Advertisment

'தண்ணி குடம் எடுத்து.... நான் தாண்டா இனிமேலு...' - நம்ம காதுக்கு மட்டும் தான் இப்படி பாட்டு கேக்குதா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'தண்ணி குடம் எடுத்து.... நான் தாண்டா இனிமேலு...' - நம்ம காதுக்கு மட்டும் தான் இப்படி பாட்டு கேக்குதா?

darbar first single track rajini fans reactions - 'தண்ணி குடம் எடுத்து.... நான் தாண்டா இனிமேலு...' - நமக்கு மட்டும் தான் இப்படி பாட்டு கேட்குதா?

'நான் தாண்டா இனிமேலு.. வந்துநின்னா தர்பாரு.... உன்னோட கேங்கு.... நான்தாண்டா லீடு'

Advertisment

நேற்று வெளியான சூப்பர் ஸ்டாரின் 'தர்பார்' பட சிங்கிள் டிராக்கின் முதல் லைன் இது. ரஜினி ரசிகர்கள் ஒருபக்கம் பாடலைக் கொண்டாடிக் கொண்டிருக்க, மற்றொருபக்கம் சீரியசாகவே காமெடி டிஸ்கஷன் ஒன்றை செய்து கொண்டிருக்கின்றனர் நெட்டிசன்கள்.

ரஜினிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. அவர்களின் டாப்பிக்கில் ரஜினியே கிடையாது. சிக்கியிருப்பவர் அனிருத் தான். இரண்டாவது முறையாக ரஜினி படத்தின் இசையமைப்பாளர் என்ற மிகப்பெரிய பொறுப்பு, அனிருத்தை தேடி வந்தது.

தர்பாரின் 'Chummakizhi' பாடல் ரஜினி ரசிகர்களை கவர்ந்ததா ?

'பேட்ட' படத்தின் டைட்டில் மோஷன் தீம் மியூசிக்குடன் வெளியான போதே, 'இது அந்த ஹாலிவுட் படத்தின் மியூசிக்காச்சே' என்று ரசிகர்கள் ஆதாரங்களை அள்ளிவிட்டனர்.

இப்போது தர்பார் பாடலுக்கும் அதே போன்றதொரு சிக்கல் வந்துள்ளது. இது வழக்கம் தானே என்று நாமும் நினைத்தாலும், 'என்னய்யா இது அந்த சாங் மாதிரியே இருக்குன்னு' நாமே நினைப்பது போல ஆகிவிட்டது.

சரி மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று முடிவுக்கு வந்த நாம் ஆடியன்சிடமே தீர்ப்பை விட்டுவிடுவோம் என்று நினைத்து, நம்ம மூளைக்கு தோன்றியதை இங்கே பதிவிடுகிறோம்.

இரண்டு பாடலையும் பாடியிருப்பவர் உங்கள் எஸ்பிபி தான்!.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment