/indian-express-tamil/media/media_files/2025/10/30/devayani-ramya-krishnan-2025-10-30-13-24-06.jpg)
சமீபத்தில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' திரைப்படத்தை இபோது சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் கலாய்கின்றனர். படத்தின் கதைக்கருவை பங்கமாக கலாய்த்து உருவாக்கப்பட்ட ஒரு மீம்ஸ், சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. லுங்க சிரிக்க வைத்திருக்கிறது.
'டியூட்' படத்தின் கதையில் உள்ள முரண்பாடுகள் மற்றும் நம்பகத்தன்மை இல்லாத சில காட்சிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அந்த மீம்ஸ் வீடியோவின் தாக்கம் எந்தளவுக்கு இருக்கிறது என்றால், அதைப் பார்த்த பல சினிமா ரசிகர்களும், "இந்த படம் ஓடிடியில் (OTT) வந்தாலும் கூட பார்க்க மாட்டோம்" என்று கமெண்ட் போட்டு வருகின்றனர். 'டியூட்' படத்தைக் கலாய்க்கும் ரசிகர்கள் சும்மா இல்லாமல், சரத்குமார் படம் ஒன்றையும் இதோடு சேர்த்து கலாய்த்து வருகின்றனர்.
சரத்குமார் நடிப்பில் 1999ஆம் ஆண்டு வெளியான 'பாட்டாளி' படத்தின் காட்சிகளை ஷேர் செய்து புதிய ஒப்பீடு ஒன்றை உருவாக்கியுள்ளனர். பாட்டாளி படத்தில் சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், தேவயானி, வடிவேலு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த இத்திரைப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்திருந்தார்.
'டியூட்' திரைப்படத்தில் மமிதா பைஜுவுக்கு அப்பாவாக சரத்குமார் நடித்திருந்தார். 'பாட்டாளி' படத்தையும் சரத்குமார் தான் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான 'பாட்டாளி' படத்தில், சரத்குமார் தேவயானியை காதலிப்பார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/10/30/paatali-2025-10-30-13-28-24.jpg)
அதில் தேவயானி கர்ப்பமடைவார், ஆனால், குடும்பச் சூழல் காரணமாக தேவயானியை விட்டுவிட்டு, அத்தை மகளான ரம்யா கிருஷ்ணனை சரத்குமார் திருமணம் செய்து கொள்வார். இந்தக் காட்சியையும், 'டியூட்' படத்தில் சரத்குமாரின் மகளாக வரும் மமிதா பைஜுவின் கதாபாத்திரத்தையும் இணைத்து, "அப்போவே இப்படிப்பட்ட கதை கொண்ட படத்தில் அப்பா நடித்ததால்தான், இப்போ மகள் 'டியூட்' போன்ற கதையில் நடிக்கிறார்" என்று ரசிகர்கள் கிண்டல் செய்கிறார்கள்.
The OG Dude Vs Gen-Z Dude 😂
— AmuthaBharathi (@CinemaWithAB) October 28, 2025
Then it's Sarathkumar, now it's MamithaBaiju (Like Father, Like Daughter)😁pic.twitter.com/hLhlWKDFbK
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us