எழுதிய அடிக்கப்பட்ட வரிகள் தான், ஆனா இவ்ளே ஹிட்டாகுனு நினைக்கல; போக்கிரி டாமி மம்மி பாட்டு வந்தது இப்படி தான்!

‘டாடி மம்மி வீட்டில் இல்ல’ பாடல் உருவானது குறித்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மனம் திறந்துள்ளார்.

‘டாடி மம்மி வீட்டில் இல்ல’ பாடல் உருவானது குறித்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மனம் திறந்துள்ளார்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
daddy mummy

டாடி மம்மி பாடல் உருவான விதம் குறித்து தேவி ஸ்ரீ பிரசாத் பேசியுள்ளார்

இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத் தன்மை கொண்டவர் தேவி ஸ்ரீ பிரசாத். இவரது இசை ரசிகர்களை எப்போதும் ஆட்டம் போட வைக்கும்.  தெலுங்கு படங்களுக்கு இசையமைத்து வந்த தேவி ஸ்ரீ பிரசாத் கடந்த 2003-ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘இனிது இனிது காதல் இனிது’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். பின்னர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தார்.

Advertisment

விஜய் நடிப்பில் வெளியான ‘போக்கிரி’, சூர்யா நடிப்பில் வெளியான ‘சிங்கம்’, தனுஷ் நடிப்பில் வெளியான ‘குட்டி’ போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூபர் ஹிட்டானது. இதனாலேயே பெரும்பாலான இயக்குநர்கள் தேவி ஸ்ரீ பிரசாத்தை தேர்ந்தெடுத்தனர்.

கடந்த 2007-ஆம் ஆண்டு இயக்குநர் பிரபு தேவா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘போக்கிரி’ திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‘டாடி மம்மி வீட்டில் இல்ல’ பாடல் இன்று கேட்டாலும் ரசிகர்களை நடனமாட வைக்கும். இந்த பாடல் எப்படி வந்தது என்பது குறித்து தேவி ஸ்ரீ பிரசாத் மனம் திறந்துள்ளார்.

அவர் பேசியதாவது,  “டாமி மம்மி வீட்டில் இல்ல பாடல் முதலில் தெலுங்கில் தான் பண்ணினேன். தெலுங்கில் இந்த பாடலுக்கு பிரபு தேவாதான் நடன கலைஞராக இருந்தார். அப்போது அவர் என்னிடம் சொன்னார் இந்த பாடலை வைத்துக் கொள் நாம் தமிழில் பண்ணலாம் என்று. விஜய் சார் உடன் ஒரு படம் செய்கிறோம். அந்த படத்தில் இந்த பாட்டை பயன்படுத்தலாம் என்றார்.

Advertisment
Advertisements

தமிழில் இந்த பாடலுக்கு பாடலாசிரியர் விவேகா வரிகள் எழுதினார். அவரிடம் நான் சொன்னேன் பாடலின் பொருள் எல்லாம் கேட்காதீர்கள். தமிழில் இந்த பாடல் எனக்கு வேண்டும் என்றேன். அப்பறம் ஒரு 20 பக்கம் விவேகா பல்லவி எழுதிக் கொண்டு வந்தார். அதை பார்த்துக் கொண்டிருந்த போது இடது பக்கத்தில் ஒரு வரியை எழுதி அடித்து வைத்திருந்தார். 

அந்த வரி தான் ‘டாமி மம்மி வீட்டில் இல்ல தடை போட யாரும் இல்ல’ என்பது. அந்த பாடல் தான் பெரிய ஹிட்டானது. படிக்கும் போது அந்த வரிகள் தெரியாமல் இருந்திருந்தால் அந்த பல்லவி வந்திருக்கிறது. தெலுங்கில் இருக்கும் பாடலை அப்படியே எழுதினால் அது டப் செய்து போன்று இருக்கும். அதனால் தான் நான் புதிய வரிகளை எழுத சொல்வேன்.” என்றார். தெலுங்கில் 70-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ள தேவி ஸ்ரீ பிரசாத் அம்மொழி படங்களுக்கு இசையமைப்பதில் படு பிசியாக இருக்கிறார்.

devi sri prasad Prabhu Deva

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: