ஜாகீர்கான்-சகாரிக்காவுக்கு நவம்பர் 27-ல் டும் டும் டும்!

நவம்பர் 27-ம் தேதி சகாரிகா காட்கே- ஜாகீர்கான் திருணமம் நடைபெறவுள்ளது.

zaheer khan, sagarika-ghatge-750

பிரபல பாலிவுட் நடிகையான சகாரிகா காட்கே, ஜக் தே இந்தியா திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஜக் தே இந்தியாவில் சிறிய கேரக்டரில் மட்டுமே சகாரிகா காட்கே நடிந்திருந்த நிலையில், ரஷ் படத்தின் மூலம் ஹீரோயினானார். இதைத்தொடர்ந்து ஜி பார் கி ஜே ஜே, இரடா உள்ளிட்ட படங்களிலும், மராத்தி, பஞ்சாபி படங்களிலும் சகாரிகா நடித்திருக்கிறார்.

ஜாகீர்கானும், சகாரிகாகவும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுவராஜ் சிங்-ஹசல் கீச் திருமண விழாவில், சகாரிகாவும், ஜாகீர்கானும் ஒன்றாக சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பின்னர், கடந்த மே மாதம், சகாரிகாவும், ஜாகீர்கானும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நிகழ்வை ஜாகீர்கான் சமூகதளங்களின் மூலம் மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்தியிருந்தார். இதன் பின்னர் அவர்கள் திருமணம் எப்போது செய்து கொள்ளப்போகிறார்கள் என்பது குறித்த செய்தி தெரியாமலே இருந்து வந்தது.

இந்த நிலையில், நவம்பர் 27-ம் தேதி சகாரிகா காட்கே- ஜாகீர்கான் திருணமம் நடைபெறவுள்ளது என்பது தெரியவந்துள்ளது. சகாரியாக காட்கே இதனை இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திடம் உறுதிபடுத்தியுள்ளார். முன்னதாக நேர்காணல் ஒன்றின் போது, ஜாகீர்கான் எப்படி காதலை தன்னிடம் தெரிவித்தார் என்பதனை சகாரிகா தெரிவித்திருந்தார். அப்போது அவர் கூறும்போது, “ஜாகீர்கான் சிரித்த முகத்துடன் ஒரு மோதிரத்தை என்னிடம் கொடுத்தார். அந்த நிகழ்வானது ரொம்பவே சர்ப்ரைஸானது. என்னுடைய எதிர்காகலத்தை ஜாகீர்கானுடன் பகிர்ந்து கொள்வது என்பது மிக மிக மகிழ்ச்சியனாது” என்றிருந்தார்.

இந்த நிலையில், நவம்பர் 27-ம் தேதி சகாரிகா காட்கே- ஜாகீர்கானுக்கு டும் டும் டும் என்பதை சகாரிகாக உறுதிபடுத்தியுள்ளார்.

இப்போ ஜாகீர்கான் திருமண தேதி கண்பாஃர்ம் ஆயிடுச்சு. நெக்ஸ்ட் யாருன்னு பாத்தா நமக்கெல்லாம் ஞாபகம் வர்றது நம்ம விராட் கோலி-அனுஷ்கா ஜோடி தான். ம்ம்… அவங்க எப்போ திருணம் செய்யப் போறாங்கன்னு வெயிட் பண்ணி தெரிஞ்சுக்கலாம்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Confirmed sagarika ghatge and zaheer khan to tie the knot on november

Next Story
ரங்கீலா ஏமாற்றப்படவில்லை: காப்பாற்றிய உண்மையான விஜய் ரசிகர்கள்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com