“சினையுறும் சிறு உயிர் கூட உறவென புரிந்திடப் பாரு” – கமலின் அறிவும் அன்பும்

இந்த நேரத்திற்கு தேவையான ஒன்றை வலியுறுத்தும் மிகச் சிறந்த பாடலாக வெளியாகியுள்ள இந்த பாடலை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

By: Updated: April 23, 2020, 12:12:41 PM

Coronavirus Outbreak Kamal Haasan’s Arivum Anbum Music album : கொரோனா வைரஸூக்கு எதிரான போரில் உலக நாடுகள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. அரசுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருக்க பல கோடிக்கணக்கானோர் வேலையிழந்து, வாழும் வழியின்றி தவித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸூக்கு எதிரான போரில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்து இசைத்துறை மற்றும் தமிழ் திரையுலகை சேர்ந்தவர்களை ஒன்றிணைத்து பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் கமல் ஹாசன். ”பொது நலமென்பது தனி மனிதன் செய்வதே, தன் நலமென்பதும் தனி நபர்கள் செய்வதே” என்று துவங்கும் அந்த பாடலை நடிகர் கமல் ஹாசன் எழுத, இசையமைப்பாளர் ஜிப்ரான் அப்பாடலுக்கு இசை அமைத்துள்ளார்.

மேலும் படிக்க : ’கோயிலுக்கு இதெல்லாம் பண்றீங்களே?’ – சர்ச்சையாகும் ஜோதிகாவின் பேச்சு

பாடகர்கள் பாம்பே ஜெயஸ்ரீ, சங்கர் மகாதேவன், சித் ஸ்ரீராம், ஸ்ருதி ஹாசன், ஆண்ட்ரியா, சித்தார்த், முகேன் ராவ் இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, அனிருத், ஆகியோர் பாடியுள்ளனர்.  ஒவ்வொருவரும் லாக்டவுனில் இருந்தவாறே தங்களிடம் இருக்கும் போன் மற்றும் மைக் ஆகியவற்றை பயன்படுத்தி இந்த பாடலை சிறப்பாக வெளி கொண்டு வந்துள்ளனர்.

உலகிலும் பெரியது நம் அகம் வாழ் அன்பு தான்.  அழிவின்றி வாழ்வது நம் அறிவும் அன்புமே என்று வார்த்தைகளுக்கு வார்த்தை இந்த சூழலில் தேவையான அன்பினை வலியுறுத்தி இந்த பாடல் அமைந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Coronavirus outbreak kamal haasans arivum anbum music album released today

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X