“மன அழுத்தத்துடன் போராடுகிறேன், முழுமையாக விடுபடவில்லை”: தீபிகா

தான் அனுபவித்து வரும் மன அழுத்தம் குறித்து பொதுவெளியில் பேசியிருப்பது, மனநலத்தை பேணி காப்பதன் அவசியத்தை உணர்த்துவதாக உள்ளது.

Deepika Padukone. chhapaak rating
Deepika Padukone

பாஜிராவ் மஸ்தானி, பிக்கு உள்ளிட்ட வேறுபட்ட கதைகளத்தில் பயணிக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகைகளில் இவருக்கு இணை அவரேதான். தீபிகா படுகோனே. அவர் நடித்த பத்மாவதி திரைப்படம் வெளியாக உள்ளது. இவ்வளவு அசாத்தியமாக நடிக்கும் இவர், தான் அனுபவித்து வரும் மன அழுத்தம் குறித்து பொதுவெளியில் பேசியிருப்பது, மனநலத்தை பேணி காப்பதன் அவசியத்தை உணர்த்துவதாக உள்ளது.

தீபிகா படுகோனே, கடந்த காலங்களில் தான் மன அழுத்தத்தில் சிக்கி அதனுடன் போராடியதாகவும், அதிலிருந்து இன்னும் தான் முழுமையாக மீண்டு வரவில்லை எனவும் சமீபத்தில் தெரிவித்தார்.

புதுடெல்லியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய தீபிகா படுகோனே, தான் மன அழுத்தத்துடன் போராடி வருவது குறித்து தெரிவித்தார். அப்போது, “நான் என்னுடைய கடந்த காலத்தில் மன அழுத்தத்துடன் போராடி வந்திருக்கிறேன். அது எனக்கு மிகவும் மோசமான அனுபவமாக இருந்தது. ஆனால், அதிலிருந்து நான் முழுமையாக குணமாகிவிட்டேன் என கூற முடியாது. நான் திரும்பவும் மன அழுத்தத்துக்குள் சென்றுவிடுவேனோ என்ற பயம் என்னுள் எப்போதும் நீடித்திருக்கிறது. மேலும், மன அழுத்தம் குறித்து வெளிப்படையாக தெரிவித்ததால், திரைப்படங்களுக்கு சில தயாரிப்பாளர்கள் தன்னை அனுகாமல் இருந்திருக்கலாம் எனவும் தீபிகா படுகோனே தெரிவித்தார்.

”நான் மன அழுத்தத்தில் இருப்பதால், என்னால் நடிக்க முடியாது என நினைத்திருக்கலாம். அதனால், எனக்கு சிலர் பட வாய்ப்புகள் அளிக்காமல் இருந்திருக்கலாம். அதைப்பற்றி எனக்கு தெரியாது. ஆனால், நான் நடிக்க வேண்டிய படங்களை நானே தேர்ந்தெடுக்க முடிகிறது. ஆனால், எங்கு வேலை செய்ய வேண்டும், எப்போது வேலை செய்ய வேண்டும் என முடிவெடுக்க வேண்டிய வசதி பலருக்கு உள்ளதா என தெரியவில்லை.”, என அவர் கூறினார்.

மேலும், பள்ளிக்கூடங்களில் மனநலம் குறித்த பாடத்திட்டத்தை புகுத்தினால், மனநலம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து சமூகத்தில் நிலவிவரும் தவறான கண்ணோட்டம் மாறுவதற்கு உதவிகரமானதாக இருக்கும்.

‘The Live Love Laugh’ எனும் அமைப்பின் நிறுவனரான தீபிகா படுகோனே, கொள்கையளவில் முடிவுகளை எடுப்பவர்கள், பணிபுரிபவர்கள், மனநலம் சார்ந்த குறைபாடுகளுடன் இருப்பவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் தங்கள் வேலைகளை இழக்காமல் அதிலிருந்து வெளியேறி சகஜ நிலைக்குக் கொண்டு வர முனைய வேண்டும் என வலியுறுத்தினார்.

மனநலம் சார்ந்த குறைபாடுகளுடன் உள்ளவர்களை இந்தியாவின் பார்வையை மாற்ற வேண்டும் என்பதற்காகவே, தான் சந்தித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டதாக தீபிகா படுகோனே கூறினார்.

இதேபோல், சமீபத்தில் நடிகை இலியானா, Body dysmorphic disorder எனும் தங்கள் உடலமைப்பை பார்த்து தானே வெறுக்கும் குறைபாட்டில் சிக்கித்தவிப்பது குறித்து தெரிவித்திருந்தார். அதிலிருந்து விடுபட நாள்தோறும் முயற்சி செய்கிறேன் என நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Deepika padukone at india economic summit i am not over depression completely

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com