Advertisment

ஜோதிகா வழியில் ஷாலினி அஜித்? தல ரசிகர்களுக்கு கொண்டாட்ட அப்டேட்

shalini Ajith reentry to tamil cinema: 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார் நடிகை ஷாலினி அஜித்.

author-image
WebDesk
Feb 13, 2021 17:46 IST
Cinema news in tamil shalini Ajith reentry to tamil cinema from making ponniyin silvan

Cinema news in tamil:  நடிகர் அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி அஜித் மீண்டும் திரையில் தோன்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகை ஷாலினி 90-களின் இறுதியிலும், 2000-ம் ஆண்டின் தொடக்கத்திலும் பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜயுடன் 'காதலுக்கு மரியாதை', 'கண்ணுக்குள் நிலவு', நடிகர் மாதவனுடன் 'அலைபாயுதே', நடிகர் அஜித்துடன் 'அமர்க்களம்' என தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களோடு நடித்திருந்தார். நடிகர் பிரசாந்துடன் இவர் நடித்த 'பிரியாத வரம்' வேண்டும் திரைப்படமே இவரது கடைசி திரைப்படமாக அமைந்திருந்தது.

Advertisment

நடிகர் அஜித்தை திருமணம் செய்து கொண்டதால் திரைப்படங்களில் நடிக்க ஷாலினி பெரிதும் விரும்பவில்லை. இந்த நிலையில் இயக்குனர் மணி ரெத்தினம் இயக்கிய வரும் அவரது கனவு திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை ஷாலினி ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடிகை ஷாலினி ரீ-என்ட்ரி கொடுப்பது தல அஜித் ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டமாக இருக்கும்.

நடிகை ஜோதிகா தற்போது ரீ-என்ட்ரி கொடுத்து தமிழ் சினிமாவையே ஒரு கலக்கு கலக்கி வருகிறார். நடிகை ஷாலினியும் அவரை போல கலக்க வாய்ப்புள்ளது. ஆனால் நடிகை ஷாலினி, நடிகை ஜோதிகா போல தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக 'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்து. ஆனால் தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, சோபிதா துலிபாலா மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " t.me/ietamil

#Thala Ajith #Shalini Ajith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment