Advertisment

அஜித்தின் ‘விசுவாசம்’ படத்திற்கு இசையமைக்கிறார் டி.இமான்

அஜித், நயன்தாரா நடிப்பில், சிவா இயக்கவுள்ள ‘விசுவாசம்’ படத்திற்கு, டி.இமான் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
imman music

அஜித் நடிப்பில் சிவா இயக்கவுள்ள ‘விசுவாசம்’ படத்திற்கு, டி.இமான் இசையமைக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாக இருக்கும் படம் ‘விசுவாசம்’. இந்தப் படத்தை, ‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அஜித் - நயன்தாரா இணைந்து நடிக்கும் நான்காவது படம் இது.

‘விசுவாசம்’ படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், அதன்பிறகு ‘விக்ரம் வேதா’ படத்துக்கு இசையமைத்த சாம் சி.எஸ். இசையமைப்பதாகச் சொன்னார்கள். அதற்கடுத்து, அஜித்தின் ‘வேதாளம்’ மற்றும் ‘விவேகம்’ படங்களுக்கு இசையமைத்த அனிருத்தே மூன்றாவது முறையாக இசையமைக்கப் போகிறார் என்றனர்.

இந்நிலையில், டி.இமான் ‘விசுவாசம்’ படத்துக்கு இசையமைக்க இருப்பதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் அவருக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டதாகவும் கூறுகின்றனர். இதன்மூலம் அஜித் படத்துக்கு முதன்முதலாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெறுகிறார் டி.இமான்.

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment