தமிழ் சினிமாவில் காமெடி வேடங்களில் நடித்து வருபவர் ‘தாடி’ பாலாஜி. இவர் ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார். 8 ஆண்டுகளுக்கு முன்பு நித்யா என்பவரை தாடி பாலாஜி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் போர்ஷிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில், தனது ஜாதியை சொல்லி திட்டுவதாகவும், கொடுமைப்படுத்துவதாகவும் பாலாஜியின் மீது அவரது மனைவி, மாதவரம் போலீசில் இன்று புகார் அளித்துள்ளார். தம்பதியினரிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி நிகழச்சியில் இவர்கள் மோதல் வெடித்தது.
இதையடுத்து, இந்த புகார் குறித்து மாதவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.