Cooku with Comali SIVAANGI Tamil News: விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பாடகியாக தனது திறமையை வெளிப்படுத்தி இருந்த ஷிவாங்கி, குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பட்டிதொட்டியெல்லாம் அறிமுகமானார். இந்த நிகழ்ச்சியில் இவர் செய்யும் சேட்டைகளும், வெகுளியான சிரிப்பிற்கும் தனி ரசிகர்களே உண்டு.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பெரும்பாலோனோர் தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வரும் நிலையில், ஷிவாங்கியும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் அவரின் யூடூப் சேனலில் அவ்வப்போது தோன்றி, தான் பாடிய பாடல் வீடியோக்களையும், கொண்டாட்ட வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

சமீபத்தில் அவரது பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் ஷிவாங்கி. அந்த வீடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறவே, ஒரே நாளில் ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை அந்த வீடியோ எட்டியது.
இந்த நிலையில், பிரபல மலையாள பாடலான ‘பாட்டில் ஈ பாட்டில்’ என்ற பாடலை பாடிய வீடியோவை சமூக வலைதள பக்கமான ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த பாடலை எம்.ஜெயச்சந்திரன் மற்றும் ஸ்ரேயா கோஷல் ஆகியோர் கடந்த 2011 ஆம் ஆண்டில் வெளியான ‘பிராணயம்’ திரைப்படத்திற்காக பாடியிருந்தனர். இந்த படத்தில் நடிகர் மோகன்லால், ஜெய பிரதா மற்றும் அனுபம் கெர் ஆகியோர் நடிதந்திருந்தனர்.
Paatil e Paatil❤️ pic.twitter.com/8z7j3ANA11
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) June 14, 2021
ஷிவாங்கி பதிவிட்ட இந்த வீடியோ பதிவிற்கு சில நிமிடங்களிலேயே லைக்ஸ் மழை பொழிய துவங்கியதோடு, வாழ்த்துக்களும் குவிந்தன. நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படத்தின் மூலம் பாடகராக திரையுலகில் அறிமுகமாகவுள்ள ஷிவாங்கி உதயநிதி ஸ்டாலினின் ஆர்டிகல் – 15 ரீமேக் படத்திலும் பாடல் பாட உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“