எஸ்.சுபகீர்த்தனா
Covid 19: கொரோனா வைரஸ் தான் கடந்த சில வாரங்களாக உலகத்தின் பேசு பொருளாகியிருக்கிறது. சரி இந்த மாதிரி கொடிய வைரஸைச் சுற்றியுள்ள தமிழ் படங்களை இங்கே குறிப்பிடுகிறோம். முடிந்தால், இவற்றை பார்த்து உங்கள் விடுமுறைகளை கழிக்கவும்.
கொரோனா வைரஸ்: இந்தியாவில் எண்ணிக்கை 258 ஆக உயர்வு
நாளைய மனிதன் (1989)
வேலு பிரபாகரன் எழுதி இயக்கிய இப்படத்தில் பிரபு, ஜெய்சங்கர், அமலா, அஜய் ரத்னம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் ஒரு மருந்தைக் கண்டுபிடிக்கும் ஒரு மருத்துவரை சுற்றி கதை சுழல்கிறது. குடும்பத்தால் கைவிடப்பட்ட ஒருவரின் உடலில் மருந்தை செலுத்தியதும், அவர் ஒரு தொடர் கொலைகாரனாக மாறுகிறார். அடுத்து என்ன நடக்கிறது என்பது தான் மீதிக்கதை. நாளைய மனிதனின் கதைக்களம் மைக்கேல் மில்லரின் ’சைலண்ட் ரேஜால்’ ஈர்க்கப்பட்டது. பின்னர் கன்னடத்தில் ’மனவா 2022’ என்ற பெயரில் வெளியானது.
தசாவதாரம் (2008)
கமல்ஹாசன் எழுதிய இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். ஒரு விஞ்ஞானியைச் சுற்றி இக்கதை படமாக்கப்பட்டிருக்கும். ஆபத்தை அறிந்த பிறகும், பயோ வெப்பனை காக்க முயற்சிக்கும் விஞ்ஞானி அவர். ஜார்ஜ் புஷ் உட்பட பத்து வேடங்களில் நடித்திருப்பார் உலக நாயகன். இந்தியாவில், எபோலா வைரஸின் முதல் வழக்கு 2014-ல் பதிவாகியுள்ளது. ஆனால், கமல்ஹாசன் அதைப் பற்றி ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படத்தில் விவாதித்திருந்தார்.
ஏழாம் அறிவு (2011)
ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி இயக்கிய இப்படத்தில் சூர்யா, ஸ்ருதி ஹாசன் மற்றும் ஜானி ட்ரை குயென் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். 5-ஆம் நூற்றாண்டின் பல்லவ மன்னர் போதி தர்மனை சுற்றி கதை நகரும். அவர் சீனாவுக்குச் சென்று துறவியாகிறார். அவரின் வழித்தோன்றலாக 21-ம் நூற்றாண்டில் சூர்யாவின் கதாபாத்திரம் அமைந்திருக்கும். இந்தியா மீது சீனா கட்டவிழ்த்து விட்ட உயிர் போரை எதிர்த்துப் போதி தர்மனின் சக்திகளைப் பயன்படுத்த முயற்சிக்கும் ஒரு விஞ்ஞானி இதைக் கண்டுபிடிப்பார். 7 ஆம் அறிவி தெலுங்கில் ’செவன்த் சென்ஸ்’ என்ற பெயரில் வெளியானது.
வாயை மூடி பேசவும் (2014)
துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா நசிம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இப்படத்தை ’காதலில் சொதப்புவது எப்படி’ புகழ் பாலாஜி மோகன் இயக்கியிருந்தார். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர், இந்தப் படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகமானார். வசந்த காலத்தில், ஒரு மலை நகரத்தின் பின்னணியில் கதை அமைந்திருக்கும். புதிய வகை வைரஸ், காய்ச்சலை பரப்புவதால், அந்த ஊரே பேசுவதை நிறுத்திக் கொள்வதாக கதை அமைந்திருக்கும்.
மிருதன் (2016)
’நாய்கள் ஜாக்கிரதை’ புகழ் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கிய இப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் லட்சுமி மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஒரு போக்குவரத்து போலீஸ்காரர், நகரத்தில் உருவான புதிய நோய்க்கு எப்படி தீர்வைக் கண்டுபிடிக்கிறார் என்பது தான் கதை. தமிழ் சினிமாவில் தங்கள் படம் தான் முதல் ஸாம்பி த்ரில்லர் கதை என்றுத் தெரிவித்திருந்தார்கள் மிருதன் படக்குழுவினர்.
வெளிநாடு தொடர்பே இல்லாமல் கொரோனா தொற்று: இந்தியாவின் முதல் நபர் தமிழகத்தில்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"