’, ’சிம்மராசி’ உள்ளிட்ட படங்கள், தமிழ் சினிமாவில் பெரிய வெற்றிப்படமாக இன்றும் சரத்குமாருக்கு தமிழ் சினிமாவின் அடையமாக இருக்கிறது. தொடர்ந்து ஹீரோவாக நடித்து வந்த சரத்குமார் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ’ஜக்குபாய்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அதன்பிறகு முக்கிய கேரக்டரில் நடிக்க தொடங்கிய சரத்குமார், தற்போது பல படங்களை கைவசம் வைத்து நடித்து வருகிறார்.

சமீபத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டியூட் படத்தில் கூட சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். மேலும், இப்போது இளம் நடிகர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். நடிகர் சரத்குமார் நடித்த படங்களில் நட்புக்கு அடையாளமாக கூறப்படும் திரைப்படம் ‘நட்புக்காக’. விஜயகுமார் மற்றும் சரத்குமார் இடையே இருக்கும்  நட்பை எடுத்துக் கூறும் வகையில் உருவான இந்த படத்தில் சரத்குமார், அப்பா - மகன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இப்படத்தில் சிம்ரன், மன்சூர் அலிகான் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 1998-ஆம் ஆண்டு இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ‘நட்புக்காக’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் இன்று வரையிலும் கேட்டால் தாளம் போட செய்யும். இப்படம் அந்த காலத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. ‘நட்புக்காக’ திரைப்படத்தை பார்த்த நடிகர் சிரஞ்சீவி தெலுங்கில் அப்படத்தை ரீமேக் செய்து நடித்தார்.

Advertisment
Advertisements

இந்நிலையில், ‘நட்புக்காக’ திரைப்படத்தின் ரீமேக் குறித்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசியதாவது, “1997-ஆம் ஆண்டே நடிகர் சரத்குமாருக்கு அப்பா கதாபாத்திரம் கொடுத்து நடிக்கச் சொன்னார்கள். ‘நட்புக்காக’ திரைப்படத்தில் சரத்குமார், அப்பா மற்றும் மகன் வேடத்தில் நடித்திருப்பார். இதில், அப்பா வேடம் தான் பயங்கர ஹிட்டானது. இதை பார்த்து அசந்து போன நடிகர் சிரஞ்சீவி, சரத்குமாருக்கு போன் செய்து அப்பா கதாபாத்திரத்திற்கு எப்படியெல்லாம் மேக்அப் போட்டார்கள் என்று கேட்டுக் கொண்டு அப்படியே மேக்அப் போட்டு நடித்தார்.  சரத்குமாரின் போட்டவை வைத்துக் கொண்டு மேக்அப் எல்லாம் அப்படியே செய்தார். அந்த படம் தெலுங்கிலும் பெரிய ஹிட்டடித்தது” என்றார்.

R Sarathkumar Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: