Cook with Comali Pugazh Tamil News : வாரம் தோறும் வித்தியாசமான கெட் அப்பில் தோன்றி, மந்தமான வீக்கெண்டை கோலாகலமாக்குபவர்கள் குக் வித் கோமாளிகள் என்றே சொல்லலாம். முதலாம் சீஸனின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் அதன் சீசன் 2 தொடங்கியது. அஷ்வின், பவித்ரா, ஷகீலா, பாபா பாஸ்கர், கனி என ஏராளமான பிரபலங்கள் குக்காக பங்கேற்க, முதல் சீசன் வெற்றிபெறக் காரணமாக இருந்த பாலா, ஷிவாங்கி, புகழ் ஆகியோர்கள் இந்த சீஸனிலும் தவிர்க்கமுடியாத கோமாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
வித்தியாசமான டாஸ்க்குகளுக்கு மத்தியில் கோமாளிகள் செய்யும் சேட்டைகள்தான் ஷோவின் ஹயிலைட். அதிலும் புகழுக்குத் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. முதல் சீஸனில் ரம்யா பாண்டியனோடு இணைந்து கன்டென்ட் கொடுத்து வந்த புகழுக்கு இம்முறை பவித்ரா, சுனிதா, தர்ஷா என மூன்று பேரோடும் புகழ் செய்யும் அட்ராசிட்டிக்கு அளவே இல்லை.
பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல, குக் வித் கோமாளி பிரபலங்களுக்கும் தற்போது ரசிகர்கள் ஆர்மி ஆரம்பித்துவிட்டனர். அந்த வரிசையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அஷ்வின் 1 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை இன்ஸ்டாகிராமில் பெற்று தன் நண்பர்களோடு சிறப்பாகக் கொண்டாடினார். எந்நேரமும் அஷ்வின் பற்றி உருகி தள்ளும் ஷிவாங்கிக்கு இன்ஸ்டாகிராமில் 1.8 மில்லியன் ஃபாலோயர்கள் பெற்று எல்லையில்லா மகிழ்ச்சியில் திகைத்தார். இந்த லிஸ்ட்டில் தற்போது புகழும் இணைந்திருக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் 1 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை பெற்று சாதனை படைத்ததைத் தொடர்ந்து, தன் ரசிகர்களோடு கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார் புகழ். இந்த விடியோதான் இன்ஸ்டாவில் தற்போதைய வைரல் ஹிட்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"