தென்னிந்திய நடிகை சகிலாவின் சுயசரிதை புக்கம், தற்போது திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தை கன்னட இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் இயக்குகிறார். படத்தில் பாலிவுட் நடிகை ரிச்சா சதா கதாநாயகியாக நடிக்கிறார். இந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் படம் திரைக்கு வருகிறது.
Advertisment
சகிலாவின் சுயசரிதை படம் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் திருநாள் அன்று திரைக்கு வருகிறது.
Advertisment
Advertisements
இதற்கிடையே, படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய நடிகை சகிலா," புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் முழுமையாக சினிமாவில் சொல்ல முடியாது. சினிமாவுக்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒரு நடிகையின் சுயசரிதை திரைப்படமாக வருவதை சாதனையாக கொள்கிறேன்" என்று சகிலா தெரிவித்தார்.
மேலும், "சமூகத்தில் நான் பலரால் ஏமாற்றப்பட்டேன். அதுவும், குடும்ப உறவினர்களிடம் (அக்கா ) ஏமாந்து உள்ளேன். யாரிடமும் ஏமாந்துவிடக் கூடாது என்பதை சினிமா துறைக்கு வரும் பெண்களுக்கும், அனைத்து பெண்களுக்கும் நான் கூற விரும்புகிறேன். இதைத்தான் படமாக எடுத்து இருக்கிறார்கள். சினிமாவில் தனக்கு எந்த எதிர்பார்ப்பு இல்லை என்று கூறிய சகிலா,படத்தை பார்த்துவிட்டு தன மீது அனுதாபப்பட வேண்டாம் " என்றும் தெரிவித்தார்.
மலையாளத் திரைப்படமான ப்ளே கேள்ஸ் திரைப்படம் மூலம் துணை நடிகையாக அறிமுகமானார். இவர் பாலுணர்வுக் கிளர்ச்சியம் தொடர்புடைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
மலையாளப் படங்களில் பெரிதும் பேசப்பட்ட இவர் 110க்கும் மேற்பட்ட தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களில் நடித்துள்ளார்.