தயாரிப்பாளர் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்ட விஷால், திருட்டு விசிடி உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி 30ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
அதோடு அனைத்து திரையரங்குகளையும் அன்றைய தினம் மூட வேண்டும் என்று சொல்லி வருகிறார். ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. தியேட்டர்கள் இயங்கும் என்று சொல்லி வருகின்றனர். இதையடுத்து விஷால், எந்த படங்களையும் திரையிட வேண்டாம் என்று தயாரிப்பாளர்களிடம் சொல்லி வருகிறார்.
அரசியல் கட்சி ஒன்றின் மூத்த தலைவரின் குடும்பத்து பிள்ளையொருவரின் படம் வரும் 26ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார். படத்தை வெளியிடக் கூடாது என்று படத்தின் தயாரிப்பாளரை அழைத்துச் சொல்லியுள்ளார். தயாரிப்பாளர் கதாநாயகனான அரசியல் வாரிசிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் வாரிசோ படத்தி வெளியிட்டே தீர வேண்டும் என்று சொல்லியுள்ளார். படம் வெளியாவது 26ம் தேதி. வேலை நிறுத்தம் 30ம் தேதிதானே. படத்துக்கு எந்த வகையிலும் பாதிப்பு வராது என்று சொல்லியிடுகிறார்.
ஆனால் விஷால் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. பிருந்தாவனம் படத்தை திரையிடக் கூடாது என்று கண்டிப்பாக சொல்லியிருக்கிறார். அதோடு, தான் வகிக்கும் பதவியையும் சொல்லி தயாரிப்பாளரை மிரட்டியிருக்கிறார். இதை கேள்விப்பட்ட நடிகர், ‘இவர் இருக்கும் நாற்காலிக்கே இவ்வளவு பவர் என்றால், என் தாத்தா இருந்த நாற்காலியின் பவர் அவருக்குத் தெரியாதா?’ என்று கேள்வி கேட்டுள்ளார். கடைசியாக நடிகர் சொன்ன தேதியில் படத்தை வெளியிடுவதாக தயாரிப்பாளர் அறிவித்துவிட்டார்.
இந்த மோதல் எதில் முடியும் என்பதை தெரிந்து கொள்ள தீவிரமாக இருக்கின்றனர்.