Advertisment

விரைவில் துருவ நட்சத்திரம் ரிலீஸ்.. நடிகை வித்யா பாலனின் புதிய பட டிரைலர்.. மேலும் செய்திகள்

அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்று சேரக் கூடிய கதைகளையே தேர்வு செய்து வருகிறேன் என்கிறார் நடிகர் பிரபாஸ்.

author-image
WebDesk
New Update
விரைவில் துருவ நட்சத்திரம் ரிலீஸ்.. நடிகை வித்யா பாலனின் புதிய பட டிரைலர்.. மேலும் செய்திகள்

சூது கவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் வசந்த் ரவி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

சூது கவ்வும் படத்துக்கு பிறகு பெரிய வெற்றியை நலன் குமாரசாமி பெறவில்லை. அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட காதலும் கடந்து போகும் படம்.

நினைத்த அளவுக்கு ஓடவில்லை. இரண்டு படங்களிலும் விஜய் சேதுபதியே நாயகனாக நடித்திருந்தார்.

இந்நிலையில், அடுத்த படத்திற்கான கதையுடன் காத்திருந்த நலன் குமாரசாமியிடம் கதை கேட்ட வசந்த் ரவி, அந்தப் படத்தை தானே தயாரிக்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

விரைவில் துருவ நட்சத்திரம்

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தயாரான படம் துருவ நட்சத்திரம். இந்தப் படம் 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு, விக்ரம் நடிப்பில் சில படங்கள் வெளியாகிவிட்டன.

இந்நிலையில் இந்தப் படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.

ஒரு மனம் நிற்க சொல்லுதே பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகள். ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் டீசரும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை: சூர்யா வேதனை

நடிகர் சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படம் நாளை வெளியாகிறது. இந்தப் படத்தில் பிரியங்கா கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும், சத்யராஜ், ராஜ்கிரண், சூரி உள்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

படத்துக்கு இமான் இசை அமைத்துள்ளார். படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பைப் பெற்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

படத்தின் புரோமஷுக்காக நடிகர் சூர்யா கேரள சென்றிருந்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கேரளத்தில் பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது வேதனை அளிக்கக் கூடிய நிகழ்வாகும். இப்படியொரு கொடுமை யாருக்கும் நடந்திருக்கக் கூடாது. இது நியாமற்ற செயல். அதை நினைக்கும்போது மனசு வலிக்கிறது என்றார்.

எதற்கும் துணிந்தவன் படமும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரானது தான் என்று கூறப்படுகிறது.

வித்யா பாலன் புதிய பட டிரைலர்

நடிகை வித்யா பாலன் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இவர் தேர்வு செய்யும் கதைகள் அனைத்துமே நேர்த்தியானதாக இருக்கும். வித்தியாசமான கதைகளை தேடி தேடி நடித்து வரும் வித்யா பாலன் ஜல்சா என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படம் ஓடிடி தளமான அமேஸான் பிரைமில் வரும் 18-ஆம் தேதி வெளியாகவுள்ளது. த்ரில்லர் வகை கதையான இந்தப் படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஷெஃபாலி ஷா, மாணவ் கெளல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சுரேஷ் திரிவேனி இயக்கியுள்ளார்.

அழுத்தம் இருக்கத் தான் செய்கிறது: பிரபாஸ்

பாகுபலி இரண்டு பாகங்களிலும் நடித்த பிறகு அந்தப் படத்துக்கு ஈடாக அடுத்தடுத்த படங்களை கொடுக்க வேண்டும் என்ற அழுத்தம் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்று நடிகர் பிரபாஸ் தெரிவித்தார்.

தெலுங்கு நடிகராக வளர்ந்து வந்த பிரபாஸ், எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் நடித்துள்ள இந்திய நட்சத்திரமாக உயர்ந்தார்.

தற்போது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அறியப்படும் நடிகராக பிரபாஸ் திகழ்கிறார்.

அழகில் ஷாலினியை ஓரங்கட்டிய மகள் அனோஷ்கா.. ஷாமிலி பகிர்ந்த லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்!

தற்போது அவரது நடிப்பில் ராதே ஷ்யாம் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் கைரேகை நிபுணராக அவர் நடித்துள்ளார்.

கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பூஜா ஹெக்டே, நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் கதாநாயகியாக நடித்தவர் ஆவார்.

இந்நிலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் பாகுபலிக்கு பிறகு இந்தியா முழுமைக்குமான படத்தை கொடுக்க வேண்டிய அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்று சேரக் கூடிய கதைகளையே தேர்வு செய்து வருகிறேன். பாகுபலியை சிறப்பாக செய்ய வேண்டும் என்று கருதியே படங்களில் நடிக்கிறேன் என்றார் பிரபாஸ்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Cinema Bollywood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment