New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/01/Nivetha-Thomas-images.jpg)
Nivetha Thomas images
கமல்ஹாசன் நடித்த ’பாபநாசம்’ திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்தார் நிவேதா.
Nivetha Thomas images
Nivetha Thomas : குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர், வெள்ளித்திரையில் அறிமுகமானவர் நடிகை நிவேதா தாமஸ். சன் டிவியில் ஒளிபரப்பான ’மை டியர் பூதம்’ சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவருக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. முதல் திரை பயணத்தை மலையாள சினிமாவில் துவங்கிய நிவேதா, அதில் நடிகர் ஜெயராமுக்கு மகளாக நடித்தார். இதன் பின் தனது இரண்டாவது படத்திலேயே (குருவி) நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்தார். அதன் பிறகு போராளி படத்தில் தமிழில் ஹீரோயினானார்.
நவீன சரஸ்வதி சபதம் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தாலும் மறுபுறம் கமல்ஹாசன் நடித்த ’பாபநாசம்’ திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்தார் நிவேதா. அந்த படத்தில் இவருக்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரம். அவரின் நடிப்பு பாரட்டப்பட, அதன் பிறகு தெலுங்கு திரையுலகிலும் நிவேதாவுக்கு வாய்ப்புகள் குவிந்தன.
பொண்ணுக்கு இவ்ளோ பெரிய விபத்து நடந்து கூட அம்மா ரேவதிய காணோமே…?
Darbar Box Office Collection Day 1: தான் ஒரு வசூல் ’மன்னன்’ என்பதை மீண்டும் நிரூபித்த ரஜினி!
நேற்று வெளியான ‘தர்பார்’ படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மகளாக நடித்திருந்தார் நிவேதா. படத்தின் மிக முக்கிய பலமே அப்பா - மகள் செண்டிமெண்ட் என்று ரசிகர்கள் கூறும் அளவுக்கு, அத்தனை உணர்வுப்பூர்வமாக நடித்திருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.