scorecardresearch

பிரபல பாலிவுட் நடிகைக்கு எதிராக பிடியாணை.. வைரலாகி வரும் அலியா பட் புகைப்படங்கள்.. மேலும் செய்திகள்

இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பட ஷூட்டிங்கில் பங்கேற்பதற்காக இவர் ஸ்பெயின் சென்றுள்ளார்.

தமிழில் லிங்கா படத்தில் நடித்த சோனாக்ஷி சின்ஹா மீது தொடுத்த மோசடி வழக்கில் அவர் ஜாமீனில் வெளியே வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தமிழில் ‘லிங்கா’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சோனாக்சி சின்ஹா. இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளான இவர் இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். பாலிவுட்டில் இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. 

இவரை கடந்த 3 வருடங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த விருது வழங்கும் விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அழைத்து இருந்தனர்.

இதற்காக அவருக்கு 4 தவணைகளாக ரூ.37 லட்சம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இறுதியாக அந்த நிகழ்ச்சிக்கு செல்ல சோனாக்ஷி சின்ஹா மறுத்துவிட்டார். பின்னர் பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. 

இதையடுத்து சோனாக்சி சின்ஹா மீது உத்தரப் பிரதேச மாநிலம், மொரதாபாத் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் சோனாக்ஷி சின்ஹா உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உத்தரப் பிரதேச மொரதாபாத் நீதிமன்றம் சோனாக்ஷி சின்ஹாவுக்கு ஜாமீனில் வெளியே வரமுடியாத பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டு உள்ளது.

இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகுபலி மூன்றாம் பாகத்தில் நடிக்க விருப்பம்: பிரபாஸ்

பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தவர் பிரபாஸ்.

அந்த படத்துக்கு பிறகு பிரபாஸ் படங்கள் பன்மொழிகளில் வெளியாகின்றன. தற்போது பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்துள்ள ராதே ஷியாம் படமும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வருகிறது.

சென்னை வந்த பிரபாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறும்போது, ‘பாகுபலி மூன்றாம் பாகம் வருமா? என்று பலரும் என்னிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.  எத்தனை படங்களில் நடித்தாலும் பாகுபலியை என்னால் மறக்க முடியாது. பாகுபலி மூன்றாம் பாகத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் அதை தொடங்குவது இயக்குனர் ராஜமவுலி கையில் உள்ளது. ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் நான் நடித்துள்ள ராதே ஷியாம் படத்தில் கைரேகை நிபுணராக வருகிறேன். காதல் கதையாக பெரிய பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க ஆர்வம் உள்ளது என்றார்.

விருந்து நிகழ்ச்சியில் தனுஷ்ஐஸ்வர்யா!

நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா, கடந்த மாதம் பிரிய போவதாக அறிவித்து சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதன் மூலம் அவர்களது 18 வருட திருமண வாழ்க்கை முறிந்தது. அதனைத் தொடர்ந்து இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தத் தொடங்கினர்.

ஆனாலும் தனுஷ் – ஐஸ்வர்யாவை சேர்த்து வைக்க இரு தரப்பு குடும்பத்தினரும் முயற்சிகளை மேற்கொண்டனர். சினிமா முன்னணி பிரபலங்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும் எதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

தனுஷ்-ஐஸ்வர்யாவின் நெருங்கிய நண்பர்கள் ஒரு விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் கலந்து கொண்டனர். ஆனாலும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளவில்லை, பேசிக்கொள்ளவும் இல்லை. விருந்து நிகழ்ச்சி முடிந்ததும் உடனடியாக இருவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பேசிக்கொள்வார்கள், ஏதாவது சுமூக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்த்து, இதற்காகவே விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நண்பர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஸ்பெயினில் தீபிகா படுகோன்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோன், ஸ்பெயினில் உள்ளார்.

அமேஸான் பிரைமில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கெஹ்ரையான் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தில் அதிக முத்தக் காட்சிகளில் நடித்ததும் பரபரப்பாக பேசப்பட்டது.

இவர் தற்போது நடிகர் ஷாருக் கான் உடன் பதான் படத்தில் நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவருடன் இணைந்து நடித்து வருகிறார்.

இதனால் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பட ஷூட்டிங்கில் பங்கேற்பதற்காக இவர் ஸ்பெயின் சென்றுள்ளார்.

ஸ்பெயின் செல்லும்போது இன்ஸ்டாகிராமில் எஸ்கேப் டைம் என பதிவிட்டிருந்தார்.

அத்துடன் விமான பயணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்தார்.

‘பிபி அல்டிமேட்’ நிகழ்ச்சியில் பிரபல பிக்பாஸ் நடிகை வைல்ட் கார்டு என்ட்ரி?

வைரலாகி வரும் அலியா பட் புகைப்படங்கள்

அலியா பட் நடிப்பில் கங்குபாய் கதியாவாடி படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இவரது நடிப்புக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அலியா பட் சில்வர் நிறந்த ஒரு புடவை அணிந்திருந்தார்.

அவரது புகைப்படங்களை ஸ்டைலிஸ்ட் அமி படேல் சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.

இதையடுத்து, சமூக வலைதளங்களில் அவரது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இணையவாசிகளிடையே பாசிட்டிவான கருத்துகளையும் பெற்று வருகிறது.

அவர் அணிந்திருக்கும் புடவையின் விலை ரூ.25,000 ஆகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Cinema news round up alia bhat photos goes viral on internet421498