Advertisment

டிசிபி-க்கு மியூசிக் போடும் டிஎஸ்பி...

சாமி-2 திரைப்படத்தில் விக்ரம்+ ஹரி+ தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி மீண்டும் இணையவிருக்கிறது.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
டிசிபி-க்கு மியூசிக் போடும் டிஎஸ்பி...

ஹரி இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில், கடந்த 2003-ம் ஆண்டு வெளிவந்த சாமி திரைப்படம் ஹிட் அடித்து வெற்றியை பெற்றுத்தந்தது. இந்நிலையில், புலி , இருமுகன் ஆகிய படங்களை தயாரித்த தமீன்ஸ் பிலிம்ஸ் நிறுவனமானது சாமி-2 படத்தினை தயாரிக்கவிருக்கிறது. இப்படத்தில் விக்ரமுடன் ஜோடியாக நடிக்க நடிகைகள் திரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஓப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

Advertisment

சாமி படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையடைத்திருந்த நிலையில், தற்போது சாமி-2 படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். தேவி ஸ்ரீபிரசாத் ஏற்கனவே ஹரி இயக்கிய சிங்கம் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

அந்த படத்தின் பாடல்கள் பெரிய அளவில் வெற்றிப் பெற்றிருந்தது. அதே போல் விக்ரம் நடித்த கந்தசாமி படத்திற்கும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் பாடல்களும் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது.

publive-image

இந்நிலையில், சாமி-2 திரைப்படத்தில் விக்ரம்+ ஹரி+ தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி மீண்டும் இணையவிருக்கிறது.  இயக்குநர் ஹரியின் படம் என்றாலே விறுவிறு திரைக்கதை என்பது அனைவரும் அறிந்ததே. இவ்விருவரும் இணையவிருக்கும் இந்த சாமி 2 படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment